மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

 

 

 

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5efVDoOyMv-PWJ0_nhPVI0E2uIsdY43oIfhDRkMssAUMoK5SFOBUrGlrcU3sIEhyLIiHy4v_w-ZLWj75LubRUO6qCZ3iGSOeRK_kxr5vcR4uOF4WkFttxopkTexPAGc0n5Y-QOrXSJAw/s1600/Amnesia.jpg

 

 

 

 

மூளையும் நினைவுகளும்


மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது. ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது. திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன. தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர், பைத்தியம் ஆனவர், கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர். இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன. பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால், அவரை விமர்சிக்க ஏதுமில்லை.


இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம்.



அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன். இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது. அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது. வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார். ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு அறுவைசிகிச்சை செய்து இடதுபுறம், வலதுபுறம் என இருபுறங்களிலும் டெம்பொரல் லோபின் சில பகுதிகளை அகற்றினார்.


இதனால் அவருக்கு வலிப்பு பிரச்னை போய்விட்டது. ஆனால் நிரந்தரமான அம்னீசியா பிரச்னை தொடங்கிவிட்டது. காலையில் உணவு சாப்பிட்டது கூட நினைவில்லாமல் காலை உணவை நான்கு முறை சாப்பிடத் தொடங்கினார். பழைய நினைவுகள் முழுக்க அகற்றப்பட்டுவிட்டன. புதிய நினைவுகள் உருவாகவே இல்லை.


யூஜென் பாலி


அமெரிக்காவைச் சேர்ந்தவர், 1922ஆம் ஆண்டு பிறந்தவர் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். விமானங்களின் எந்திரங்களையும் பழுதுபார்க்கும் திறன் கொண்ட வேலைக்காரர். 1992இல் தனது வேலையிலிருந்து கூட ஓய்வு பெற்று மனைவி, மக்களோடு வசித்து வந்தார். இவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு திடீரென ஏற்பட்டது. அதோடு அந்த வைரஸ் பரவிய வேகத்தில் சிகிச்சை கொடுத்தும் கூட மொழி, பொருட்களின் பெயர்களை நினைவுகொள்ளும் திறனை இழந்துவிட்டார் பாலி. இவருக்கும் பழைய நினைவுகள் மறைந்துவிட்டன.


இருவருக்குமான ஒற்றுமைகள்


காலையில் சாப்பிடும் உணவை சாப்பிட்டோமா இல்லையா என்பதை மறப்பது போலவே, சந்தித்த மனிதர்களையும் மறந்துவிடுவார்கள். இதனால் பழகிய மனிதர்களே இவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலும் ஒவ்வொருமுறையில் தங்களை தாங்களே அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. தினசரி வாழ்க்கையில் வேறு எதுவும் பிரச்னையில்லை. நினைவுகளை மறப்பதை விட வேறு பிரச்னைகள் இருக்கவேண்டுமா என சிலர் கூறலாம். பிற உடல் இயக்கங்கள் பாதிப்படையவில்லை. இவர்களை ஆராய்ந்துதான் மூளை நரம்பியலாளர்கள் பழக்க வழக்கம் நினைவுகள் பற்றி நிறைய அறிந்துகொண்டனர்.


மூளையில் டெம்பொரல் லோப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நினைவுகளை உருவாக்க முடியும். தானாக திறன் உருவாகினாலும் அதனை பல்வேறு நினைவுபடுத்தல் பயிற்சி மூலம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்க்க முடியும். தீர்மானிக்க முடியும் நினைவுகள், தீர்மானிக்க முடியாத நினைவுகள் என இரண்டு வகைய நினைவுகள் உள்ளன. தீர்மானிக்க முடியும் நினைவுகளை பொருட்களை, சம்பவங்களை நினைவுபடுத்துவது என குறிப்பிடலாம். தீர்மானிக்க முடியாத பழக்கங்களை தொடர்ச்சியான பழக்கம் மூலமாக செய்வது எனகூறலாம். டெம்பொரல் லோப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்மானிக்கமுடியாத நினைவுகள் பகுதி மட்டும்தான் உயிரோட்டமாக இருந்தது. இதனை வைத்து பல்வேறு பயிற்சிகளின் மூலம் முன்னர் பழகிய விஷயங்களை நினைவுபடுத்த ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.


மூளையில் உள்ள பாசில் கங்குலியா பகுதியில் நியூரான்கள் அழிவதுதான் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். டெம்பொரல் லோப், பாசில் காங்குலியா பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை எடுப்பதில் டெம்பொரல் லோப் பாதிக்கப்பட்டவர்கள் திணறினார்கள். தீர்மானிக்கப்படாத நினைவுபழக்கங்களை எளிதாக செய்தனர். ஆனால் பார்க்கின்சன் நோயாளிகள் தீர்மானிக்கப்பட்ட நினைவு பழக்கங்களை எளிதாக செய்தனர். ஆனால், தீர்மானிக்கப்படாத நினைவுப்பழக்கங்களை அவர்களால் செய்யமுடியவில்லை.


தீர்மானிக்கப்படாத நினைவுபழக்கங்களைக் கொண்ட பாசல் கங்குலியா மூலம் நாம் கற்றுக்கொள்வதை ஹேபிசுவல் லேர்னிங் என்று கூறுகிறார்கள். டோபமைன் என்பதுதான் புதிதாக கற்கும் பழக்கத்திற்கான பரிசு. ஹென்றி, பாலி ஆகிய இருவருக்கும் இதுபற்றிய சோதனை நடைபெற்றது. அவர்கள் தங்களது வீட்டிலுள்ள சமையல் அறையை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க பயிற்சி வழங்கப்பட்டது. சரியாக கண்டுபிடித்தால் அவர்களுக்கு உணவு கிடைக்கும். அவர்கள் சாப்பிட்டதை மறப்பது பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. தான் என்ன செய்யவேண்டும், எப்படி வழியைக் கண்டறிவது என்பதை பழக்கத்தின் மூலம் நினைவுபடுத்த விரும்பினர். இதில் ஒரளவு வெற்றியும் கிடைத்ததுதான். ஆனால் பாதையில் தடங்கல் ஏற்பட்டால், அவர்களுக்கு கொடுக்கும் விளையாட்டு கார்டுகளை மாற்றி வைத்தால் அம்னீசியா வந்த இருவருமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர். ஹென்றி, பாலி என இருவரின் மூளைகளும் சாண்டியாகோவில் உள்ள மூளைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


பிபிசி




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்