தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 3 -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
ஆண்கள் இதை ஒப்புக்கொள்வார்களா?
நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). என்னுடைய முதல் படமான
மறுகட்டமைப்பு படத்தினைப் பாருங்கள். பெண்ணின் பார்வையில் கதையினைக் கூறி, மனைவி
கணவனை ஏன் கொன்றாள் என்று கதை அவளது பார்வையில் பயணிக்கும். பயணிக்கும் வீரர்கள்
படத்தில் தன் முன் உடையைக் கழற்றும் ஆணைப் பார்த்து பெண் சிரிப்பாள். இப்படி
காட்சிகளை உருவாக்கியதால் நான் பெண்ணியவாதி என்று அர்த்தம் அல்ல. பாரம்பரியமான
கருத்தியல்களுக்கு நான் எதிராக இருக்கிறேன். ஆண், பெண், கருப்பு, வெள்ளை அல்லது
மஞ்சள் என இவர்களை ஊக்கப்படுத்தி மூளைக்கும் உடலுக்குமான தொடர்பை ஏற்படுத்த
வேண்டும்.
பல திரைப்பட இயக்குநர்கள்
தொலைக்காட்சி, காணொளி மற்றும் கணினியின் யுகத்தில் தனிப்பட்ட இயக்குநர்கள்
என்பவர்களின் படங்களுக்கான நேரம் இனி இல்லை; அவை முடிந்துவிட்டது; சினிமா
என்பதற்கான காலமே இறந்தகாலம் ஆகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்களே?
இல்லை. உலகத்திற்கு சினிமா என்பது
எப்போதையும் விட இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது. நாம் வாழும் உலகம் அடையும்
சீர்கேட்டிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்கான இறுதி பாதுகாப்பு வடிவம் என்று
இதனையே கூறமுடியும். எளிமையான மனிதர்களில் தொடங்கி முக்கியமான மனிதர்கள் வரையிலான
அரசியல், படம், கலாச்சாரம், வணிகம் குறித்து பேசுவதாக பலரும் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
தி சஸ்பெண்டட் ஆப் தி ஸ்டோர்க் படமானது இன்றைய உலகில் இருக்கும் மன அழுத்தங்களை
கோபங்களை சரியாக பிடித்திருக்கிறது.
எல்லைகளை, எல்லைக்கோடு, மொழிகளின் கலப்பு, வீடற்ற மற்றும் தேவையற்றவர்களாக
கருதப்படும் அகதிகள்என புதிய மனிதநேயத்தை வேறுபட்ட வழியில் கூற முயற்சிக்கிறேன்.
ஆனால்
பெரும்பாலான மக்கள் உங்கள் படங்களை இன்று காணொளியாக அல்லது தொலைக்காட்சி வழியாகவே
பார்க்கிறார்கள் ஒழிய திரையரங்கு சென்றல்ல. நிலப்பரப்பு, படப்பிடிப்புச் சூழல்,
அதற்கு தொடர்பான கதாபாத்திரங்கள் என உங்களைப் போன்றவர்களுக்கு இது கடுமையான வருத்தத்தை
ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
துரதிர்ஷ்டமாக நீங்கள் கூறுவது சரிதான்.
தனிப்பட்டரீதியில் காணொளி தட்டில் எனது படங்களை மக்கள் காண்பதை விரும்பவில்லை.
ஒவ்வொருவரையும் நான் திரையரங்கு சென்றே காணக்கூறுவேன்.
நீங்கள்
மேற்கொள்ளும் துல்லியமான ஒன்றிணைப்பு என்பதற்கான தூண்டுதலை பைஸன்டைன் மரபில் வரும்
அடையாள ஓவியங்களிலிருந்து பெற்றீர்களா?
தூண்டுதல் அதிலிருந்து பெற்றதுதான். நீங்கள்
வளர்ந்து வருகிற இடம், அந்த கலாச்சாரம் உங்களுக்குள்ளும் வளரக்கூடும்.
குறிப்பிட்டு கூற வேண்டுமெனில் சிறுவயதில் நான் சென்று வந்த தேவாலயம் என்னுடைய
கலாச்சார தன்மைகளுக்கு அடிப்படையாக அமைந்தது(மதரீதியாக அல்ல). மெக்
அலெக்ஸாண்ட்ரோஸ் முழுமையாக க்ரீக் பாரம்பரியத் தன்மையில் இசை, அது சார்ந்த
மனிதர்கள் என்று அமைந்த திரைப்படமாகும். மரபான பாரம்பரியம் அல்லது பைஸென்டைன்
தூண்டுதல் என்பது க்ரீக் மரபின் முழுமையான தன்மை என்று கூறிவிடமுடியாது. மெக்
அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் மரபான நிழல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் வரும் கரங்கையோசிஸ்
எனும் கலையை அப்படியே நகலெடுத்து பயன்படுத்தியிருப்பேன்.