இடுகைகள்

வசதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

படம்
  குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.  2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.  வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் முன்னணி வகிக்கி

புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

படம்
  புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக.. மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம்.  2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை.  சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே