சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்
பெஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர்
டெர்ரி ஓ பிரையன்
வெஸ்ட்லேண்ட்
ரூ.199
உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார். மொழிவளமும், உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன. எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே, சோமர்செட் மாகாம், வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன.
சுலை
ஜான் கிரிசம்
ஹாசெட்
ரூ.699
17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன். இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது. இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார். அவன் அமெரிக்காவிற்கு சென்றானா, விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை.
சிங் ஆப் லைப்
பிரியா சருக்காய்
வெஸ்ட்லேண்ட்
ரூ.499
தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான். தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது. இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார் பிரியா.
சிக்கிம்
ப்ரீத் மோகன் சிங் மாலிக்
ஹார்ப்பர்கோலின்ஸ்
ரூ.699
1975ஆம் ஆண்டு சிக்கிம், இந்தியாவுடன் இணைந்தது. அந்த நாட்டைப் பற்றிய வரலாறு, எப்படி 22 ஆவது இந்திய மாநிலமாக இணைந்தது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார்.
டெர்ம்ஸ் ஆப் டிஸ்சர்வீஸ்
திபாயன் கோஷ்
ஹார்பர் கோலின்ஸ்
தொழில்நுட்பம் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டு மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறது என்பதை நூல் பேசுகிறது. சமூக வலைத்தளங்கள் எப்படி தவறான செய்தியை வேகமாக பரப்புகின்றன, மோசமான செய்திகள் மூலம் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக