கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் மாத்திரைகளின் பிரபலத்திற்கு என்ன காரணம்?
giphy |
இன்று சல்மான்கான் முதல் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை பல்வேறு மாத்திரைகளை தினசரி சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த மாத்திரைகளில் என்ன இருக்கிறது?
உணவுப் பொருட்களிலிருந்துதான் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகளை நாம் பெறவேண்டும். அப்படி இல்லாதபோது என்ன செய்வது? இதற்காகவே இந்த மாத்திரைகளை மருந்து கம்பெனிகள் தயாரித்து மக்களின் தலையில் கட்டுகின்றன. தவறு ஒன்றுமில்லை. உங்கள் உடலுக்கு இச்சத்துகள் போதாமை என்றால் நீங்கள் இம்மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
நம் உடலில் உள்ள எலும்புகளில் 99 சதவீதம் கால்சியம்தான். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவ ஜிங்க் உதவுகிறது. சூரிய ஒளியிலுள்ள விட்டமின் டியை உடலில் இழுக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும் கால்சியத்தை உடல் உட்கிரகிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் மூளையின் செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு சிறப்பாக நடைபெற அவசியம் தேவை. இப்பணிக்கான சத்துகள் உடலுக்கு கிடைக்காதபோது அதனை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும் அவசியம் உள்ளது.
மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட்டி காயங்களை ஆற்றுகிறது. மேலும் தூக்கம் சரியாக வரவும் உதவுகிறது.
நன்றி - ஹெல்த்லைன் வலைத்தளம்