இடுகைகள்

ஆப்கானிஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கியமான தெற்காசிய ஆவணப்படங்கள்!

படம்
  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020 கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன் கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  2021 ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில், தாலிபன் எப்படி வென்றார்கள், நேட்டோ படை அங்கு தோற்றுப்போனதையும், பெண்கள் பாதிக்கப்பட்டதையும் ஆவணப்படம் விளக்குகிறது.  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன்  2019 வங்கதேசம் ப்ரோசூன் ரஹ்மான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. புலம் பெயர்ந்த ரோஹிங்கயா முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பற்றியது. மியான்மரிலிருந்து விரட்டப்பட்டு இனத்தூய்மை நாடாக அது மாறியதைப் பற்றி பேசுகிறது.  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020  பாகிஸ்தான்  சயீத்கான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. முஜ்ரா எனும் கலாசாரத்தை முக்கியத்துவப்படுத்தியுள்ளது. மூன்று நடனப் பெண்மணிகள் வாழ்க்கையைப் பேசுகிறது. இவர்கள் மதம் சார்ந்த பல்வேறு மிரட்டல்களை சந்தித்தாலும் நடனத்தை தொடர்ந்து வருவதை காட்சிபடுத்துகிறது. 

தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

படம்
  தாலிபன்கள் சிறு குறிப்பு 1866 பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது.  1919 தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  1977 பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.  1980 பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர்.  சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது யாருக்கு சாதகம்?

படம்
                ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறு்ம் அமெரிக்கா அமெரிக்க அதிபரான பைடன் , ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியுடன் முழுமையாக விலகும் என்று அறிவித்திருக்கிறார் . அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் இருபதாவது ஆண்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . டிரம்ப் ஆட்சியின்போது ஆப்கனில் தாலிபன்களுடன் ஆட்சியைப் பகிர்வது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றது . அதில் அல்கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டன . ஆனால் பைடனின் அதிகாரத்தில் இதுபோல எந்த விதிமுறைகளும் கிடையாது . . ஆப்கனில் 3500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் . கூடுதலாக நேட்டோ படையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் உள்ளனர் . விரைவில் இவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட வாய்ப்புள்ளது . அதற்கான அறிவிப்பும் விரைவில் அறிவிக்கப்படலாம் . அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் , தாலிபன்கள் ஆப்கானில் பலம் பெறுவார்கள் . ஆப்கானிஸ்தானில் 325 மாவட்டங்கள் உள்ளன . அதில் தாலிபன்கள் 76 மாவட்டங்களை ஆள்கிறார்கள் சதவீத அளவில் இதனை 19 சதவீதம் எனலாம் .

அமெரிக்கா - தாலிபான் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு முக்கியப் பங்குண்டு!

படம்
express tribune அமெரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான தூதராக ஜல்மய் காலிஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொது முடக்க காலத்திலும் கூட டில்லிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு பற்றி அவரிடம் பேசினோம். உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது? அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் தோகாவில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆப்கன் அரசும், தாலிபான்களும் தங்களுடைய தரப்பில் கைதாகியுள்ள வீரர்களை விடுவிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை தீவிரவாத செயல்பாடுகளை அந்நாட்டிற்கு எதிராக செய்யக்கூடாது. போர் நிறுத்தம் அரசு, தாலிபன் ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான அம்சங்கள். இந்தியா இந்த ஒப்பந்தம் சார்ந்து முக்கியமான பாத்திரத்தை வகிப்பதால், டில்லியில் இதுபற்றிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவிற்கான பங்கு என்பது வெறும் பேச்சு அளவில் மட்டும்தானா? செயல்பாடுகள் அளவில் இந்தியாவ

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் படுகொலை!

படம்
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! காபூலில் பத்திரிகையாளர் சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தப்பட்டார். அதற்கு பயப்படாமல் செயல்பட்டவரை தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்தனர். கடந்த சனிக்கிழமை காலையில் பொது இடத்தில் மேனா மங்கல் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அங்குள்ள பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது. பொதுஇடத்தில் அரசியல் விமர்சகராக செயல்பட்ட பத்திரிகையாளரை சுட்டுக்கொன்றுள்ளது நீதி அமைப்புக்கு விடப்பட்ட சவால். காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டியது அவசியம் என்கிறார் அரசியல் விமர்சகரான மரியம் வர்தாக். கொல்லப்படுவதற்கு முன்பாகவே தீவிரவாத அமைப்புகள் மேனாவைக் கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் பின்னர் இவர்களை கைது செய்தாலும், மேனாவின் குடும்பம் பணம் கொடுத்து அவரை மீட்டுள்ள செய்தி ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பெண்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மத அமைப்புகளால் கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேனா மங்