இடுகைகள்

அண்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அ