இடுகைகள்

காப்புரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காப்புரிமையால் நீக்கப்பட்ட பதிவு மீண்டும் பதிவேற்றம் - மங்கா காமிக்ஸ் விமர்சனத்திற்கு வந்த சோதனை!

படம்
    அல்டிமேட் சோல்ஜர் என்ற மங்கா காமிக்ஸை படித்துவிட்டு அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை கோமாளிமேடையில் பதிவிட்டிருந்தோம். விமர்சனம்தான். அதற்கே வி்ஷ் மீடியா நிறுவனத்தின் எரிக் க்ரீன் என்பவர் புகார் கொடுத்து காப்புரிமை விதி மீறல் என அறிவித்துவிட்டார். அவரது நிறுவனத்தின் காமிக்ஸை பலரும் பிரதி எடுத்து வெவ்வேறு தளங்களில் வெளியிடுகிறார்கள். அதை தடுப்பது அவர்களது நிறுவனத்தின் வேலை. இதில் காமிக்ஸை படித்துவிட்டு அது எங்கே கிடைக்கும் என இணைய லிங்கை பரிந்துரைத்தது காப்புரிமை புகாருக்கு உட்பட்டிருக்கிறது.   பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரில் பலரையும் மிரட்டி வருகிறார்கள். அனி என்ற செய்தி நிறுவனம் கூட யூட்யூபர்களை மிரட்டி சேனல்களை மூட போலியான புகார்களை அனுப்பி வருவதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.   கோமாளிமேடையின் பதிவு, இணைய லிங்க் இல்லாமல் மீண்டும் பதிவிடப்படுகிறது. தனிநபர்கள் பங்களிப்புடன் வெற்றி பெற்ற பிளாக்கர் நிறுவனம், இப்போது உலகிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிட்டது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற நி...

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகள் - காப்புரிமை இல்லாத இலவச மின்னூல் வெளியீடு!

படம்
        https://archive.org/details/20250218_20250218_0503  CC0 1.0 Universal இந்த நூல், சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பும் நோக்கத்தில் காப்புரிமை உரிமைகளை விலக்கிக்கொண்டு வெளியிடப்படுகிறது. நூலை வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை தரவிறக்கி வாசிக்கலாம்.  

அமெரிக்காவில் வழங்கப்பட்ட முதல் காப்புரிமை!

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுமே தொடர்புடையது என்றாலும் இலக்குகள் வேறுபட்டவை. இயற்கை உலகின் அடிப்படை அறிவைப் பெறுவதே அறிவியலின் இறுதி லட்சியம். அறிவியலை விளக்குவதற்காக ஆராய்ச்சி, கொள்கை, விதிகள், சமன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் வழியாக இயற்கை உலகை அனைத்து மக்களும் புரிந்துகொள்கிறார்கள். தூய அறிவியல் என அழைக்கும் இத்துறையில் படிக்கும் ஆட்களே குறைந்து வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது இயற்கை உலகில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கானது. இதன் அடிப்படை நோக்கம், மனித குலத்தை மேம்படுத்துவது, சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை மட்டுமே. இந்த தொழில்நுட்பத்திற்கு அறிவியலின் கொள்கை, விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. டபுள் பிளைண்ட் ஸ்டடி என்றால் என்ன? ஒரு ஆய்வில் பங்கேற்பவர்கள், அதை நடத்துபவர்கள் ஆகியோருக்கு ஆய்வு பற்றி முக்கியமான அம்சங்கள் தெரியாமல் இருப்பது எனலாம். இந்த வகையில், ஆய்வு பாகுபாடு இன்றி, போலித்தனமாக இல்லாமல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அறிவியல் கொள்கை, வித...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - மொழிபெயர்ப்பில் இணையத்தின் தாக்கம், பல்வேறு பிரச்னைகள் பற்றி கவனம் கொள்ளவேண்டும்!

படம்
      சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பு நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம், தனது நூல்களை பல்வேறு உலக மொழிகளில் பதிப்பித்து வருகிறது. பழைய இந்தியாவில் முதல் பிரதமரான நேருவால் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமி நிறுவனம், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்து பேரினவாத அரசியலில் சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சிக்கி, தங்களது ஆக்கப்பூர்வத் திறனை எப்போதோ இழந்துவிட்டன. இணையத்தில் ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பிட்ட மொழியைக் கற்று அதன் வழியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அல்லது உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறைந்துவிட்டது. இதுபோல மொழிபெயர்ப்பை செய்வதை குறிப்பிட்ட மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியை வளர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட மாநில அரசுகள்தான களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தெற்காசியாவில் சால்ட் என்ற மொழிபெயர்ப்பு திட்டம் உருவானது. திட்டமாக இப்படி உருவானாலும் அமைப்பு ரீதியாக ஐஎல்டி கொரியா அல்லது கோத்தே இன்ஸ்டிடியூட...

