கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!
இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்! சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நி...