தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 2- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்








அமெரிக்க சினிமாவுலகின் இசைப்பாடல்களில் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து விரிவாக கூறுங்கள்.

      பயணிக்கும் வீரர்கள் படத்தில் அமைந்த பாடும் முறையிலான சண்டை என்பது இசைப்பாடல் சார்ந்தது. அமெரிக்க சினிமாவுலகின் பாடல்கள் நவீன நாகரிகம் கொண்டவையாகவும் தினசரி வாழ்விலிருந்து நம்மை வேறொன்றுக்கு மீட்டு செல்பவையாகவும் இருக்கின்றன. அமெரிக்க இசைப்பாடல்கள் எதார்த்த நிலையிலிருந்து திரையரங்கிற்கானதாக மாறியிருக்கிறது. உ.தா: ஜெனே கெல்லியின் சிங்கிங் இன் தி ரெய்ன் பாடல். அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட என் படங்களை குறித்து பின்னோக்கி பார்த்தால் மக்கள் கூடும் மகிழ் மன்றங்கள் நாடு முழுவதும் இசைப்பாடல்களாலேயே நிறைந்துள்ளன. தினசரி வாழ்விலிருந்து வேறொன்றிற்கு இவை நம்மை அழைத்து செல்கின்றன என்று எண்ணுகிறேன்.

தி சஸ்பெண்டட் ஆப் தி ஸ்டோர்க் படத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடலான லெட் இட் பீ என்னும் பாடலை கதாபாத்திரங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1991 இல் ஏன் அந்தப் பாடல் வருகிறது?

அக்காலகட்டத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடல்கள் கிரீசின் இளைஞர்கள் மற்றும் ஐரோப்பியர்களை பெரும் எழுச்சிக்கு உட்படுத்தியிருந்தன. அந்த உணர்வை வெளிப்படுத்த முயற்சித்தேன்.


சினிமா விமர்சகர்கள், திரைப்பட ரசிகர்கள் சினிமாவில் உள்ள ஆன்மிக தன்மை கொண்ட தலைவர்கள் என்று பேசும்போது ஆந்த்ரேய் தர்கோவ்ஸ்கி தனது ஆழமான மனிதர்களின் இயல்பு குறித்த கண்டறியும் தன்மை மற்றும் நவீன உலகில் ஆன்மிகத்திற்கான போதாமை குறித்தும் கூறியுள்ளார் என்கிறார்கள். உங்களது படத்தின் உள்ளடக்கத்தில் கிரீக் மற்றும் நவீன வாழ்வு குறித்து எழுப்பும் கேள்விகளை வைத்து உங்களை கிரீக் சினிமாவின் ஆன்மிகத் தலைவர் எனலாமா?

      கிரீசில் நான் விசித்திரமான நிலையில் உள்ளேன். இங்கே என்னை தீவிரமாக எதிரியாக கருதுபவரும், தீவிரமான ரசிகராக பின்தொடர்பவர்களும் ஒருங்கே உள்ளனர். இரண்டு தலைமுறை க்ரீக் மக்கள் என்னுடைய படங்களைப் பார்த்து வளர்ந்து வருகின்றனர். மேலும் என்னை நேரிலும் கடிதம் வாயிலாகவும் எனது படங்கள் அவர்களது வாழ்வை மாற்றியுள்ளது என கூறியுள்ளனர்.

மூடுபனிநிலம் படத்தில் ஒரு இளம் க்ரீக் பெண்ணை லாரி ஓட்டுநர் லாரியின் பின்புறம் வைத்து வன்புணர்வு செய்கிறான். ஆனால் இக்காட்சியினை நாம் காண முடிவதில்லை. இன்றுவரும் படங்களில் உள்ள வல்லுறவுக் காட்சிகள் சரியா, தவறா என்று விமர்சனம் செய்ய முடியாத வண்ணம் நிறைந்துள்ளன. நீளமான மெதுவான தன்மையில் தொடங்கும் காட்சியில் லாரியின் பின்புறம் அப்பெண் ரத்தக்கறை படிந்த தன் கைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இக்காட்சியை எப்படி படம் பிடித்தீர்கள் என்று கூறமுடியுமா?

அக்காட்சியினை படம் பாதி முடிந்த பிறகு நான் எழுதிய மாதிரியே தானியா மலைலோகோவ் எனும் அப்பெண்ணை அதிகம் இடையூறு செய்யாமல் உருவாக்கினோம். எனவே நான் வல்லுறவினைக் காட்ட விரும்பவில்லை. மேலும் அப்பெண் அக்காட்சிக்கு உடன்படுவாளா என்று சந்தேகமும் இருந்தது. எனவே இறுதிக்காட்சி வரை அதனை படமாக்க காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பால்கன்ஸ், கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, கிரீஸ் மற்றும் பிற நாடுகளின் படங்களில் வல்லுறவுக்காட்சிகள் கொடூரமானதாக காட்டப்படுகின்றன. அவர்கள் அதனை பாதிக்கப்பட்டவர் பார்வையில் அணுகுவதில்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆணாதிக்க பார்வையில்தான் அவை உருவாக்கப்படுகின்றன. நாம் வல்லுறவுக் காட்சி குறித்து விவாதித்தபடி நீங்கள் ஆண் மேலாதிக்கத்தை படத்தில் வலுகுன்றச்செய்து பெண் மீதான அனுதாபத்தை ஏற்படுத்த முனைகிறீர்கள். பயணிக்கும் வீரர்கள் படத்தில் இதுபோலான தன்மை அமைந்திருந்தது.


      உண்மைதான். நான் ஆணாதிக்க தன்மையை ஆதரிக்க விரும்பவில்லை. உண்மையில் எந்த சமுதாயமும் ஆண்குறியினை மையமாகக் கொண்டிருப்பது அனைவருக்கும் இடையூறான ஒன்றேயாகும். கிரீஸ் மற்றும் இத்தாலி சமுதாயம் ஆண் மையப்படுத்தப்பட்ட சமுதாயம்தான். இவை நிச்சயம் மாற்றம் பெற்று வருகின்றன. பெண்கள் புதிய சுதந்திரங்களை பெற்றுவருகிறார்கள் என்று கருதுகிறேன்.