நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

 

 

 

 https://akm-img-a-in.tosshub.com/sites/btmt/images/stories/geetu-verma-660_090715010331.jpg

 

 

 

சாதனைப் பெண்கள்


கீது வர்மா


ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர், இந்துஸ்தான் யுனிலீவர்


கீது வர்மா, நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார்.


உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள், உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது. நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம், நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி, ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார்.


2018ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா. வெஜிடேரியன் பட்சர், கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார்.


கீதா கோபிநாத்


உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர்


ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா. தனது பணியில் சேர்வதற்கு முன்னரே ரகுராம் ராஜனுடன் இணைந்து இந்தியாவிற்கான பொருளாதார கொள்கைகளை பிற 11 பொருளாதாரவியலாளர்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறார்.


உலக அளவிலான நிதி மற்றும் மேக்ரோஎகனாமிக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். மைசூரில் பிறந்தவர், லேடி ஶ்ரீராம் கல்லூரியில் படித்தவர். வாஷிங்டன் பல்கலைக்கழமம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பின்னாளில் ஹார்வர்டில் ஆசிரியரானார். பொதுமுடக்க காலத்தில் அனைத்து நாடுகளிலும் ஐஎம்எப் குறிப்பிட்ட கொள்கைகளை வகுத்து செயல்படவிருக்கிறது. இதில் கீதா முக்கியமான பங்களிப்பை அளிப்பார் என உறுதியாக நம்பலாம்.


மாதுலிகா குகாதாகுர்தா


வான் இயற்பியலாளர் நாசா


1998ஆம் ஆண்டு முதல் மாதுவின் மனதைக் குடையும் கேள்வி, மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதுதான். அதைத்தான் தனது ஆராய்ச்சி வழியாக தேடிக்கொண்டிருக்கிறார்.


மூத்த ஆலோசகராக பணியாற்றியவர் நாசா கோடார்ட் விமான மையம், நாசா தலைமையகம் இரண்டிலும் பங்காற்றி பணியாற்றியுள்ளார். கொள்கைகள், எதிர்கால திட்டங்கள், அதற்கான சூழல் என சமாளித்து வேலை செய்துள்ளார். பெரும்பாலான காலம் நட்சத்திரங்களைப் பற்றி ஆய்வு செய்வதில் நேரத்தை செலவு செய்துள்ளார். லிவ்விங் வித் எ ஸ்டார் எனும் திட்டத்தில் பணியாற்றியுள்ளார். அறிவியலில் செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் ஆகியவற்றை விண்வெளித்திட்டங்களில் உருவாக்கியுள்ளார். ஒரு நொடிக்கு இரண்டு ஜிகாபைட் டேட்டாவை நாசா செலவு செய்து வருகிறது. எனவே, இதுபற்றிய ஆராய்ச்சியை மனிதர்களால் செய்யமுடியாது. செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ச்சியை வேகமாகவும் துல்லியமாகவும் செய்யலாம்.


 

கிருத்திகா ரெட்டி

 https://qrius.com/wp-content/uploads/2018/12/Dt5JyVYWkAU7Vi7-500x281.jpg


முதலீட்டு கூட்டாளி, சாப்ட்பேங்க் நிறுவனம்


சாப்ட்பேங்கில் உள்ள முதலீடுகளைப் பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் காலூன்றிய காலத்தில் அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியர் கிருத்திகா. இங்கு தகவல் மையம் அமைக்கப்படவும் காரணமாக இருந்தார். தொழில்களி்ல தொழில்நுட்பத்தை உள்ளே கொண்டு வருவது எனக்கு பிடித்தமானது. அதன்மூலம் அதனை நவீனமாக்க முடியும் என்று கூறுவதோடு அதனை உறுதியாக நம்புகிறார்.


அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இரண்டு ஆண்டுகளாக சாப்ட்பேங்க் முதலீட்டு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். கணினி அறிவியலில் முதுகலை முடித்தவர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகம் கற்றிருக்கிறார்.


ரேவதி அதுவைத்தி


இயக்குநர், பிளெக்ஸ்


1980ஆம் ஆண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பை ரேவதி படித்தபோது அவர்தான் வகுப்பில் ஒரே பெண் மாணவி. அந்தளவு பெண்களிடையே கல்வி வாய்ப்புகளும் இல்லை. அப்போதிலிருந்து இப்போது வரை அவர் ஆண்களில் உலகில் பெண் என்பதற்கான சலுகைகளைப் பெறாமல் திறமைகளை முன்வைத்து போராடி வருகிறார். இப்படித்தான் பிளெக்ஸ் நிறுவனத்தின் பொறுப்பும் அவருக்கு கிடைத்த்து. ‘’ரேவதிக்கு பொறியியல் சார்ந்த துறையில் நல்ல அனுபவமும் திறமையும் உள்ளது. எனவேதான் அவருக்கு பிளெக்ஸ் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை வழங்கினோம்’’ என்றார் நிறுவனத்தின் போர்டு தலைவர் கேபெல்லாஸ். இதற்கு முன்னர் 2004இல், ஈட்டன் எனும் அமெரிக்க நிறுவனத்தில் மேற்பார்வையாளராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.


பிபிசி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்