மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி
sample/pixabay |
மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள்
சதீஸ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு
ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது, அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார்.
மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன, அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன, அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார். ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம். பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ, இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள். அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்.
நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான். நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உள்ளது.
பிராண்டின் செக்மெண்ட், டார்க்கெட், பொசிஷனிங் பற்றிய விளக்கங்கள் எளிமையாக உள்ளன. இறுதியில் விளம்பரம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதையும் தன்னுடைய பாணியில் விளக்கியுள்ளார் ஆசிரியர். நூலைப் படிக்கும் ஒருவர் அதற்குப் பிறகு விளம்பரங்களை முன்னர் பார்த்தது போல பார்க்கமாட்டார். அந்தளவு பிராண்ட், மதிப்பு, அதன் பயன் பற்றி விளக்கவேண்டும் என்பதை கூறியுள்ளார். சிறிய நிறுவனம் பெற்ற வெற்றி முதல் பிரமாண்ட பன்னாட்டு நிறுவனம் தடுமாறிய தருணம் வரை நேரடியாகவே நிறுவனத்தின் பிராண்டுகளின் பெயர்களைப் பயன்படுத்தி விளக்கியுள்ளதால் வாசிப்பவர்கள் அதனை எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது.
மார்க்கெட்டிங் வஸ்தாது ஆக வாசிக்க வேண்டிய நூல் இது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக