இடுகைகள்

பாக்டீரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிளேக் நோய்!

படம்
  2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர்.  பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும்.  நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறி

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

கடல்நீருக்கு வாசனை எப்படி வருகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? 1. உலகிலுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை பெறுமா? கடல்நீர் உப்பாக இருப்பதை அறிந்து இப்படி பலரும்கேட்கிறார்கள். மழைபெய்து அதில் பாறைகள் கரைந்து உப்புத்தன்மை கடல்நீரில் கூடுகிறது. உப்பில் சோடியமும், குளோரினும் அதிகமாக இருக்கும். இந்த வேதிப்பொருட்களை  சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் காணலாம். பல நூற்றாண்டுகளாக கடலில் உப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலின் உப்புத்தன்மை சற்று கூடுவது உண்மை. ஆனால் ஏன் உயிரினங்கள் வாழ முடியாதபடி மாறவில்லை என யோசிக்கலாம். இப்படி அதிகரிக்கும் உப்பின் அளவு  அரை நூற்றாண்டுக்கு சில சதவீதமே கூடுகிறது. கடலில் இப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூரியனின் வெப்பம் கூடுவதால் கடலிலுள்ள நீர் வேகமாக ஆவியாகிறது. இதன் விளைவாக கடற்கரையில் உப்பு தேங்க வாய்ப்புள்ளது. நீரின் அளவு குறைவதால் உப்பு கடல்நீரால் கரைக்கப்படுவது குறைகிறது என இங்கிலாந்து சூழலியலாளர் ஜேம்ஸ் லவ் லாக் கூறியுள்ளார்.  2. கடல் நீருக்கு அதன் வாசனை எப்படி வருகிறது? கடல்நீருக்கு தன்னளவில் எந்த வாசனையும் கிடையாது. ஆனால் அதில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள், உயிரினங்கள

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புத

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை

வயிற்றுக்குள் நுண்ணுயிரிகள் எப்படி வருகின்றன?

படம்
              வயிற்றுக்குள் பிரளயம் ! ஒருவரின் வயிற்றுக்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . தினசரி வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் நடத்த நுண்ணுயிரிகள் உதவுகின்றன . மனித உடலில் முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்றால் வயிற்றில் மட்டும் முப்பத்து ஒன்பது டிரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . இதில் வைரஸ் , பாக்டீரியா , பூஞ்சை ஆகியவை உள்ளடங்கும் . மிகச்சிறியவை எ்ன்பதால் உடல் எடையில் பாதிதான் வரும் . ஆனால் இதன் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது . ஒவ்வொரு செல்களிலும் இருபது முதல் இருபத்தைந்தாயிரம் டிஎன்ஏக்கள் இதில் உள்ளன . நுண்ணுயிரிகளை இதோடு ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகம் . நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி வேகம் அதிகம் . மரபணுக்களை மாற்றிக்கொண்டு தனக்கு தேவையான செல்களில் புகுந்துகொண்டு செயல்படும் வேகம் இவற்றுக்கு அதிகம் . மனிதர்களின் உ

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா

இந்தியாவை மிரட்டும் தொழுநோய்!

படம்
இந்தியாவுக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. ஆம் வேதனையான பெருமைதான். உலகில் 58 சதவீத தொழுநோய் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். ஹான்சன்ஸ் என குறிப்பிடப்படும் இந்த நோய் மைக்ரோபாக்டீரியம் காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கண்கள், மூக்கு, கை, கால்கள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதை ஓராண்டு மல்ட் டிரக் முறையில் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியும்.  தோலில் ஏற்படும்போது உணர்ச்சியற்ற தன்மை உருவாகும். பின்னர் மெல்ல பல்வேறு உறுப்புகளுக்கு பரவி, அதன் செயல்பாடுகளை பாதிக்கும். கண்களில் தொற்றும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு தொழுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு முற்றிலும் போகவில்லை. இதனை எளிமையாக ஒழித்துவிட்டோம் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொன்னாலும் இதனை முற்றிலும் கணிக்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம். உடல் உறுப்புகளின் உணர்வு குறைவது, வலியற்ற குடல் புண், ஆகியவை ஏற்படும். முன்னமே மருத்துவர்களைக் கண்டு நோய்க்கு மருந்து சாப்பிடாதபோது, நோய் பாதிப்பு இன்னும் கூடுதலாகும். நோய்த்த

இயற்கையில் சிதையும் பிளாஸ்டிக்கு மதிப்பு கிடையாதா?

