குற்றவாளிகளின் கொலைப்பழக்கம் எப்படி தொடர்கிறது?

 

 

Mortality, Skull And Crossbones, Vanitas, Memento Mori


நிகழ்ச்சிகள் பழக்கம்


இன்று நெட்பிளிக்ஸ், அமேசான், எம்எக்ஸ்பிளேயர் வலைத்தளங்களில் வெப் சீரிஸ்களை பா்ர்க்க வைக்கும் நுணுக்கமான அல்காரிதம்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி ஒருவர் என்ன விஷயங்களைத் தேடுகிறார். என்ன படங்களைப் பார்க்கிறார் என்பது பற்றிய தகவல்களை தேர்ந்தெடுக்கின்றனர். இத்னை வைத்து 90 நொடிகளில் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும்படியான விஷயங்களை தொகுக்கின்றனர். இதனால் ஒருவர் பார்க்கும் அனுபவத்தை வைத்து அவருக்கேற்றபடி நிகழ்ச்சிகளை தொகுக்கின்றனர். மேலும் படங்களின் வெப்சீரிஸ்களின் முகப்பு படங்களை பிறரது கவனத்தை ஈர்க்கும்படி வடிவமைக்கின்றனர். இதனை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். ஒரு வெப்சீரியசில் சில கேரக்டர்களை வைத்து கவர் ஆர்ட் செய்திருப்பார்கள். ஆனால் அது அனைவருக்குமே பிடித்திருக்காது. எனவே மாற்றி அமைத்தால் தனிப்பட்ட விருப்பத்தின்படி அனைவரும் ரசிப்பார்கள். நெட்பிளிக்ஸ் இம்முறையை பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது.


உபர் நிறுவனம், தனது வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்க நெட்பிளிக்ஸின் முறையைத்தான் காப்பியடிக்கிறது. பிஸியான டைமிலும் ஓட்டுநர்களை வேலைவாங்க அல்காரித முறையை சிறப்பாக வடிவமைத்துள்ளது.


ஒருவர் டிரெஸ் தேர்ந்தெடுப்பது, புதிய டிஜிட்டல் பொருட்களை வாங்குவது, பார்ட்டிகளுக்கு செலவு செய்வது, நமக்கான இணையைத் தேர்ந்தெடுப்பது என அனைத்துமே அவரே தேர்ந்தெடுப்பது போல தெரியும். ஆனால் உண்மையில் இதில் செல்வாக்கு செலுத்துவது அவரின் நண்பர்களும், குடும்பத்தினர்களும்தான். இவர்கள் மூலம்தான் ஒருவருக்கு உலகம் தெரிய வருகிறது. அவர்களின் பரிந்துரையின் பேரில்தான் பல்வேறு பொருட்களை வாங்குகின்றோம். உணவு முதல் தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பது வரையில் நம்மைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இதனை ஹேபிட் கான்கார்டன்ஸ் என்று குறிப்பிடுகின்றனர்.


அடிப்படையில் ஆதிகாலத்தில் இருந்தே பகிர்தல் என்பது முக்கியமானது. அன்பை வெளிக்காட்ட ஒருவருக்கு தெரிந்த வழி, வீட்டுக்கு வர வைத்து சோறு போட்டு அனுப்புவதுதான். இப்படி உணவைப் பகிர்வது நட்பை அதிகரிக்கும் வழி. சைவமோ, அசைவமோ அதற்கேற்ப உணவைப் பகிர்ந்து சாப்பிடுவது நட்புணர்வையும் ஒத்திசைவையும் இருவருக்குள்ளும், அல்லது குழுவுக்குள்ளும் ஏற்படுத்தும்.


இப்படிப் பார்த்தாலும் ஒருவர் என்ன சாப்பிடுவார். கீரை பிடிக்காதா, லட்டு பிடிக்குமா என்பது போன்ற விவரங்கள் குடும்பத்திற்குள்ளும் நண்பர்களுக்குள் நெருக்கமானவர்களுக்குள்ளும் தெரியும். ஆனால் இதெல்லாம் இன்று வணிகத்திற்கான விஷயங்களாக மாறிவிட்டன. இதனை யாரும் கட்டாயப்படுத்தி வாங்கவில்லை. நீங்கள் அழுத்தும் அ்க்ரி என்ற பட்டனில்தான் அத்தனையும் உள்ளது. இந்த பட்டனை அழுத்தாமல் எந்த ஒரு ஆப்பையும் நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது. இப்படி நமது அந்தரங்கமான தகவல்களை மைக், போன் மூலம் ஒட்டுக்கேட்க விருப்பம் தெரிவித்துதான் நாம் வாழ்கிறோம். இதனால் ஒரு சமூகவலைத்தள கணக்கில் பதியும் புகைப்படங்களையும், பதிவுகளையும் வைத்து ஒருவரின் பழக்க வழக்கங்களை கணிக்க முடியும்.


இதில் முக்கியமான பயன், நீங்கள் என்ன தேடுகிறீரகள், என்ன தேவை என்பதை ஒட்டுக்கேட்டு பெரு நிறுவனங்கள் எளிதாக கணித்து விடுகின்றன. போனிலுள்ள முகவரி, அழைப்புகள், புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், பாடல்கள், குறுஞ்செய்திகள், தேடுதல் முடிவுகள் ஆகியவற்றை பெரு நிறுவனங்கள் சேகரித்து வருகின்றன. இதனால் ஒருவரின் டிரெஸ் முதல் பல் துலக்கும் பிரெஷ், குளோசப் ஜெல் வரை அனைத்து விவரங்களும் நிறுவனங்களுக்குத் தெரியும்.