அரசின் ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம்

படம்
        ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம் கொரோனா வந்த இரு ஆண்டுகளில் பெரிய லாபம் பார்த்தது பாரத் பயோடெக் என்ற இந்திய மருந்து நிறுவனம், மக்களின் உயிர்பயத்தை பயன்படுத்தி நிறைய லாபம் சம்பாதித்தது. இதற்கு ஆளும் வலதுசாரி மதவாத கட்சியின் ஆசிர்வாதம் இருந்தது. உள்நாட்டில் அடித்துப் பிடுங்கி காசு சம்பாதித்தாலும் தடுப்பூசியை உலகளவிலான மருத்துவ அமைப்புகள், அங்கீகரிக்க மறுத்துவிட்டன. ஆனால், இந்திய அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு பத்ம பூஷன் விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியது. உண்மையில், நாட்டின் மதிப்பிற்குரிய விருது, அரசியல் காரணங்களுக்காக தனது மதிப்பை இழந்து டிவி சேனல்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் தாம்பூலப்பை போல மாறியிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், நேஷனல் இன்ஸ்டிடியூட் வைரலாஜி(என்ஐவி) என்ற எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அரசு நிறுவனம் ஒப்பந்தம்போட்டு, இணைந்து கோவாக்சினை உருவாக்கின. ஆனால் மருந்து விற்பனைக்கு வந்தபோது என்ஐவிக்கான எந்த அங்கீகாரமோ, அடிக்குறிப்போ கூட இல்லை. வலதுசாரி மதவாத அரசுக்கு வாழ்நாள...

கழிவுப்பொருட்களிலிருந்து சிஎன்சி இயந்திரம்!

படம்
  மாதிரிப் படம்  கழிவுப்பொருட்களிலிருந்து இயந்திரம்! வேலூர் விஐடியில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவர், கவின்பிரபு சுந்தர ராஜ். பூர்வீகம், பொள்ளாச்சி. கவின்பிரபு, வெறும்  1,500 ரூபாயில் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிஎன்சி இயந்திரம் உற்பத்திதுறையில் (பிளாஸ்டிக், உலோகம், மரம்) பயன்படுகிறது.  மனிதர்கள் உதவியின்றி கணினி கோடிங் மூலம் இயந்திரத்தை எளிதாக இயக்கலாம். எலக்ட்ரானிக் கடைகளில் கழிவாக கிடைக்கும் போல்ட், நட்டுகள், டிவிடி ரைட்டர், பிவிசி குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் கவின்பிரபு.  தான் உருவாக்கிய சிஎன்சி புரோடோடைப் இயந்திரத்திற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ”கடந்த ஆண்டு எனது நண்பரின் பிறந்த நாளுக்காக மினியேச்சர் ஓவியம் ஒன்றை உருவாக்க நினைத்தேன். அப்படித்தான் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கினேன்” என்றார் கவின்பிரபு.  https://www.newindianexpress.com/good-news/2022/may/22/tn-farmers-son-puts-together-scrap-comes-up-with-ultra-cheap-compact-cnc-machine-2456516.html https://www....

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிச...

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன....

அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

படம்
                தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார் . முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை . தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது , வல்லுநர்களைக் கொண்டது , கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது , குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது , மேம்படுத்துவது , இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது . பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு . முழுநேர ஆராய்ச்சியாளர்கள் . தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு , ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும் . தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன . உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது . இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்...

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! - மின்சாரம், டின் உணவுகள், வயர்லெஸ் தகவல்தொடர்பு, பிளாஸ்டிக்

படம்
                    மகத்தான கண்டுபிடிப்புகள் மின்சாரம் 1752 இதனை கண்டுபிடிப்பு என்று கூறமுடியாது . மின்னல் , இடியைப் பார்த்து அதிலிருந்து மின்சாரம் வருவது பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள் . எனவே இதனை கண்டறிந்தனர் என்று கூறலாம் . கி . மு 600 ஆண்டிலே இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது வந்த து . ஆனாலும் கூட பெஞ்சமின் பிராங்களின் கண்டுபிடிக்கும் வரை வெளியில் சொல்லும் முன்னேற்றங்கள் மின்சாரத்தில் ஏற்படவில்லை . இதனைப் பயன்படுத்தி மைக்கேல் பாரடே எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்தார் . மின் அமைப்புகளை முதலிலேயே சிறப்பாக அமைத்துவிட்டதால் தாமஸ் ஆல்வா எடிசன் க ண்டுபிடித்த பல்பு எளிதாக விற்பனையானது இதன் அர்த்தம் ,, முதலில் வணிக மார்க்கெட்டை கண்டுபிடித்தபிறகு பொருளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் . இதனால்தான் கண்டுபிடிப்புகளை விட மார்க்கெட்டிங்கிற்கு கவனம் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் ஜிஇ எனும் நிறுவனத்தை உருவாக்க முடிந்தது . டின் உணவுகள் வெளிநாடுகளில் டின் உணவு இல்லையென்றால் மக்கள் வாழ்வதே கட...

பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! ஹேப்பி பர்த்டே டூ யூ! பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது. அதுபற்றிய  தகவல்கள்: 1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது. 1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்...