2020ஆம் ஆண்டின் அசத்தல் விளையாட்டுகள்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் பாகம் 2
சோனியின் தயாரிப்பு. அதற்கேற்ப அசரடிக்கும் சூழல்களும், சவால்களும் நாயகியான எல்லியைப் போலவே நம்மையும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் முன்பு இதற்கு முந்தைய பாகத்தை விளையாடிவிட்டு இதனை தொடுவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள மாற்றங்கள் தெரியும்.
சைபர் பங்க் 2077
எதிர்காலத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை டிஜிட்டல் இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் உங்கள் மனதில் ஓடினால் அதற்கு ஹாலிவுட்தான் காரணம். இந்த விளையாட்டு அல்ல. இந்த கொடுமையை செஞ்சவன சுட்டுப் பொசுக்கணும் சார் என பொங்கினால் நீங்கள் இந்த விளையாட்டை மதர் பிராமிசாக விளையாடலாம் ப்ரோ.
ஃபைனல் ஃபேன்டசி 7
இதுவும் சோனியின் கைவண்ணம்தான். பழைய கிளாசிக் விளையாட்டை ரீமேக்கியிருக்கிறார்கள். விளையாடிப் பார்த்துவிட்டு நீங்களே நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
அனிமல் கிராசிங்
நினென்டோவின் விளையாட்டு. 2020க்கான தன் திட்டங்களை கம்பெனி நிறுத்திவிட்டதாக சொல்லும் நிலையில் இந்த விளையாட்டின் பொசிஷன் என்னவென்று யாரிடம் போய்க் கேட்க?
ஹாலோ இன்ஃபினைட்
மைக்ரோசாஃப்டின் விளையாட்டு, முதல் பாகத்திலிருந்து வேகத்தை இதில் கொண்டு வந்திருக்கின்றனர்.