உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

 

 

 

 Man, Heartache, Chest Pain, Hurt, Pain, Heart Attack

 

 

 

 

 

உடலே நலமா?


உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம். அதோடு சுவாசிக்க காற்று முக்கியம். இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது. இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன், மினரல்கள் உள்ளன. இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும்.


உடலின் நரம்புகள், ஆர்டெரி, காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி.மீ. என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள். இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது. இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது. இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு, உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது. செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு, கார்பன் டை ஆக்சைடையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது. உடல் வெப்பநிலையை பராமரிப்பதோடு, வெள்ளை அணுக்களை உடலெங்கும் எடுத்து சென்று, நோய்த்தொற்றை எதிர்க்கிறது.


இதனை ரத்தத்தை பம்ப் செய்யும் எந்திரமாக கருதினால் அதனை திறமை வாய்ந்த எந்திரம். எனது முப்பது ஆண்டுகள் ஆராய்ச்சியில் இந்தளவு திறன் வாய்ந்த அமைப்பை பார்க்கவில்லை. உறுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு ரத்தத்தை அனுப்பி வைக்கிறது என்று கூறலாம் என்றார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பார்பரா காசடெய்.


ஆக்சிஜனைக் கொண்ட ரத்தத்தை இதயம் பிற உறுப்புகளுக்கு அனுப்பி வைக்கும் அதேநேரம், ஆக்சிஜன் இல்லாத ரத்தம் நரம்புகள் வழியாக இதயத்திற்கு கொண்டு வரப்பட்டு கொண்டே இருக்கின்றன. சர்குலேட்டர் அமைப்பு கார்டியோவஸ்குலர் அமைப்பு என்று அழைக்கலாம். சிறு ரத்த நாளங்களை கேபிலரிஸ் என்று கூறலாம். இதுவே உடலிலுள்ள அனைத்து செல்களுக்குமான உணவை வழங்குகிறது. இதயத்தில் இப்படி இரண்டு சர்க்குலர் அமைப்புகள் உள்ளன. ஒன்று, நுரையீரலுக்கு ரத்தத்தை அனுப்பி ரத்தத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி, ஆக்சிஜனை நிரப்பிவிடுகிறது. இன்னொரு சர்க்குலர் அமைப்பு இந்த ரத்தத்தை உடலெங்கும் கொண்டு செல்கிறது.


ரத்தம் வயிற்றிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பெற்றுக்கொண்டு உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது. சிறுநீரகம், கல்லீரல் வழியாக மூளைக்கு ரத்தம் செல்கிறது. உடலில் மூளையில்தான் அதிகளவு ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. உடல் உறுப்புகளுக்கு்ம், மூளைக்கும் சரியான அளவில் ரத்தம் சென்றுவர ரத்த அழுத்தம் அவசியமானது. இதில் பாதிப்பு ஏற்படும்போது, உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.


ஒருவர் நிற்கிறாரா, ஓடுகிறாரா என்பதைப் பொறுத்து இதயத்துடிப்பு மாற்றம் பெறுகிறது. இதன்படி எந்த உறுப்புகளுக்கு அதிக ரத்தம் தேவையோ அங்கு ரத்தம் அனுப்பப்படுகிறது. நாயைப் பார்த்து பயந்து ஓடும்போது, பிற உறுப்புகளை விட கால்களுக்கு அதிக ரத்தம் செல்கிறது. இதனால் பிற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தவோட்டம் குறைகிறது. உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை சிஸ்டோலிக், டயஸ்டோலிக் என இரண்டுவிதமாக கணிக்கின்றனர். இதில் அதிக ரத்த அழுத்தம் என்பது 140/90 எம்எம்ஹெச்ஜியாக மதிப்பிடப்பட்டுள்ளு. 90/60 என்பது சரியான அளவு ஆகும் என இங்கிலாந்தின் என்ஹெச் எஸ் அமைப்பு கூறியுள்ளது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ஆர்டரி சுவர்கள் தடிக்கத் தொடங்குகின்றனர். இதைக் கட்டுப்படுத்தாதபோது, ஆர்டரி தசைகள் பெரிதாகின்றன. இறுதியில் ரத்த அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. மாரடைப்பு, வாதம் ஆகியவை ஏற்படலாம். இதயம் என்பது உள்ளங்கை அளவு கொண்ட தசையைக் கொண்டது. இதில் நானகு அறைகள் உள்ளன. ஒருவர் கருவுற்று 22 நாட்கள் ஆனவுடன் இதயம் உருவாகி துடிக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குப்பிறகு வாழ்நாள் முழுக்க இதயம் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.


 

கருத்துகள்