தடைகளை சமாளித்து வென்ற கார்ப்பரேட் நிறுவன பெண்கள்! - நந்தினி பிரமள், நுவ்ருதி ராய், ரிச்சா அரோரா, சமீனா ஹமீத்
நந்தினி பிரமள்
எக்சிகியூட்டிவ் டைரக்டர், பிரமள் நிறுவனம்
கடந்த ஆண்டு மட்டு்ம் ஆறு பிராண்டுகள் மூலம் 418 கோடி ரூபாய் வருமானத்தை பிரமள் நிறுவனம் சாதித்துள்ளது. இதற்கு ந ந்தினியின் ஐடியாக்களே முக்கியமான காரணம். இந்த நிறுவனத்தில் தற்போது பத்தாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். மருந்துகள் தயாரிப்பு விற்பனையில் பிரமள் நிறுவனம் சாதித்து வருகிறது. சாரிடான், ஐபில் ஆகிய மருந்து பிராண்டுகள் இந்த நிறுவனத்துடையதுதான். அபோட், கார்லைட் எனும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நந்தினி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.
பிரமள் நிறுவனததின் மனிதவளத்துறை மற்றும் ஐடி செயல்பாடுகளை நந்தினி கவனிக்கிறார். இவரை அஜய் பிரமள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார். இவர் வந்தபிறகு நிறுவனம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறது. தற்போது குழந்தைகளுக்கான பிராண்டு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அடுத்து மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றையும் தயாரித்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர்.
நுவ்ருதி ராய்
இந்தியத் தலைவர், இன்டெல்
நுவருதியை பல்வேறு சவால்களை எடுப்பவர் என்றே டெக் வட்டாரங்களில் கூறுகிறார்கள். இன்டெல் நிறுவனம் அமெரிக்காவைச் தாண்டி ஆராய்ச்சி வசதிக்காக ஆய்வகங்களை இந்தியாவில் மட்டும்தான் அமைத்துள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆறு பில்லியன் டாலர்களை இன்டெல் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், 5 ஜி என பல்வேறு ஆரா்ய்ச்சிகளை இன்டெல் செய்து வருகிறது. கூடவே அரசின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளோடும் இணைந்து செயல்படுகிறது.
இந்தியாவிலுள்ள எழுபது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குகிறது. சந்தையில் புதிதாக நாற்பது ்பொருட்களை வழங்கியுள்ளது. கொரோனாவில் வைரஸ் தொற்று பற்றி அறியவும் தொழில்நுட்ப உதவிகளை அரசுக்கு வழங்கியுள்ளது. நுவ்ருதியின் தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ரிச்சா அரோரா
டாடா மக்கள் பயன்பாட்டு பொருட்கள்
ரிச்சா, டாடா கெமிக்கல்சையும், டாடா குளோபல் பேவரேஜஸ் நிறுவனத்தையும் ஒன்றாக இணைத்து டாடா கன்ஸ்யூமர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார். இந்த புதிய நிறுவனத்தின் மூலம் உப்பு, பருப்பு, நொறுக்குத்தீனி வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். பிரிட்டானியா, விப்ரோ, மெக்கெய்ன் ஆகிய நிறுவனங்களில் ஆலோசகராகவும் விற்பனைத் துறையிலும் பணியாற்றி வருகிறார். வேலை முடிந்தால் புகைப்படம் எடுக்க கிளம்பிவிடும் பழக்கம் கொண்டவர் ரிச்சா. இளைஞர்களுக்கு அதிமம் பயணிக்கவேண்டும் என அறிவுரை சொல்பவர், 2014 இல் டாடா கெமிக்கல் துறையில் வேலைக்கு சேர்ந்தார்.
சமினா ஹமீத்
துணைத்தலைவர், சிப்லா
முஸ்லீம்களை விரோதமாக பாவித்து அரசியல் செய்யும் நிலத்தில் மருந்துகளை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குகிற மூன்றாவது தலைமுறைப் பெண் இவர். இவரது குடும்பமே உலகளவில் சிப்லா நிறுவனத்தின் மூலம் எய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு மருந்துகளை தயாரித்து வழங்குகின்றனர். இவர்கள் குறைந்த கட்டணத்திற்கு ரெட்ரோவைரல் தெரபியை வழங்குகின்றனர். இப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலும் மருந்துகளை தயாரிப்பதிலும் முனைப்பாக உள்ளனர். நோயாளிகளே முக்கியம், அவர்களின் வாழ்க்கைக்கே முதலிடம் எனும் கொள்கையைக் கொண்ட நிறுவனம் இது.
பிசினஸ் டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக