இடுகைகள்

வில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போரில் அடிபட்டு வீழ்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் மாவீரன்!

படம்
  வாரியர் ஃபிரம் ஸ்கை சீனமொழித் திரைப்படம் ஐக்யூயி ஆப்  பனி சூழ்ந்த பகுதி. அங்கு ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து வீரன் ஒருவன் வெளியே வருகிறான். அவனுக்கு தான் யார், தன் பெயர் என ஏதும் நினைவில் இல்லை. அதை அறிய முயல்கிறான். அந்த முயற்சியில் தீய சக்தியை எதிர்கொண்டு வெல்கிறான். இதுதான் படத்தின் கதை.  சொர்க்கத்தில் போரிட்ட வீரன், எதிர்பாராதவிதமாக அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து விழிக்கிறான். அவனது சக்தி, பூட்டப்பட்டு உள்ளது. பயன்படுத்திய ஆயுதங்கள் காணவில்லை. தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.  படத்தின் தொடக்கத்தில் துறவி ஒருவருடன் சண்டை போடுகிறான். அவர், அவனின் நான்கு பிறவிகளை தனது சக்தி மூலம் தெரிந்துகொண்டு விடைபெற்று போய்விடுகிறார். போகும்போது, அவனை பூமிக்கு தள்ளிவிட்டு செல்கிறார். நேரே அவன் குளம் ஒன்றில் விழுகிறான். அங்கு சூ நாட்டு  இளவரசி குளித்துக்கொண்டிருக்கிறாள். பிறகு என்ன, அவனைப் பிடித்து கட்டிவைத்து உதைக்கிறார்கள். ஆனால் சென் சான் எனும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. தான் எங்கு எந்த கால