படம்
giphy உலக நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கி வருகின்றனர். காரணம் என்ன? வாங்க பார்ப்போம். பிளாஸ்டிக் என்பது என்ன? ஏராளமான கார்பன் மூலக்கூறுகள் இணைந்ததுதான். அதில் பாலிதீன், எத்திலீன் ஆகிய மூலக்கூறுகளின் இணைப்புதான் பிளாஸ்டிக் பொருட்களை உறுதியானதாகவும், வலுவாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. ஆனால் இந்த இணைப்பை பாக்டீரியா உண்ணும்படியான தன்மையில் மாற்றினால் என்னாகும்? அரிசியும் அதில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுக்கொன்று தொடர்பானது. அவற்றை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறும் அல்லவா? அதைத்தான் இங்கு கூறவருகிறோம். பாலிமர் எனும் பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் பெட்ரோல், டீசல் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான். பிளாஸ்டிக் பொருட்களின் வெற்றி அவை வெப்பம், ஈரப்பதம், வறட்சியான சூழ்நிலை ஆகியவற்றிலும் பொருட்களை கெடாமல் வைத்திருப்பதுதான். அதுவும் பிளாஸ்டிக் பிற பொருட்களை விட சல்லீசு ரேட்டில் கிடைக்கும். ஆனால் இப்போது பாக்டீரியா உண்ணும்படியான பொருட்களைக் கொண்டு  பிள

மைக்ரோவேவ் ஓவன் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது, அதிலிருந்து நாம் சற்று தள்ளி நிற்க வேண்டுமா? மூடநம்பிக்கையை இப்படியும் ஏற்படுத்தலாம் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மைக்ரோ ஓவனில் பயன்படும் அலைகள் உங்கள் உடலை பாதிக்காது. அப்படி பாதித்தால் உணவு என்னாகும்? மறைமுகமாக அது உணவுப்பொருட்களை சூடாக்கி உங்களுக்கு தேவையான உணவை உருவாக்குகிறது. ஓவன் பற்றிய கையாளும் குறிப்பை படித்தாலே இதுபோன்ற குழந்தைதனமான கேள்விகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள். நன்றி - பிபிசி 

பாக்டீரியாக்கள் பாதிப்பு ஏற்படுத்துமா?

படம்
மிஸ்டர் ரோனி நம் உடல் செல்களை விட பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளனவா? அவை அளவில் சிறியன. என்பதால், உடலின் செல்களோடு ஒப்பிட்டால் 50 சதவீதம் இருக்கும். வெய்ஸ்மன் இன்ஸ்டிடியூட் செய்த ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. இதில் கவலைப்பட ஏதுமில்லை. டெட்டால், லைஃப் பாய் விளம்பரங்கள் பார்த்து பதறாதீர்கள். நன்மை, தீமை செய்யும் பாக்டீரியாக்கள் என நம் உடலில் அனைத்து கலந்தே இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பாக்டீரியாக்கள், வைரஸ் நம் உடலைத் தாக்குகின்றன. உடல் தனி, பாக்டீரியாக்கள் தனி என்று நீங்கள் பிரித்துப்பார்க்கத் தேவையில்லை. அவை அனைத்தும் சேர்ந்துதான் மனித உடலாக உருவாகியிருக்கிறது. நன்றி - பிபிசி

உணவு வீணாவதை கதிரியக்க முறையில் தடுக்கலாம்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கதிரியக்க முறையில் உணவைப் பாதுகாக்க முடியுமா? இன்று உணவு பற்றாக்குறை எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அதேயளவு, உணவு வீண டித்தலும் நடக்கிறது. இங்கிலாந்தில் 20 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள் வீணாக குப்பையில் எறியப்படுகின்றன. இதைத் தடுக்க ஒரே வழி, கதிரியக்க முறையில் பாக்டீரியாக்களை கொல்வதுதான். இதற்காகவே 1970களில் ஜெர்மனியில் கதிரியக்க பரிசோதனை மையம் உருவானது. ஆனாலும் இம்முறை வெற்றிபெறவில்லை. ஏன் இன்றுவரையும் கூட. காரணம், கதிர்வீச்சில் நுண்ணுயிரி நீக்கம் செய்த உணவு உடலை பாதிக்கும் என மக்கள் தவறாக எண்ணுவதுதான் காரணம். எதிர்காலத்தில் இம்முறை அமலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் சரி. ஏனெனில் உணவுப் பொருட்கள் அவ்வளவு கிராக்கியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