Skull And Crossbones, Skeleton, Skull, Bone, Skull Bone


2


குற்றத்தின் வழிப்பயணம்


2010ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம்தேதி அமெரிக்காவின் ஒன்டாரியா போலீஸ் நிலையம். அங்கு டிடெக்டிவ் சார்ஜன்ட் ஜிம் ஸ்மித், கர்னல் டேவிட் ரஸ்ஸல் வில்லியம்ஸ் என்பவரை விசாரிக்க இருந்தார். இந்த வில்லியம்ஸ் கொலை வழக்கு ஒன்றுக்காக சந்தேகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவர் விமானப்படைத்தளம் ஒன்றில் வேலை செய்து வந்தார். 27 வயதான ஜெசிகா, 37 வயதான மேரி பிரான்ஸ் காம்யூ என்ற இரு பெண்களும் கடுமையான பாலியல் ரீதியாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.


இந்த வழக்கில் சந்தேகமாக கருதப்பட்ட டேவிட் விசாரணைக்கு வந்தார். விசாரணைப் பொறுத்தவரை ஸ்மித் அவசரப்படவில்லை. மன்னிப்பு கேட்பது போலத்தான் முதல் கேள்வியைக் கேட்டார். ஆனால் அதற்கு கிடைத்த பதில் டேவிட்டை நிரந்தரமாக சந்தேகப்பட வைத்துவிட்டது. எப்போதேனும் விசாரணைக்காக இதற்கு முன்னர் காவல்நிலையம் போயிருக்கிறார்களா? என்று கேட்டார். அதற்கு சூயிங்கம்மை தின்றபடி இல்லை என்றவர், சிறிது நேரம் யோசித்துவிட்டு என்ஐஎஸ் என்னை டாப் சீக்ரெட் விஷயம் ஒன்றுக்காக முன்னர் ஒருமுறை விசாரித்தனர் என்று டேவிட் சொன்னார் அவருக்கு ஸ்மித் குணநல அறிவியல் மையத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துஇருக்க வாய்ப்பில்லை.


இதனால் சாதாரணமாக முடியவேண்டிய விசாரணை பத்து மணிநேரங்களுக்கு நீடித்தது. இதில் அவர் இரு கொலைகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை என்பது உண்மையை வெளியே கொண்டு வரும் என்றாலும், அதற்கு முன்னரே கொலையானவர்களின் வீட்டு முன்னர் கர்னலின் நிசான் கார் தடயம் கிடைத்துவிட்டது. ஆனாலும் முழுமையான ஆதாரம் கிடைக்கவேண்டுமே?


பெண்களை குரூரமாக துன்புறுத்தி வக்கிரமாக கொல்லும் பழக்கம் கொண்டவர் என உறுதியானது அவரின் வீட்டிலிருந்து கிடைத்த பொருட்களால்தான். அவரது ஒடா்வா வீட்டில்தான், ஏராளமான ஆபாச வீடியோக்கள், பெண்களை கொடூரப்படுத்திய புகைப்படங்கள் கிடைத்தன. பெண்களின் வீடுகளில் புகுந்து அவர்களி்ன் உள்ளாடைகளை திருடுவது டேவிட்டுக்கு பிடித்தமானது. இந்த கொலைக்குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவரின் வேலை, மரியாதை, குடும்பம் என அனைத்துமே கண்ணெதிரில் காணாமல் போனது.


நீதிபதியின் முன் தனது தவறுகளை ஏற்றுக்கொண்டாலும் குற்றங்களைசெய்யும் பழக்கம் எப்படி தொடர்கதையானது? குற்றச்செயல்பாடுகள் ஒருவருக்கு கொடுக்கும் மனதிருப்திதான். இதனால்தான் டேவிட் அடுத்தடுத்து ஏராளமான குற்றங்களை செய்துகொண்டே இருந்தார். ஒன்றுக்கு அடுத்தது அதைவிட பெரிதாக என குரூரமான கொலைகள், தாக்குதல் என சென்றார்.


சிரித்த முக கொலைகாரன்


1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் டாக்சி டிரைவர் ஹன்டர் ஜெஸ்பர்சன் வாழ்ந்து வந்தார். இவர் தனது மகளை ரெஸ்டாரெண்ட் ஒன்றுக்கு அழைத்து வந்து சாப்பிட வாங்கிக்கொடுத்தார். அப்போது, அவரது மகளுக்கு சில விஷயங்கள் தெரியவந்தன. அப்படி தெரியட்டும் என்றுதான் அப்பா தனது மகளுக்கு கூறினார். சில நாட்களாகவே தனது மகளிடம் செக்ஸ் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்து வந்தார். இது மெலிஸாவுக்கு பெரும் தர்மசங்கடமாக இருந்தது. அதோடு உணவகத்தில் சாப்பிடும்போது, உன்னிடம் முக்கியமான விஷயத்தை சொல்ல நினைத்தேன். அதனை காவல்துறையில் சொல்லிவிடு என்று சொன்ன விஷயத்தைக் கேட்ட அவரது மகளுக்கு மயக்கம் வராத குறைதான்.


அப்போது அவர்களது ஊரில் ஏழு பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஸ்மைல்பேஸ் கில்லர் என்று பெயர் வைத்து ஊடகங்களும், காவல்துறையும் குற்றவாளியைத் தேடி வந்தனர். அந்தக்குற்றவாளி தான்தான் என ஜெஸ்பர்சன் தனது மகளிடம் ஒப்புக்கொண்டார்.


பிபிசி









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்