மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

13
மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு – யுலிசெஸ் கேஸ்
டேன் ஃபைனாரு – 1996
ஆங்கில மூலம்: டேன் ஃபைனாரு
தமிழில் லாய்ட்டர் லூன்





எளிமையான கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்தக்கதையின் மூலம் என்ன?

      புதிய திரைப்படம் குறித்துப் பேச வழக்கம் போல் வடக்கு இத்தாலிய கிராமத்தில் வாழும் டொனினோ காவரா வினை சந்தித்து இந்தமுறை ஒடிஸி குறித்து படம் எடுக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அற்புதமான யோசனை என்று கூறிய அவர் அதை எப்படி செய்யப்போகிறாய்? என்று ஒடிஸி குறித்து நாம் முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றவர் வீட்டிலிருந்து வெளியே போய் இத்தாலிய பதிப்பான ஒடிஸி ஒன்றை வாங்கி வந்து ஒரு பத்தியை படித்துக்காட்டினார். யுலிசெஸ் வீடு திரும்புகிறான் ஆனால் பெனலோப்பிற்கு அவனை அடையாளம் காணமுடியவில்லை என்ற பகுதியை கேட்டபோது எனக்கு அது சிறப்பான பகுதி என்பதாக தோன்றியது. அப்போது ஒரு பெண் என்னிடம் வந்து தான் மன்சூ அமைப்பிலிருந்து வருவதாகவும்(சிற்பி ஜியாகோமா மன்சூ) கடிதம் ஒன்றினையும், பரிசுப்பொருள் ஒன்றினையும் தந்தார். பரிசு என்னவென்றால் யுலிசெஸின் தலைதான். கூடவே மன்சூவின் மகள் எழுதிய கடிதமும் இருந்தது. அதில் யுலிசெஸின் தலையை செய்வது தன் தந்தையின் கனவாக இருந்தது. அது மனிதர்களின் முழு அனுபவங்களையும் தன்னோடு கொண்டிருக்கிற ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் ஒடிஸி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்த ஆச்சரியம் நடந்தது. சொர்க்கத்திலிருந்து கிடைத்த ஒப்புதல் எனவே நாம் இவ்வழியில் செல்லலாம் என்றும் டோனினோ கருதினார்.

உங்களது படம் பல்வேறு நிலைகளுக்கு பயணிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டு காலகட்ட பால்கன் வரலாறு, சினிமாவின் அன்றைய காலகட்டத்திலிருந்து இன்று வரையிலான அதன் வரலாறு, சினிமா இயக்குநரின் சிதைவு குறித்தவை; புத்திசாலிப்பெண் ஒருவளின் காதல் குறித்த ஏக்கம் மற்றும் இறுதியாக அரசியல் படமாக போஸ்னியாவின் அண்மைக்கால விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது.

            நான் இறுதியாக வந்து சேர்வது ஒடிஸி குறித்த புள்ளிக்குத்தான். புனைவுகளைக் குறித்த ஆதாரங்களை எடுத்துக்கொள்கிறேன். ஹோமரின் எழுத்துக்களை எடுத்துக்கொள்ளவில்லை. இதைப்போன்ற புனைவைப் பயன்படுத்தியிருந்தேன். புனைவுப்படி, யுலிசெஸ் இதாகா வந்தாலும் அங்கேயே தங்கியிருப்பதில்லை. அங்கு வந்தபின்பு இன்னொரு பயணத்திற்கு தயாராகிறார்.

      இத்திரைப்படம் திரைப்பட இயக்குநரான ஏவின் தனிப்பட்ட ஆன்மிக அனுபவத்தை இலக்காக கொண்டுள்ளது. அவருக்கு நேரும் சிதைவிலிருந்து அவர் மீள முயல்வது அவருக்கானது மட்டுமல்ல. முழு தலைமுறைக்குமானது ஆகும். அவர் தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள பல கேள்விகளை எழுப்புக்கொள்கிறான். புதிதாக தன்னுள் கண்டறிய ஆராய வேண்டி இருக்கிறதா என்று கேள்விகளை கேட்கிறான். அவனுடைய நீட்சியாக என்னுள்ளும் அந்த சிதைவுகள் உள்ளன. திரைப்படமானது 20 ஆம் நூற்றாண்டில் பால்கன் மற்றும் ஐரோப்பியர்களின் வரலாறு குறித்துப்பேசுகிறது. தொலைந்து போன மனாகி படங்களின் மூன்று படச்சுருள்பெட்டிகளை தேடி முழு சினிமா வரலாற்றினையும் கூறிச்செல்கிறது இத்திரைப்படம். பால்கனில் படங்களை முதன்முதலில் உருவாக்கிய மனாகி சகோதரர்கள் லூயிஸ் லூமியர்ஸ் மற்றும் அகஸ்தே போன்றவர்களை ஒத்தவர்கள் ஆவர். அவர்கள் வெறும் புனைவுகளல்ல. படச்சுருள்களைத் தேடுவது என்பது அதை உருவாக்கியவர்கள் அதில் உருவாக்கிய விஷயங்களின் வெளிப்பாடு, கேமராவில் பதியப்பட்ட முதல்காட்சி என்பனவற்றை நாம் அறியத்தான். காதல் கதை ஒன்றில் அவனது ஈர்ப்பு அப்பொருளிலிருந்து நான்கு முறை மாறி பின்பு கூடுகிறது. ஒரே பெண்ணின் நான்கு வகை முகங்களாக தோன்றும் ஒரு நடிகை அதனை ஈடுபாட்டுடன் செய்தார். அவன் தனது இளம் வயது கனவுகளில் அறிவுள்ள பெண்ணை காதலிக்க வேண்டும் என்று உறுதி செய்து வைத்திருந்தான். எனவே அவனுக்கு அம்முகமே கண்ணில் பட்டது.

