கையைக் கழுவினால் போதுமா? மிஸ்டர் ரோனி
giphy |
மிஸ்டர் ரோனி
கையைக் கழுவினால் போதுமா?
தும்மல் , இருமல் மூலம் தெறிக்கும் சளி, உமிழ்நீரில் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. மேற்சொன்ன சமாச்சாரங்களை நாம் அடக்க முடியாது. இதனால் இவை மக்கள் பெருக்கம் கொண்ட நாடுகளில் எளிதாக பரவும். மாஸ்க் அணிவதோடு, கைக்குட்டையையும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்துக்கொண்டால் அடுத்தவர்களுக்கு நோய் பரவாது. இவர்கள் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரையும் சரியானபடி குப்பைத்தொட்டியில் போடுவது அவசியம்.
சானிடைசரை விட சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவும்போது கிருமிகளை எளிதாக கைகளிலிருந்து அகற்ற முடியும். அவற்றை கொல்ல முடியாது. ஆனால் சானிடைசரில் 95 சதவீதம் ஆல்கஹால் இருந்தால் வைரஸ்களை எளிதாக அழிக்க முடியும். இல்லாதபட்சத்தில் நோய் நமக்கு வராது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருக்கலாம். வைரஸ்கள் உங்கள் கைகளிலேயே இருக்கும். அவ்வளவுதான்.
காரில் செல்கிறீர்கள். நெஞ்சு ஸ்டீயரிங்கில் முட்டி ரத்தம் ப்ளுக்கென்று வெளியே வந்து சாக கூடாது என்று சீட் பெல்ட் போடுகிறோம். இதன் பொருள், நாம் தப்பித்து விடுவோம் என்பதல்ல. கையைக் கழுவுவது என்பது குறைந்தபட்ச பாதுகாப்பு விஷயம்.
நன்றி - பிபிசி