இடுகைகள்

யுனிலீவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

படம்
  எழுத்தாளர் அமீர் சாகுல் கொடைக்கானலில் கசியும் பாதரசம் ஆங்கிலோ டச்சு   நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குள

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப

சமூக வலைத்தள விளம்பர நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமாக உயர்த்திய பூஜா, ஜவ்ஹாரி, கிளிட்ச் நிறுவனம்

படம்
      பூஜா ஜவ்ஹாரி,  கிளிட்ச்   பூஜா ஜவ்ஹாரி இயக்குநர், கிளிட்ச் நிறுவனம். இந்துஸ்தான் யுனிலீவரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், தற்போது கிளிட்ச் என்ற விளம்பர நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். பூஜா, ஒரு நிறுவனத்தின் கலாசாரம், அவர்களின் தேவை ஆகியவற்றை உணர்ந்து அவர்களுக்கான விளம்பரங்களை வடிவமைத்து தருகிறார். இதன் காரணமாக அவரது நிறுவனமும், அவரது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளிட்ச் என்ற நிறுவனம் சமூக வலைத்தள நிறுவனமாக உருவாகி இன்று ஏராளமான நிறுவனங்களுக்கு உதவி தன்னை எட்டே ஆண்டுகளில் சிறப்பாக வளர்த்துக்கொண்டுள்ளது. டபிள்யூபிபி என்ற நிறுவனம் மூலம் விலைக்கு வாங்கப்பட்டு தனிப்பட்ட நிறுவனமாக இயங்கி வருகிறது கிளிட்ச்  இந்த நிறுவனத்தின் வியாபாரம் இன்று உலகளவில் வளர்ந்துள்ளது. அதேசமயம், அலுவலகத்தில் ஆண், பெண் பணியாளர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.  

சமூக மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்த சாமர்த்தியசாலி! - பிரபா நரசிம்மன்

படம்
                                       பிரபா நரசிம்மன், யுனிலீவர் சவுத் ஆசியா     இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள், பிரபா நரசிம்மன் யுனிலீவர் சவுத் ஆசியா , வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பிரிவுத் தலைவர் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு பயன்பாடு, அழகுசாதனப் பொருட்கள் வி்ற்பதில் பிரபாவுக்கு 23 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இவர் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் யுனிலீவரின் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் விற்பனை விநியோகம் ஆகியவற்றைக் கவனிக்கிறார். 2016-19 வரையிலான காலகட்டத்தில் இவரின் தலைமையில் யுனிலீவர் நிறுவனம், இரட்டை இலக்க வளர்ச்சிபைப் பெற்றுள்ளது. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமைக்கூட குளோ அண்ட் லவ்லி என பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இனிமேல்தான் இந்த பிராண்டின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று தெரியும்.