இடுகைகள்

டெங் ஷியாபோபிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!

படம்
      சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் ரிச்சர்ட் ஸ்மித் ப்ளூடோ பிரஸ் சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது. சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே ...

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை

படம்
           book review சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை டெங் ஷியாபோபிங் அண்ட் தி சைனீஸ் ரிவல்யூஷன் அரசியல் சுயசரிதை டேவிட் எஸ் ஜி குட்மேன் ரூட்லெட்ஜ் பதிப்பகம் டெங் ஷியாபோபிங்கை முன்னிறுத்தாமல் இன்று ஷி ச்சின்பிங் எந்த உரையையும் தொடங்கி முடிப்பதில்லை. சீனர்களுக்கு தேசியக்கட்சியோடு போரிட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது மாவோ என்றால், அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்தவர், டெங் ஷியாபோபிங். 1976 தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை சீன அதிபராக இருந்த டெங் செய்த ராணுவ, பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே சீனா, இன்று பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது, சீனா தனது நாட்டை வளர்ச்சிக்காகத் திறந்துவைத்தாலும் அதன் கலாசாரத்தை ஆன்மாவை முழுக்க இழந்துவிடவில்லை. சோசலிசச்தை சீன கலாசாரத்தோடு இணைந்து திட்டங்களை தீட்டி முன்னெடுத்தவர் டெங். இந்த நூல், டெங்கின் அரசியல் வாழ்க்கையை விரிவாக அலசுகிறது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அங்குள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம், அ...