கிரீக் புனைவுகள் குறித்து கூறுகிறீர்கள். உங்களது படங்களுக்கு இவை பெரும்பாலும் மூலாதாரமாக உள்ளன. ஆனால் கிரீக் நாட்டினது ஒளி என்பது உங்களுக்கு ஆர்வமூட்டவில்லையா?

      நீங்கள் கூறுவது உண்மைதான். 36 நாட்களில் படங்களில் நடுநிலக்கடலின் சூரியன் பெரும் தாக்கத்தில் உருவான ஒன்று. ஆனால் இது கிரீஸ் நாட்டின் வழக்கமானதல்ல.  நடுநிலக்கடல் சார்ந்த நாடுகளுக்கானது. 1983 இல் ஏதேன்ஸில் எடுத்த ஆவணப்படம் ஒன்றும் இந்த வரிசையில் வரும். சூரிய வெளிச்சத்தில் இந்தப்படத்தை படமாக்கினேன். பனி,மழை, பழுப்பு நிற மேகங்கள், குளிர் என இருந்தது. இவற்றை வெளிப்படுத்தியது என்னுடைய தனிப்பட்ட மனப்போக்கு சார்ந்தது. கிரீஸ் நாட்டின் படங்களாக நிலப்பரப்பு காட்சிகள் அமையவேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் பார்த்த கிரீசின் படங்களாக அவை இருக்க வேண்டும்.

முதல் பார்வையிலே வெளித்தெரியும் அப்பாவித்தனம் தூய்மை இவை குறித்து என்ன கூறுவீர்கள்?

      குழந்தையின் அல்லது முதிய சிறு விவசாய குடியானவப் பெண்ணின் அப்பாவித்தனத்தை பற்றி இங்கு நான் பேசவில்லை. அப்பாவித்தனம் என்பதை ஆய்விற்கு முன்பு நிகழும் ஒரு தனிமையாக நான் கருதுகிறேன். ஒரு ஆச்சர்யத்தை உள்வாங்க போதிய அப்பாவித் தனத்தோடும், உணர்ச்சிகரமான தன்மையையும் பெற்று அவற்றை அடையாளம் காண முடியுமா?
நூறு ஆண்டுகளான சினிமாவின் தரத்தை நாம் இழந்துவிட்டோமா?
நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களால் அழுத்தமாக மூழ்கடிக்கப்படுகிறோம் என்பது குறித்தே நான் பயப்படுகிறேன். தொலைக்காட்சி படங்கள் அதைத்து திசைகளிலும் பீரங்கி குண்டுகளைப் போல நம்மைத்தாக்கி உண்மையான நல்ல திரைப்படங்கள் நம்முன் வழியில் இருந்தாலும் அவற்றை அவை கவனிக்க விடுவதில்லை.

எதிர்கால சினிமா குறித்து நீங்கள் அதிக நம்பிக்கையில்லாது பேசுகிறீர்கள். இந்தப்படம் இல்லாது வேறு ஏதாவது படம் சிக்கலில் உள்ளதா?

      ஒரு படம்தான் என்று நினைக்கிறேன்..

லெனினாவில் முன்னதாகவே சிதைந்த படம் ஒன்று இருக்கிறதே?

      ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். சார்லி சாப்ளின் படம் ஒடிக்கொண்டிருந்தபோது, 1983 ல் உண்மையான மனாகி திரைப்படம் தீப்பற்றி எரிந்துபோனது. அந்தக்காலத்தில் படச்சுருள் நைட்ரேட் வேதிச்சேர்மானங்களின்படி உருவானது என்பதை அறிவீர்கள். அவை எளிதில் தீப்பற்றக்கூடியன. அதில் இரு திரைப்படங்கள் அழிந்துபோயின. இப்போது சிந்தித்துப் பார்த்தால் இந்த கருத்தினை பல படங்களில் நான் மையமானதாக பயன்படுத்தியுள்ளதை உணர்கிறேன். உ.தா – தேனீக்காவலர்.

      இன்றைய நிலை என்னவென்றால் பல்வேறு திரைப்படங்கள் சிறப்பு அங்காடியில் விற்கவெனவே உருவாக்கப்படுகின்றன. நமது கிராமங்களின் பல திரைப்படங்கள் நிலையாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு சூழல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஐரோப்பிய சினிமாக்கள் முதலில் வெற்றி பெற்றாலும் பின்னர் வீழ்ச்சியுற்றது. திரையரங்குகளில் காட்சி சீட்டு விற்பனை மிகவும் மந்தமாகிவிட்டது. நாடக அரங்குகள் இன்றைய நிலைமையில் புதுமைத்திறன் கொண்ட கலைஞனும், பார்வையாளர்களும் சந்திக்கக் கூடிய இடமாக நம்பிக்கை அளிப்பதில்லை. சிறிய மேல்தட்டு வர்க்க மனிதர்கள் இதுபோன்ற நாடக அரங்குகளுக்கு வருகிறார்கள். மற்ற பெரும்பாலான மக்கள் அமெரிக்கப்படங்களுக்கு மாறிவிட்டார்கள். அமெரிக்கப் படங்களை படச்சுருளில்  பதியப்பட்ட பிம்பங்களாகவே காண்கிறேன்; திரைப்படங்களாக அல்ல.







பிரபலமான இடுகைகள்