உடல்நலத்திற்கு குடல் நலம் மிக முக்கியம் - மேகன் ரோசி

படம்
நேர்காணல் மேகன் ரோசி, ஊட்டச்சத்து வல்லுநர், கிங் கல்லூரி லண்டன் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும்போது முத்தமிட்டால் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் என்கிறீர்களே? நம்முடைய எச்சிலில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன.அவை முத்தமிடும்போது இணையரின் வாயிற்குள் செல்கிறது. இது அவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுகிறது. உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். எனவே தம்பதிகள் தம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் எப்படி வயிறு சார்ந்த உணவு வல்லுநர் ஆனீர்கள். என்னுடைய பாட்டி குடல் சார்ந்த புற்றுநோயால் காலமானார். தினசரி, சிகிச்சை பலனளிக்காமல் அவர் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டேன். பலரும் சிறுநீரகம், குடல் பாதிப்பு என இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை. எனவே நான் குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். இதன் விளைவாகவே  உணவு மீது ஆர்வம் கொண்ட நான், குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் குழு கூட பதற்றம் கொண்டு அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் குடல் சா

அழுக்கு நல்லதா? கெட்டதா?

படம்
மிஸ்டர் ரோனி படுசுத்தமாக சிலர் இருக்கிறார்கள். சிலர் சோப்புகளை பயன்படுத்தினால் அலர்ஜி என்கிறார்கள். எதுதான் சரி? பொதுவாக சுத்தம் என்பது டெட்டால் பாட்டிலை 25 ரூபாய்க்கு வாங்கி வந்து நீரில் கலந்து குளித்தால் வருவதல்ல. இயற்பாக உடலில் தோன்று இறந்த செல்களை அகற்ற குளித்தால் போதும். ஏன் சோப்பு போட்டு குளிக்கிறோம் என்றால் செல்களுடன் எண்ணெய் பிசுக்கையும் அகற்றவே. நமது தோலில் எவ்வளவுதான் அகற்றினாலும் போகவே போகாத ஆயிரம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் உண்டு. கடுமையான உடல் உழைப்பில் அல்லது வெயிலால் வெளிவரும் வியர்வைக்கு பொதுவாக மணம் கிடையாது. ஆனால் உடலிலுள்ள பாக்டீரியாக்கள் அதில் செய்யும் சில வேதிவினை வேலைகளால் அதில் வாசனை உருவாகிறது. இதனை நாற்றம் வீச்சம் நெடி என வைத்துக்கொள்ளுங்கள். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் ஹாலிவுட் பல சைக்கோ வில்லன்களல்ல. அவை, ஸ்டாபைலோகாக்கல், ஸ்ட்ரெப்டோகாக்கல் ஆகிய பாதிப்புகளையும் தடுக்கிறது. குளிப்பது தவறில்லை. தரமான டிஎஃப்எம் அதிகமுள்ள சோப்புகளை வாங்கி குளியுங்கள். அவ்வளவுதான். -பிபிசி

99.9 சதவீதம் கிருமிகளை அழிக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 99 சதவீத கிருமிகளை கொல்வோம் என கழிவறை கிருமிக்கொல்லி நிறுவனங்கள் கூறுகின்றன. அப்போது மீதியுள்ள 1 சதவீத கிருமிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? 99 சதவீத தூய்மை, பாக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானது. லேபில் செய்யும் ஆய்வு அடிப்படையில் 99 சதவீதம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வியாபாரத்திற்கான ஐடியா. மற்றபடி உங்கள் குடலை அல்லது தரையை 99.9 சதவீதம் துடைப்பதால் என்ன ஆகப்போகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி திடமாக இருந்தால், பாக்டீரியா, பூஞ்சைகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனவே, ஒரு சதவீதம் மட்டுமல்ல; 99.9 சதவீத கிருமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  செய்தி, படம் - பிபிசி

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்

பில்கேட்சிற்கு பிடித்த நூல்களில் சில....

படம்
ஐ கன்டைன் மல்டியூட்ஸ் எட் யங் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் எப்படி நுண்ணூட்டச்சத்து பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று எட் யங் எழுதியுள்ளார். பிஹைண்ட் தி பியூட்டிஃபுல் ஃபாரெவர் காத்தரின் பூ கழிவறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று நம்புவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. எனர்ஜி மித்ஸ் அண்ட் ரியாலிட்டிஸ் வேக்லாவ் ஸ்மில் அணுசக்தி என்பது கார்பன் வெளியீட்டைத் தடுக்கும் என ஸ்மில் நம்புகிறார். நம்முடைய இன்றைய அணுசக்தி முயற்சி எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கும் என்று கூறியிருக்கிறார். தி மோஸ்ட் பவர்புல் ஐடியா இன் தி வேர்ல்டு வில்லியம் ரோசன் உலகை மாற்றிய கண்டுபிடிப்பு நீராவி எஞ்சின். அதன் வரலாற்றை ரோசன் விவரித்திருக்கிறார்.