வயிற்றுக்குள் நுண்ணுயிரிகள் எப்படி வருகின்றன?

 

 

 

 

 


 

 

வயிற்றுக்குள் பிரளயம்!


ஒருவரின் வயிற்றுக்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. தினசரி வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் நடத்த நுண்ணுயிரிகள் உதவுகின்றன.


மனித உடலில் முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்றால் வயிற்றில் மட்டும் முப்பத்து ஒன்பது டிரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இதில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை உள்ளடங்கும். மிகச்சிறியவை எ்ன்பதால் உடல் எடையில் பாதிதான் வரும். ஆனால் இதன் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.


ஒவ்வொரு செல்களிலும் இருபது முதல் இருபத்தைந்தாயிரம் டிஎன்ஏக்கள் இதில் உள்ளன. நுண்ணுயிரிகளை இதோடு ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகம். நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி வேகம் அதிகம்.மரபணுக்களை மாற்றிக்கொண்டு தனக்கு தேவையான செல்களில் புகுந்துகொண்டு செயல்படும் வேகம் இவற்றுக்கு அதிகம்.


மனிதர்களின் உடல் உறுப்புகள் வெவ்வேறு விதமான வெப்பத்தைக் கெஒண்டவை. இதனால் அதற்கேற்றபடி நுண்ணுயிரிகள் தம்மை மாற்றிக்கொண்டு வாழ்கின்றன. உலகிலுள்ள பல்வேறு நிலப்பரப்புகள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தக்கவைத்துக்கொள்கின்றன. அக்குள், பாதம் ஆகியவற்றில் குளுக்கோஸ், விட்டமின், அமினோ அமிலங்கள் வெளியாவதால் பெரும்பாலும் பாக்டீரியாக்களின் காலனி இங்குள்ளது. ஈரப்பதம் கொண்ட இருளான பகுதி, நுண்ணுயிரிகளுக்கு முக்கியமானது.


இதற்கு மாறாக வயிற்றுப்பகுதி உள்ளது. இங்கு அமிலத்தன்மை அதிகமாகவும், குறைந்த ஆக்சிஜனும் உள்ளது. குடல்ப்பகுதியில் நிலவும் சூழலில் நுண்ணுயிரிகள் தாக்குப்பிடித்து வாழ்கின்றன.


நுண்ணுயிரிகள் எப்படி நமது உடலுக்குள் நுழைகின்றன? தாய் மூலமாகத்தான். குழந்தைகளை தாய் பிறப்புறுப்பு வழியாக எடுக்கும்போது, நுண்ணுயிரிகள் குழந்தையோடு இணைந்துவிடுகின்றன. இப்படியின்றி அறுவைசிகிச்சை வழியாக எடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, உடல்பருமன், கொலியாக் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.


உங்கள் உடலிலுள்ள நுண்ணுயிரிகள்தான் உங்கள் உடலிலுள்ள மணத்தை முடிவு செய்கின்றன. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றில் வரும் மணம், எதிரிகள், நண்பர்களை தேர்ந்தெடுக்கவும் இந்த மணம் கொடுக்கும் சிக்னல்தான் உதவுகின்றன. ஒருவரின் நினைவுகள் வந்தால் அவர் அணிந்த ஆடை மனதிற்கு சில நினைவுகளை நினைவுபடுத்துகிறதே எப்படி? அதுவேதான் நுண்ணுயிரிகளும் செய்கின்றன.


ஒருவருக்கு வரும் தூக்கத்தையும் கூட நுண்ணுயிரிகள்தான் தீர்மானிக்கின்றன. ஒருவரின் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் தூக்கத்தின் அளவையும், குணநலன்களையும் கூட தீர்மானிகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும்வரை பாக்டீரியாக்கள் இப்படி செயல்படுகின்றன. இறந்துவிட்டால் உடனே வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் குடலை தின்று செரிக்கத் தொடங்கும். பல்வேறு உடல் உறுப்புகளை மெல்ல அழிக்கும். எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சுதந்திரமாக பரவும். இதனை தானாடோமைக்ரோபயோம் என்றுகின்றனர். ஈகோலி பாக்டீரியாவை ஆபத்து என்று கூறுவார்கள். வயிற்றிலுள்ள இந்த பாக்டீரியாதான் விட்டமின் கே வை உடல் கிரகிக்க உதவுகிறது.


வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளை மது அருந்தும் பழக்கம் குலைக்கிறது. அப்படி குலைக்கப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு இவை திரும்புவது சாத்தியம் இல்லை. இதனை ஆய்வாளர்கள் டிஸ்பயோசிஸ் என்று கூறுகின்றனர். ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் உடலில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் புரோபயோடிக் உண்வுகளை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் ஆன்டிபயாடிக் முறையில் அழிக்கப்பட்ட சமச்சீரற்ற நுண்ணுயிரிகளை மீண்டும் உருவாக்கலாம். இது இயற்கையில் உருவாக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் செயல்திறனுக்கு சம்மானவை அல்ல.


கிருமிகளை அழிப்பது என பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளை அழித்துவிட்டால் நாம் சாப்பிடும் உணவைக் கூட முழுமையாக செரிமானம் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இந்த நுண்ணுயிரிகள் இல்லாமல் அதிக காலம் மனிதர்களால் வாழ முடியாது. விரைவில் நோயுற்று இழந்துவிடும் வாய்ப்பே அதிகம்.


ஒருவரின் உடலிலிருந்து வெளியாகும் மலத்தில 30 சதவீதம் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகிறது. சில சமயங்களில் மனிதர்களுக்கு நோ்ய்த்தொற்று ஏற்படும்போது, அவர்களுக்கு ஆரோக்கியமானவர்களின் உடலிலிருந்து நுண்ணுயிரிகளை எடுத்து பரிமாற்றம் செய்வார்கள். குளோஸ்ட்ரிடியம் டிஃபிசிலே எம்ஆர்எஸ்ஏ ஆகிய பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றுக்கு காரணமாக உள்ளன. 2012இல் இதற்கான சோதனை நடைபெற்று வெற்றி பெற்றுள்ளது. பதினாறு பேரில் பதினைந்து பேருக்கு வெற்றிகரமாக சோதனை நடைபெற்றது.



பிபிசி

முன் கீட் லூய்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்