இடுகைகள்

ஆர்வம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியமா? காதல் என்ற உறவு, திருமணம் என்ற இடத்தை எட்டும்போது சட்டப்பூர்வமாகிறது. நிலைத்து நிற்கும் உறவு என்பதை திருமணமே சாத்தியப்படுத்துகிறது என பலரும் கருதுகிறார்கள். அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, 57 சதவீதம் பேர் பதினைந்து வயது தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறியது. 44 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடிவருகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், வீட்டில் ஒற்றை மனிதராக தனியாக வாழ்வது என எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் உள்ளன. இவைதான் திருமணத்திற்கு தடையா? ஆண், பெண் என இருபாலினத்தவரும் ஒன்றாக வாழ திருமணம் மட்டும்தான் ஒரே வாய்ப்பாக உள்ளதா என்று கேட்டால் இல்லை. திருமணம் செய்துகொள்பவர்கள் இன்றுமே அதிகமாக உள்ளனர். அதற்கு கிராமம், நகரம் ஆகியவற்றில் நிலவி வரும் சமூக அழுத்தம் காரணமாக இருக்கலாம்.  திருமணம் தரும் பயன்கள் என்னென்ன? திருமண...

நான்கு நிமிடத்தில் செய்திகளை கதைபோல எளிமையாக விளக்கும் பேப்பர்கிளிப்!

படம்
        நாளிதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள் என நிறைய வாசிப்போம். அதிலுள்ள செய்திகளை முக்கியம் என்றால் குறித்துவைப்போம். அல்லது அதை எழுதும் பழக்கம் இருப்பவர்கள் உடனே கட்டுரையாக எழுதி விடுவார்கள். இப்படியான செய்திகளை பிறருக்கு கதைபோல சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. நவீன காலத்தில் இப்படியான பாணி செய்திகள், கட்டுரைகள் பலருக்கும் தேவைப்படுகிறது. பேப்பர்கிளிப் தளத்தில் நாளிதழ், டிவி சேனல், இணைய கட்டுரைகள் என பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை சேகரித்து அதை கதையாக மாற்றுகிறார்கள். நான்கு நிமிடங்கள் போதும். அழகான ஒரு ஊக்கமூட்டும் கட்டுரையைப் படித்துவிடலாம். உதாரணத்திற்கு காந்தியால் தாக்கம் பெற்ற டெக் ஆளுமை ஒருவரைப் பற்றி பார்ப்போம். ஆப்பிள் நிறுவனத்தை எலக்ட்ரானிக்ஸ் சார்ந்து திசை திருப்பிய தலைவர்களில் ஒருவர், ஸ்டீவ் ஜாப்ஸ். அவர், தனது இளமைக்காலமான பத்தொன்பது வயதில் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்திருக்கிறார். பிறகு, ஆப்பிளில் இருந்து பணி விலக்கப்பட்டபோதும், தேறுதலுக்காக இந்தியாவை நாடியிருக்கிறார். அவர் இந்தியாவில் இருந்து காந்தியின் இயல்பைப் புரிந்துகொள்ள முயன...

ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது.  ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா அப்படி ஒரு சக...

குத்துச்சண்டை மக்களுக்கு ஆர்வமூட்டுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி இயல்பாகவே இருவர் சண்டை போட்டால் அதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதே ஏன்? உடனே இதனை போபியா என்று கூற முடியாது. பெண்களை மணக்க ஆண்கள் ஒருவருடொருவர் போடாத சண்டையா என்ன? இதனால்தான் வண்டி விபத்தாவது முதல் ட்ராபிக்கில் வண்டியை மேலாப்பில் உரசினவர் வரை வாங்கிப் போட்டு குத்தினால் கூட வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறது. மக்களின் ஆதிகாலத்து இயல்பை காசு பண்ணத்தால் குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கின. இதன் காரணமாக பிற விளையாட்டுகளை விட தற்காப்புக்கலை சார்ந்த போட்டிகள் பிரபலமாகி வருகின்றன. தன்னுடைய வலிமை மற்றவருடையதை விட அதிகம் என்று நினைப்பதுதான் இப்போட்டிக்குக் காரணம். நன்றி - பிபிசி 

செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி மனிதர்கள் ஏன் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்? காரணம் இது மரபணுரீதியான தன்மை.  மனிதர்களின் மூளையில் உணவுத்தேவைக்கான கேள்வி எழுப்பும் அதனை தேடச்சொல்லும் பகுதிதான் செய்திகள், உண்மை, ஃபேஸ்புக் கிசுகிசு, லைட்ஸ் ஆன் சுனில் பகுதியில் மஞ்சள்தேக நடிகை பற்றியும் அறிந்துகொள் என்று கூறுகிறது. எனவே இதெல்லாம் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளத்தான். அதனால என்னாகும என்று கேட்காதீர்கள். எதற்காவது உதவும் என வைத்துக்கொள்ளுங்களேன். நன்றி: பிபிசி