முக்கியமான எழுத்தாளர்கள்!




you're awesome GIF by Kevin Ross
giphy




உலகில் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் அணிவரிசை இது.  21ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர்கள் இவர்கள்.

இசபெல் அலாண்டே 

1982ஆம் ஆண்டு இசபெல் அலாண்டே எழுதிய ஹவுஸ் ஆஃப் ஸ்பிரிட்ஸ் என்ற நாவல் இவரின் பெயரை உலகிற்குச் சொன்னது. மேஜிக்கல் ரியலிசம் என்ற வகையில் தாத்தாவுக்கு பேத்தி எழுதும் கடிதமாக நாவல் விரியும். இந்த வடிவத்தில் சிலியின் வரலாற்றை இந்த நூல் பேசியது.  இதற்கடுத்து 2002இல் வெளியான சிட்டி ஆஃப் பீஸ்ட் என்ற நாவல் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற நூலாகும்.

மார்க்கரேட் அட்வுட் 

கனடிய எழுத்தாளர் மார்க்கரேட் கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவர். இவரது புகழ்பெற்ற நூல்கள் "Oryx and Crake" (2003), "The Handmaid's Tale" (1986), and "The Blind Assassin" (2000). 

ஜொனாதன் ஃபிரான்சன்

குடும்ப உறவுகள், சமூக விமர்சனம் என்றே இவரது நாவல்கள், கட்டுரைகள், நியூயார்க்கரில் எழுதும் பத்தி எழுத்துகள் அமைந்துள்ளது. தி கரக்ஷன்ஸ் என்ற நாவல் 2001ஆம் ஆண்டு தேசிய புத்தக விருது வென்றது.

இயான் மெக்ஈவன்

இவர் எழுதிய முதல் நூலில் தி ஃபர்ஸ்ட் லவ், லாஸ்ட் ரைட்ஸ் என்ற மதிப்பிற்குரிய விருதை வென்றார். தி அடோன்மென்ட் என்ற நாவல், செய்த குற்றத்திற்காக மனம் வருந்துதலை மையமாக கொண்டது. இதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவரது கதைகள் உணர்ச்சிகரமான மனிதர்களின் வாழ்க்கை, அரசியல் பிறழ்வு நிலை ஆகியவற்றை மையமாக கொண்டது.


டேவிட் மிட்செல்

இவர் தன் கதைகளை மிகவும் பரிசோதனை முறையில் கூறுவது வழக்கம். தனது முதல் நாவலை ஒன்பது கதாபாத்திரங்கள் வழியாக வாசகர்களுக்கு சொல்லி பிரமிக்க வைத்தார். அந்த நாவலின் பெயர் கோஸ்ட்ரைட்டன் - 1999 இல் வெளியானது. க்ளவுட் அட்லஸ் என்ற நாவலில் ஆறு கதைகள் ஒருபுள்ளியில் சந்திக்கும் என உருவாக்கி அசத்தினார்.

நன்றி - thought&co