இடுகைகள்

கண்காட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!

படம்
  சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.  சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.  சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்

இந்த வாரம் முழுக்க நடைபெறும் பிரபல விழாக்கள் - ஒரு பார்வை

படம்
இந்த வாரம் நடைபெறும் விழாக்கள் விழாக்கள் ஆதிவாசி திருவிழா ஜன.26-பிப்.9 வரை ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் திருவிழா. இதில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்கின்றனர்.  தம் கலாசார விஷயங்களை பார்வையாளர்களுக்கு கலை, உணவு, இசை, நடனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். சிலிகா பறவைத் திருவிழா  ஜன.27-28 ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கலஜோடி சதுப்புநிலம் மற்றும் நலபானா ஆகிய இடங்களில் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை, சுற்றுலாத்துறை நடத்துகிறது. புகைப்பட கண்காட்சி, பறவைகளை பார்த்தல், பறவைகளைப் பற்றிய செய்திகளை கூறுவது என நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ரீத் 2020  ஜன.29 -பிப்.2 ராஜஸ்தானின் நடைபெறும் கலைவிழா. கைவினைப்பொருட்கள், இசை, சூஃபி நடனம், இசையோடு தியானம் என களைகட்டும் விழா இது. ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீரில் உள்ள நச்சானா ஹவேலி, நாராயண நிவாஸ் பேலஸ் ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது.  இந்தியா கலை விழா ஜன.30 - பிப்.2 2008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெறும் விழா. டில்லியிலுள்ள ஓக்லா தொழிற்