இடுகைகள்

நோபல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வன்முறையை உலகிற்கு சொன்ன பெண்! - நாடியா முராத்

படம்
  நாடியா முராத்  நாடியா முராத் எழுதிய நூல் நாடியா முராத் மனித உரிமை செயல்பாட்டாளர்  யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். நாடியா. இவரது இனக்குழு சிரியா, இராக், ஈரான் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு கோச்சோ, ஈராக்கில் பிறந்தவர் இவர்.  விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நாடியாவினுடையது. இவர் தனது கிராமத்தில் வாழ்ந்து வந்தபோது, ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களது கிராமத்தை தாக்கி அழித்தனர். 600 ஆண்களை கொன்றனர். ஐ.நா தீவிரவாதிகள் அமைப்பு என ஐஎஸ்ஐஎஸ்ஸை அறிவித்துள்ளது. யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்த நிறைய பெண்களை தீவிரவாதிகள் பிடித்து சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்திரவதை செய்தனர். ஒருநாள் இருநாளல்ல மூன்று மாதங்கள் அந்த நரகத்தை நாடியா பிறருடன் சேர்ந்து அனுபவித்தார்.  ஒருநாள் அவரை பிடித்து அடைத்து வைத்திருந்த அறை திறந்து கிடக்க, அங்கிருந்து தப்பினார். அகதிகள் முகாம் உள்ள இடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள குடும்பம் ஒன்று, நாடியாவிற்கு உதவிகளை செய்தனர். பின்னாளில் அவர் ஜெர்மனிக்கு செல்ல அங்கேயே உதவிகள் கிடைத்தது.  யாசிடி இனக்குழு பெண்களின் பாதிப்பிற்கு நாடியா முராத் முக்கியமான அடையாளம

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற

இந்தியர்களுக்கு வர்க்க மனப்பான்மை அதிகம்! - அபிஜித் - எஸ்தர் டஃப்லோ

படம்
நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களது ஆராய்ச்சி இதனால் சிறப்பு பெறுமா? எங்களது திட்டமே ஆர்சிடி முறையை அனைவரும் செய்யவேண்டும் என்பதுதான். நாங்கள் இந்த விருது பெற்றுள்ளதின் மூலம் எங்கள் குழுவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பெரும் ஊக்கம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இது சிறந்த விஷயங்களைச் செய்யும் என நம்புகிறோம். இந்திய அரசு உங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? நாங்கள் கட்சி சார்ந்து எங்கள் ஆய்வுகளை செய்வதில்லை. நாங்கள் குஜராத் மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியோருடனும் ஆய்வுகளைச்செய்து வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு என்று நாங்கள் தனியாக எதையும் கேட்கவில்லை. மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான விஷயம் ஏதேனும் ஈர்த்தால் நாங்கள் ஆய்வுகளைச் செய்கிறோம். இதில் அரசுகளிடம் நாங்கள் வேண்டுவது ஆர்வத்தையும் நிறைய பொறுமையை மட்டுமே. எஸ்தர் - எங்களுடைய வறுமை ஒழிப்பு செயல்பாட்டு மையத்தின் ஊழியர்கள் பிரமாதமாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த பரிசு அவர்களுக்கும் ஊக்கம் தருவதோடு அவர்களின் ப