வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

 

 

 

 


 

 

 

 

முடிவெடுக்கும் பழக்கம்!



உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது. அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும், தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம். இதில் எது சரி, எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம். ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம், அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும். சுயநலன், பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது. இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம்.


தள்ளுபடி ஆதாயங்கள்


இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது. இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன. இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை. இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்மை. எனவே யாரையும் இதற்கு குறை சொல்ல முடியாது.


ஹைப்பர் மார்க்கெட் முதல் பங்குச்சந்தை வரை உடனே கிடைக்கும் தள்ளுபடிகள், ஆதாயங்கள் பற்றி மனம் அதிகமாக யோசிக்கும். பரிணாம வளர்ச்சியும் இப்படித்தான நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு நாம் முழுக்க அடிமையாகிவிட்டோம் என்று கூறிவிட முடியாது. இதனை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதற்கு சற்றே மாற்றி யோசிக்கவேண்டும் அவ்வளவுதான். எதிர்காலத்திற்கான ஓய்வூதியத்தை சேமிப்பது முக்கியமா, ஆடம்பரமான ஸ்மார்ட் வாட்சுகளை வாங்குவது முக்கியமா என ஒருவர் ஆழமாக யோசிப்பது அவசியம்.


அத்தனைக்கும் பேராசை


ஒருவர் தான் வைத்திருக்கும் விஷயங்களை விட இல்லாத விஷயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பார். கூடவே சில பொருட்களை வாங்குவதை உணர்ச்சிகரமான நிகழ்ச்சி அல்லது சம்பவங்களை தொடர்புபடுத்தி மனத்தில் இணைத்து பார்ப்பதும் உண்டு. ஒரு பொருளை விற்கும்போது அதில் ஒருவருக்கு கிடைக்கும் லாபம், விற்கப்படும் பொருளுக்கு சமதையாக இருந்தால் அந்த வியாபாரம் சரியானது. அப்படி இல்லாதபோது, அது நஷ்டம். இந்த வகையில் இச்செயல்பாடு மனதிற்கு சில உணர்ச்சிகளை உருவாக்கிக்கொள்ள இடம்கொடுக்கிறது. இதில் என்ன கற்றோம், என்ன பெற்றோம் என்பதுதான் அது.


1990இல் உளவியலாளர்கள் கானேமன், நெட்ச், தாலேர் ஒருவர் தான் வைத்திருக்கும் சொத்தை விட அதிக விலை கொண்ட பொருள் ஒன்றை வாங்குவது பற்றி ஆய்வு செய்தனர். ஒன்றை இழக்கப்போகிறோம் என்பதை விட அதற்கிணையாக பெறும் பரிசை மனிதர்கள் முக்கியமானதாக கருதுகிறார்கள் என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்தின. ஆனால் இதில் ஏற்படும் உந்துதல் என்பது தெளிவற்றதாக உள்ளது.




எதிர்கால வாய்ப்புகளை கணித்தல்


விளையாட்டு மற்றும் சூதாட்டம் பற்றிய ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன இந்த இரண்டு விளையாட்டுகளிலும் வெற்றி வாய்ப்புகள் முன்கூட்டியே கணிக்கப்படுகின்றன. விளையாட்டுத்துறையில் ஒருவரின் சாதனை என்பது முன்னர் செய்தவற்றை அடிப்படையாக கொண்டவை. நேரத்தை அடிப்படையாக கொண்டு எதிர்காலம் பற்றிய விஷயங்களைக் கணிக்கின்றனர். 1985ஆம் ஆண்டு உளவியலாளர்கள் கார்னெல், கிலோவிச், வாலன், ட்வெர்ஸ்கி இதுபற்றிய ஆய்வை பேஸ்கட்பால் வீரர்களை வைத்து செய்தனர். முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக ஆடியவர்கள் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று பலரும் நம்பினர். இதனை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.


நம்பிக்கை என்பது ஒருவரின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பது உண்மை. ஆனால் அதேசமயம் ஒருவரின் திறமையை கூடுதலாக அளவிடும்போது, எதிர்பார்த்த பயன்களை அது தராது.



உண்மைகளை பரிசோதித்தல்


சமூக வலைத்தளங்களில் படிக்கும், பிறர் அனுப்பும் குறுஞ்செய்திகளை தினசரி நாம் படிக்கிறோம். இதில் எது உண்மை என்பதை எப்படி நம்புவது? எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே இணைய வணிகம் கொடி கட்டி பறக்கிறது. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திய நண்பர் நடந்துகொண்ட விதம் பற்றி எனக்கு தனிப்பட்ட ரீதியில் அறிந்த விஷயங்களை கூறினேன். உடனே அவர் நான் அவரைப் பற்றி நம்பும் விஷயங்களுக்கு நீ சொல்லுவது எதிராக இருக்கிறது. இதுபோல பேசாதே என்றார். இதேபோலத்தான் பெரும்பாலான செய்திகளை மக்கள் நம்புகிறார்கள். அதாவது, எனது மனதில் உள்ள கருத்தியலுக்கு பொருத்தமான நான் கேட்க படிக்க விரும்பும் செய்திகள். இதனை சமூக வலைத்தளங்கள் அல்காரிதங்கள் மூலம் அமைத்து, அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனியாக முடிவுகளை வடிவமைத்து தருகிறார்கள். இதனால் பேஸ்புக், கூகுள், அமேசானுக்கு வியாபாரம் எளிதாகிறது.


