இடுகைகள்

கவுசிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

படம்
  சாவு கப்புரு சல்லாக தெலுங்கு இயக்குநர் – கவுசிக் பெகல்படி இசை – ஜேக்ஸ் பிஜோய் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை. குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார். பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம். சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்துவிட