எதிர்கால வில்லனை காப்பாற்றும் கூலி கொலைகாரன்! - லூப்பர்
500 × 500
லூப்பர் 2012
இயக்கம் ரியான் ஜான்சன்
ஒளிப்பதிவு ஸ்டீவ் யெடின்
இசை நாதன் ஜான்சன்
2044ஆம் ஆண்டு நடக்கும் கதை. நிகழ்காலம், எதிர்காலம்
என இரண்டு இடங்களில் பயணிக்கும் கதை. எதிர்காலத்தில் உலகிற்கு ஆபத்து ஏற்படுத்துவார்கள்
என தோன்றும் ஏன் சந்தேகப்பட்டாலே அவர்களைப் பிடித்து நிகழ்காலத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
அங்கு அவர்களை போட்டுத்தள்ளி அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்பவர்களுக்குப் பெயர் லூப்பர்.
எதிர்கால எதிரிகளைப் போட்டுத்தள்ளுவதில்
தங்கப்பதக்கம் வாங்கும் தகுதி கொண்டவன், ஜோ. அவனுக்கு எதிர்காலத்தில் இருந்து எதிரி
ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமல்ல, அவனேதான். எதிர்காலத்தில் வாழும் ஜோவின் மனைவியை
எதிரிகள் கொன்றுவிடுகின்றனர். அதற்கு காரணமான ஆட்களைத் தேடி கொல்லவே நிகழ்காலத்திற்கு
காலத்தில் பயணித்து வருகிறான். அப்போது அவனுக்கு லூப்பர்களை அழிக்கும் ரெயின் மேக்கர்
என்பவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் நிகழ்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறான்
அவனை இப்போதே போட்டுத்தள்ளிவிட்டால் அவன் எதிர்காலத்தில் தன் மனைவியைக் கொல்ல வாய்ப்பு
கிடைக்காது என பேராசைப்படுகிறான். இதனால்
நிகழ்கால ஜோவிற்கும், எதிர்கால
ஜோவிற்கும் முட்டிக்கொள்கிறது. இருவரும் ஒருவரையொருவர் கொல்ல முயல்கின்றனர். அதில்
ரெயின்மேக்கரை எதிர்கால ஜோ கொன்றானா, நிகழ்கால ஜோ அதனை தடுக்க முடிந்ததா என்பதுதான்
கதை.
ஆஹா
இரண்டு மூன்று பார்ட் படம்
எடுக்குமளவு தீனி உள்ள விஷயம்தான். அங்கு வாழும் மக்களில் சிலருக்கு டீகே எனும் சக்தி
உள்ளது. எக்ஸ்மேனில் ஜீன் எனும் டாக்டர் அம்மணிக்கு கோபம் வந்தால் அனைத்து பொருட்களும்
சூறைக்காற்றில் உருக்குலைந்து போகும் காட்சி நினைவிருக்கிறதே அந்த சக்திதான். எரோடிக்
ஆக்சன் என்பதால் நிர்வாணமாக பெண்கள் வருகிறார்கள். ரசிக்கலாம். அந்தளவே காட்சிகள் குறைவாக
உள்ளன. இறுதிக்காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பாகங்கள் எடுக்குமளவு
விஷயங்கள் உள்ளன. அடுத்த பாகமாக ரெயின்மேக்கரின் கதை வரலாம். அவனின் சக்தி என போகலாம்.
எமிலி பிளண்ட் உணர்ச்சிகரமான காட்சிகளில் பின்னுகிறார். எதிர்காலமா, நிகழ்காலமாக என
முடிவு செய்து நிகழ்கால ஜோ முடிவு எடுக்கும் கிளைமேக்ஸ் காட்சி நெகிழ்ச்சி.ப்ரூஸ் வில்லிஸூக்கு பெரிய வேலை கிடையாது.
ஐயையோ
எதிர்காலம் என்றாலும் பறக்கும்
வண்டிகள் சிலவற்றை காட்டுகிறார்கள், கணினி மானிட்டர், பிரிண்டர் ஆகியவற்றைக் காட்டுகிறார்கள்.
மற்றபடி கரும்புக்காடு. அதில் விரித்திருக்கும் படுதா. அதில் வந்துவிழும் எதிரிகளை
போட்டுத்தள்ளுகிறார்கள் என்றே கதை செல்கிறது. ஒரேமாதிரியான காட்சிகளாக படம் செல்கிறதோ
என நினைக்க வைக்கிறது.
கோமாளிமேடை டீம்