நினைவுபடுத்தும் திறன்!


படித்த பல விஷயங்களை தேர்வறையில் நினைவு கொள்ளமுடியாமல் மாணவர்கள் தடுமாறுவது இயல்பானது. இதற்கு காரணம், விஷயத்தை நினைவுபடுத்துவது எப்படி என அவர்கள் புரிந்துகொள்ளாததுதான். இதனால் சரியான நேரத்தில் நினைக்கும் விஷயத்தை வேகமாக வெளிக்கொண்டுவர முடியவில்லை. இதனை ஹியூரிஸ்டிக் என்று அமோஸ் ட்வெர்ஸ்கி முதலி்ல் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். நினைவுகளை திரும்ப கொண்டுவருவது என்பது மூளையின் முக்கியமான திறன். உணர்வுரீதியாக சேகரிக்கப்படும் தகவல்களை சில தூண்டுதல்கள் மூலம் நினைவுகொள்ளலாம். பல்வேறு சூழல்களில் எடுக்கும் முடிவுகள் இந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.


ஒரேமாதிரியான சிந்தனைகள்


வழிகேட்பதற்கு ஆட்டோ ஓட்டுபவரை எப்படி பலரும் அணுகுகிறார்கள்? என்பதை யோசித்தாலே நாம் யோசிக்கும் விதம் புரிந்துவிடும். அவர் ஒருவருக்கு வழிகாட்டி உதவ முடியும் என்பதை யாரோ ஒருவர் மற்றொருவருக்கு கூறியிருக்கலாம். இதனால் அசைக்கமுடியாத நம்பிக்கை மனதில் உருவாகிறது. இதேபோல்தான் மனிதர்கள், இடங்கள், பொருட்கள் ஆகியவற்றை பற்றி பலரும் சில கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இவற்றை பலரும் அடிக்கடி மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. சில விஷயங்களின் நமது முந்தைய அனுபவம் காரணமாக ஏற்படும் முன்முடிவுகள் இந்த வகையில் சேரும். பணத்தை கையாள்வதில் முன்னர் தடுமாறி பணத்தை கடன் கொடுத்து இழந்திருப்பவர், பிறருக்கு பணத்தை கடன் கொடுத்து உதவ மறுப்பது இயல்பானது. என்ன காரணம், தான் பணத்தை முன்னர் இழந்திருக்கிறோம். இனிமேலும் அப்படி ஒரு இழப்பை எதிர்காலத்தில் ஏற்க கூடாது என்பதுதான் விஷயம்.


இழப்பீடு


பொதுவாக நாம் செய்யும் செயல்களை நமக்கு சுயநலவாதி என்று கூட பெயரைப் பெற்றுத்தரலாம். ஒருவர் செய்யும் செயல்கள் அனைத்துமே அவரது நலன் சார்ந்தும் எதிர்கால்த்தில் அல்லது அப்போதே பயன் கிடைக்கும்படியாகவே இருக்கும். பிறருக்கு நல்ல விஷயங்கள் செய்யவேண்டும் என்பது செயலின் நேரடி விளைவல்ல. பக்கவிளைவாகவே இருக்கும். ஒருவர் சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறார் என்றால் அதற்காக பலன்கள் கிடைக்கவேண்டும். இதுபற்றிய ஆய்வை சாம் பெல்ஸ்மன் செய்தார். பாதுகாப்பு விதிமுறைகளை சவால்களை சந்திக்காமல் அதிகரிப்பது மக்களுக்கு உதவாது என்றார். ஆனால் இதற்கு எதிராக ஆய்வாளர் ஜே.எஸ். வைல்ட், ஸவீடன் நாட்டு அரசு, விபத்தை குறைக்க வாகன ஓட்டுநரின் இருக்கையை வலதுபுறத்திற்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார். இதனால் அங்கு பெருமளவு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது.


பிறரின் சொல்வன்மை


ஒருபொருளை விற்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பின்பற்றி அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நம்மில் பெரும்பாலானோர் பொருட்களை வாங்குகிறார்கள். அந்த பொருட்கள் ஒருவருக்கு தேவை என்பதை விட விற்பவர்கள் கூறும் சொற்களில் நம்பிக்கை வைத்து அதை தவறவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுவதுதான் இதில் முக்கியமானது. இந்த உளவியல் பலவீனத்தை வணிகர்கள் பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டு இன்றே கடைசி, 50 சதவீத தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகள் இந்த வகையில்தான் உருவாக்கப்படுகிறது.


அடுத்து, சூதாட்ட முறையில் நம்பிக்கையை வளர்க்கும் சில விஷயங்கள் உண்டு. எதிர்காலத்தில் அல்லது உடனடி பலன் கிடைக்கும் என சில விஷயங்களை செய்வதுண்டு. இதில் வெற்றி வாய்ப்பு என்பதை கணிப்பது கடினம். முன்னர் பெற்ற முடிவுகள் படி கிடைக்கும் நம்பிக்கை ஒருவருக்கு உதவக்கூடும்.



பிபிசி


பீட்டர் பெனக்



கருத்துகள்