இந்திய பன்மைத்துவத்தை நொறுக்கும் வெறுப்புவாதம்! - குஜராத் இந்துத்துவம் மோடி - மருதன்
குஜராத் இந்துத்துவம் மோடி
மருதன்
கிழக்கு
மோடி, குஜராத்தில் பெற்ற வளர்ச்சி எப்படிப்பட்டது, அது உண்மையானதா என்பதை இந்த நூல் மூலம் அறியலாம். இந்த நூலை ஆசிரியர் குஜராத்திற்கு சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு எழுதியிருக்கிறார். கூடவே ஏராளமான தகவல்களையும் கூறியுள்ளார்.
கூடுதலாக நூலை எழுத தான் படித்த நூல்களிலிருந்து முக்கியமான கருத்துகளையும் முன்வைத்து எப்படி பிரிவினை மூலம் பாஜக குஜராத்தை தனது கைபிடிக்குள் கொண்டு வந்தது என்பதையும் விளக்கியுள்ளார்.
உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது என்பதை விட அப்படி பிறரை நம்ப வைக்க மோடி மெனக்கெடுகிறார் என்ற வார்த்தை முக்கியமானது. ஏறத்தாழ இந்த வரியைப் படித்தபிறகு மோடி ஊடகங்களில் தன்னை எப்படி காண்பித்துக்கொள்கிறார். தன்னுடைய எதிரிகளை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதை ஹரன் பாண்டே எடுத்துக்காட்டு மூலம் அதிர்ச்சியுறும்படி காட்டியுள்ளார்.
உயர்சாதி இந்துக்களுக்கான இடமாக குஜராத் மாறியுள்ளதோடு, சிறுபான்மையினரை எப்படி அடிப்படை வசதிகள் கூட கிடைக்காதபடி அச்சுறுத்தி வைத்துள்ளார் என்பது களப்பணி வாயிலாக வாசகர்கள் எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. மக்கள் வாழ்க்கை தினசரி நெருக்கடியை சந்தித்து வரும்போது எப்படி பணக்கார ர்களின் எணணிக்கை கூடிக்கொண்டே போகிறது, பொருளாதார வளர்ச்சியும் கூடுகிறதே என்ற குரலுக்கு பதில் சொல்லும் பகுதி அருமை. பொருளாதார வளர்ச்சி என்று பார்க்கும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் இருளில் கிடப்பது பலருக்கும் புரியாததாக உள்ளது.
கலவரம் பற்றி பலரும் பேசத் தயங்குவதும், எப்படி இப்படி ஒரு மௌனத்தை ஊடகங்கள் மூலமும், தொண்டர்க்ள் மூலமும் பாஜக கட்டமைத்தது என்பதைப் பற்றிய பகுதிகள் படிக்கும்போது திகிலூட்டுகின்றன.
இந்துத்துவம் பற்றிய தெளிவை நூல் தெளிவாகவே இந்து அமைப்புகளின் நிறுவனர்களின் கூற்று வழியாக வெளிக்காட்டி விடுகிறது. அதைப் படித்துவிட்டு குஜராத் நிகழ்வுகளையும், அன்னாள் முதல்வரான மோடியின் பேச்சுகளையும் பார்க்கும்போது எப்படி சம்பவங்களை கட்டமைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இன்று பிரதமராக மோடி ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலை பற்றிய கவலையை கலவர காலத்திலேயே பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் விளம்பரம், பெரு நிறுவனங்களின் பணம் ஆகியவை வெல்ல மோடி இந்தியாவின் வரலாற்றில் களங்கமாக இடம்பிடித்திருக்கிறார். ஒருவகையில் இது மாறிவரும் காலத்தையும், மக்களின் மனமாற்றத்தையும் பிரதிபலிப்பதாக கருதலாம்.
ஒருவகையில் கலவர அரசியல் எப்படி தொடங்கியது என்பதைப் பற்றி அறிய வேண்டுமென்றாலும் இந்த நூல் முக்கியமானதாவே இருக்கும்.
களங்கத்தின் குறிப்பு
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக