இந்தியாவை மிரட்டும் தொழுநோய்!


Image result for leprosy illustration

இந்தியாவுக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. ஆம் வேதனையான பெருமைதான். உலகில் 58 சதவீத தொழுநோய் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர்.

ஹான்சன்ஸ் என குறிப்பிடப்படும் இந்த நோய் மைக்ரோபாக்டீரியம் காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கண்கள், மூக்கு, கை, கால்கள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதை ஓராண்டு மல்ட் டிரக் முறையில் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியும். 

தோலில் ஏற்படும்போது உணர்ச்சியற்ற தன்மை உருவாகும். பின்னர் மெல்ல பல்வேறு உறுப்புகளுக்கு பரவி, அதன் செயல்பாடுகளை பாதிக்கும். கண்களில் தொற்றும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு தொழுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு முற்றிலும் போகவில்லை. இதனை எளிமையாக ஒழித்துவிட்டோம் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொன்னாலும் இதனை முற்றிலும் கணிக்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம்.

உடல் உறுப்புகளின் உணர்வு குறைவது, வலியற்ற குடல் புண், ஆகியவை ஏற்படும். முன்னமே மருத்துவர்களைக் கண்டு நோய்க்கு மருந்து சாப்பிடாதபோது, நோய் பாதிப்பு இன்னும் கூடுதலாகும். நோய்த்தொற்றுகள் ஏற்படத்தொடங்கும்.

நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்