கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!




Image result for lockdown
SCMP

கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை.


தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும்.

2016ஆம் ஆண்டு தொடங்கி பணமதிப்பு நீக்கம், அடுத்த வந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்களால் தடுமாறிய தொழில்துறை இப்போது முழுமையாக வீழ்த்தப்பட்டு உள்ளது. முன்னமே வேலை இல்லாத நிலையில் தற்போது புதிதாக வேலை இழப்பவர்களால் நேரும் பிரச்னையை அரசு சமாளிக்கவிருக்கிறது.

இந்தியா முழுக்க பெருநகரங்களில் 30 ஹோட்டல்களுக்கு மேல் நடத்தி வந்தவர் ஏ.டி. சிங். ஹோலிக்கான விடுமுறையில் அனைத்து ஹோட்டல்களும் நிறைந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டில் அனைத்தும் பேய் பங்களா போல காற்று வாங்குகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து ஹோட்டல்களையும் தற்போது மூடிவருகிறார் சிங். காரணம் கோவிட் 19 பீதிதான். வேறு என்ன? இந்த வைரஸ் பிரச்னை போல எப்போதும் நான் பார்த்ததில்லை . வருமான வாய்ப்புகளையே இந்த வைரஸ் அழித்துவிட்டது என வருத்தமாக பேசுகிறார். இவரிடம் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 1500க்கும் மேற்பட்டோர்.

இந்தியாவில் உள்ளவர்கள் 75 சதவீதம் பேர் சுயதொழில் முனைவோர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கை வைரஸ் பிரச்னையால் இன்று கடினமான இடத்தை நோக்கி நகர்ந்துவருகிறது.

இதில் அதிகம் அடிவாங்குவது சேவைத்துறைதான். அதில் ஒன்றான விமானத்துறை முதல் ஹோட்டல்கள் வரை சம்பளவெட்டு முதல் வேலை நீக்கம் வரை அறிவித்து தம்மைக் காத்துக்கொள்ள முயன்று வருகின்றன. இதில் தொழில்நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகையை கட்டுவதும் கடினம். அவை வாராக்கடனாக மாறினால், மக்களின் டெபாசிட் அதனை சரிகட்டுவதற்காக அரசால் எடுத்துக்கொள்ளப்படவும் வாய்ப்புள்ளது.

நன்றி - எகனாமிக் டைம்ஸ் மார்ச் 22, 2020 மாலினி கோயல்










பிரபலமான இடுகைகள்