இடுகைகள்

தியா ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் தமிழில்: லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடைபடாத காலம் மற்றும் முடிவில்லாத தன்மையும் ஒரு நாளும் 2

படம்
பின் எவ்வாறு திரைப்படத்தை நிறைவு செய்தீர்கள்?       என்னால் அது இயலுவதில்லை. என்னுடைய படங்களைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் அவை உண்மையில் நிறைவுறுவதில்லை. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிற நிகழ்வுகள் என்றே கூறுவேன். எ.கா: கட்டப்படும் கட்டிடங்கள் போல. நான் ஒரே படத்திற்கு எத்தனை முறை கதை எழுதியிருக்கிறேன் தெரியுமா? 16 வது முறை ஒரே கதையையே வேறு ஒரு கோணத்தில் படமாக்க எழுதிக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. கூட்டல் கழித்தல் என கதையினை சிதைக்காமல் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும்போது மெல்ல வாழ்க்கையில் அதனைக் கொண்டு வந்து அதனை மேம்படுத்தல்களை செய்கிறீர்களா? இது ஒரு மாயச்செயல்முறை போலானதா?       நீங்கள் மிக எளிதாக கூறிவிட்டீர்கள். மாயை என்று. மாயை என்பதற்கான பொருள் என்ன? இரவில் மாயம் என்பதை எப்படி விவரிப்பீர்கள்? அதனை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? படப்பிடிப்பின் போது அதனை விளக்க என்ன படத்தினை பயன்படுத்துவீர்கள்? இதில் முக்கியமான கேள்வி என்பது ‘படத்தினை தேர்ந்தெடுப்பது ’ . வார்த்தைகளை படங்களாக மாற்றுவது – படமாக்குதல

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு நிறைவுப்பகுதி - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
யாரும் உங்களை நம்பிக்கையாளராக கூறுவதில்லை. படத்தில் சரஜீவோ காப்பகம் சார்ந்த இவோலெவி கூறுவதாக ‘ ‘ நீங்கள் ஏற்றுக்கொண்டு செய்யும் பயணமானது ஒரு துண்டு படச்சுருளுக்கானது. இதில் முழுக்க நம்பிக்கை கொள்ளலாம். அல்லது முழுக்க விரக்தியுள்ள நிலைமையில் வீழலாம் ’’ என்று கூறுகிறார். இந்த நயமற்ற காட்சி வரும் நூற்றாண்டின் இறுதியில் விரக்தி அல்லது நம்பிக்கை என எதனை இக்காட்சி குறைந்தபட்சம் வெளிப்படுத்துகிறது?             நான் இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமகாலத்தின் மீதான நேர்மையான பதிவுகளைத்தான் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு என்றும் முதுகு காட்டியே நிற்கின்றனர். நம்புகின்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தவறான காரணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் இறுதி முடிவாக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது. எனது படத்தின் இறுதியில் கதாபாத்திரங்களின் பயணம் முடிவுறாது தொடர்கிறது என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் அவர்கள் தொடர்ந்து தமது வீட்டைத் தேடுவார்கள் என்

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
13 மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு – யுலிசெஸ் கேஸ் டேன் ஃபைனாரு – 1996 ஆங்கில மூலம்: டேன் ஃபைனாரு தமிழில் லாய்ட்டர் லூன் எளிமையான கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்தக்கதையின் மூலம் என்ன?       புதிய திரைப்படம் குறித்துப் பேச வழக்கம் போல் வடக்கு இத்தாலிய கிராமத்தில் வாழும் டொனினோ காவரா வினை சந்தித்து இந்தமுறை ஒடிஸி குறித்து படம் எடுக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அற்புதமான யோசனை என்று கூறிய அவர் அதை எப்படி செய்யப்போகிறாய்? என்று ஒடிஸி குறித்து நாம் முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றவர் வீட்டிலிருந்து வெளியே போய் இத்தாலிய பதிப்பான ஒடிஸி ஒன்றை வாங்கி வந்து ஒரு பத்தியை படித்துக்காட்டினார். யுலிசெஸ் வீடு திரும்புகிறான் ஆனால் பெனலோப்பிற்கு அவனை அடையாளம் காணமுடியவில்லை என்ற பகுதியை கேட்டபோது எனக்கு அது சிறப்பான பகுதி என்பதாக தோன்றியது. அப்போது ஒரு பெண் என்னிடம் வந்து தான் மன்சூ அமைப்பிலிருந்து வருவதாகவும்(சிற்பி ஜியாகோமா மன்சூ) கடிதம் ஒன்றினையும், பரிசுப்பொருள் ஒன்றினையும் தந்தார். பரிசு என்னவென்றால் யுலிசெஸின் தலைதான். கூடவே மன்சூவின் மகள் எழுதிய கடிதமும் இருந்தது

தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 3 -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
ஆண்கள் இதை ஒப்புக்கொள்வார்களா?       நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). என்னுடைய முதல் படமான மறுகட்டமைப்பு படத்தினைப் பாருங்கள். பெண்ணின் பார்வையில் கதையினைக் கூறி, மனைவி கணவனை ஏன் கொன்றாள் என்று கதை அவளது பார்வையில் பயணிக்கும். பயணிக்கும் வீரர்கள் படத்தில் தன் முன் உடையைக் கழற்றும் ஆணைப் பார்த்து பெண் சிரிப்பாள். இப்படி காட்சிகளை உருவாக்கியதால் நான் பெண்ணியவாதி என்று அர்த்தம் அல்ல. பாரம்பரியமான கருத்தியல்களுக்கு நான் எதிராக இருக்கிறேன். ஆண், பெண், கருப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் என இவர்களை ஊக்கப்படுத்தி மூளைக்கும் உடலுக்குமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பல திரைப்பட இயக்குநர்கள் தொலைக்காட்சி, காணொளி மற்றும் கணினியின் யுகத்தில் தனிப்பட்ட இயக்குநர்கள் என்பவர்களின் படங்களுக்கான நேரம் இனி இல்லை; அவை முடிந்துவிட்டது; சினிமா என்பதற்கான காலமே இறந்தகாலம் ஆகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்களே?       இல்லை. உலகத்திற்கு சினிமா என்பது எப்போதையும் விட இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது. நாம் வாழும் உலகம் அடையும் சீர்கேட்டிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்கான இறுதி பாதுகாப்பு வடிவம் எ