இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சினிமாவில் நடக்கும் மாற்றங்களை நான் ஏற்றுகொள்கிறேன்! - அமிதாப் பச்சன்

படம்
விகடன் அமிதாப் பச்சன், இந்தி திரைப்பட நடிகர் குலாப் சித்தாபோ படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்? இயக்குநர் சூஜித் சிர்கார். அவர்தான் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரமாக என்னை ஈர்த்தார். அவருடன் முன்பே நீங்கள் வேலை செய்து இருக்கிறீர்கள் அல்லவா? சூஜித் தன்னுடைய கதாபாத்திரம், அதன் முடிவுகள் பற்றிய தீவிரமான தன்மையைக் கொண்டிருப்பார். நீங்கள் அவரிடம் உங்கள் பார்வை, கருத்துகள் ஆகியவற்றை கூறினாலும் கூட அவர் கொண்டிருக்கும் கருத்து அடிப்படையில் அதுவே முதன்மை பெறும். கதாபாத்திரங்கள் மீது அவருக்கு உள்ள காதல்தான் அவரது படத்தை பேசவைக்கிறது. ஆயுஷ்மான் குரானாவோடு பணியாற்றிய அனுபவத்தை சொல்லுங்கள். அவர் திறமையான நடிகர். நீங்கள் பல்லாண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். டிஜிட்டல் கேமரா, நேரடியான ஒலிப்பதிவு என பல்வேறு மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்? நான் திரைத்துறையில் 51 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த மாற்றங்களை ஏற்காவிட்டால் நான் இத்துறையில் இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றியிருக்க முடியாது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

டிஜிட்டலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வதும் சரியானது! - இயக்குநர் சூஜித் சிர்கார்

படம்
ஆனந்த்பஜார் இயக்குநர் சூஜித் சிர்கார், இந்தி திரைப்பட இயக்குநர் குலாப் சித்தாபோ படம் அதன் வகை அடிப்படையில் வித்தியாசமாக இருக்கிறது. எப்படி இந்த கதையைப் பிடித்தீர்கள். நான் படத்தின் எழுத்தாளர் ஜூகி சதுர்வேதியோடு அமர்ந்து யோசித்தபோது இந்த கதை பிடிபட்டது. நான் இந்த நையாண்டி வகை சினிமாவை எடுத்தது இல்லை என்பதால் உங்களுக்கு படத்தின் தன்மை புதிதாக இருக்கிறது. லக்னோவில் உள்ள நில உரிமையாளர், அவரது கட்டடத்தில் குடியிருப்பவர்கள், அவர்களது பிரச்னைகள், அவர்களது சிந்தனை என பல்வேறு விஷயங்கள் படத்தில் பேசப்படுகிறது. பிகு படத்திற்கு பிறகு அமிதாப் இந்த படத்தில் நடிக்கிறார் அல்லவா? நாங்கள் இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போது அவரை அணுகிவிட்டோம். கதையைக் கேட்டதும் அவர் நடிக்க சம்மதித்துவிட்டார். அவர் இயக்குநரின் கதை, அவரது பார்வையை மதிப்பவர். மேலும் பிற நடிகர்களோடு இணைந்து நடிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. கதாபாத்திரம், அதன் தோற்றம், உடல்மொழி என அனைத்திற்கும் மெனக்கெடும் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது. டிஜிட்டல் வெளியீடு பற்றி எப்படி முடிவெடுத்தீர்கள்? ஏப்ரல் 17ஆம் தேதி படத்தை தியேட்டரில்

ஆரம்பநிலை சுகாதாரத்திலேயே நாம் நின்றுகொண்டிருக்க முடியாது! - இந்து பூஷன் - ஆயுஷ்மான் பாரத்

படம்
cc மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை ஆயுஷ்மான் பாரத், இயக்குநர் இந்து பூஷன்  திட்டம் தொடங்கி இருபது மாதங்களாகிறது. இயக்குநராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன? இத்திட்டத்தை தொடங்கி ஓராண்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. எங்களது ஐடி குழு, திட்டத்தை நாடு முழுக்க விரிவு செய்ய முயன்று வருகிறது. மேலும் மக்கள் அதிக விலையில் திட்டம் இருந்தால் அதனை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். குறைவான கட்டணம் இருந்தால் நிறைய விஷயங்களை புறக்கணிக்கின்றனர். எனவே நாங்கள் முக்கியமான சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கவனம் கொண்டுள்ளோம்.  பல்வேறு மருத்துவமனைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு செல்ல முயன்று வருகிறோம். மாநிலங்கள் இத்திட்டத்தை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.  மக்களில் 30  சதவீதம் பேரை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தகவல்சேகரிப்பில் ஏன் இப்படி பிழைகள் நடக்கின்றன? நாங்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேரை இத்திட்டத்திற்கு உள்ளே கொண்டு வர நினைத்துள்ளோம். இதற்கு 2011ஆம் ஆண்டு எடுத்த சமூக பொருளாதார கணக்கெடுப்பை இத்திட்டத்திற்கு அடிப்படையாக கொண்டுள்ளோம். இத்திட்டத்தில் சில பிரச்னைகள்

நோயாளிகளை நாங்கள் தேடிச்சொன்று கொண்டிருக்கிறோம்! - சுரேஷ் கஹானி

படம்
cc கூடுதல் கமிஷனர்  சுகாதாரம் - சுரேஷ் கஹானி  நீங்கள் கோவிட் -19 நோயாளிகளிடம் பணியாற்றி வருகிறார்கள். என்ன மாதிரியான பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிக்கிறீர்கள்? துளசி, கரும் மிளகு, கிராம்பு ஆகியவற்றை சாப்பிடுகிறேன். ஏழு வாரங்களாக ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை சாப்பிட்டுள்ளேன். குறிப்பிட்ட இடைவெளிகளில் கைகளை கழுவி வருகிறேன்.  ஜூலை மாதம் பெருந்தொற்று எப்படி இருக்கும்? பருவகாலம் பெருந்தொற்று விவகாரத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம். மேலும் விரைவில் நாங்கள் பெருந்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்.  மகராஷ்டிரத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் நிறைய குழப்பம் நிலவுகிறதே ஏன்? நாங்கள் முதலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்தோம். இதன் காரணமாக, இறந்துபோன கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை கணக்கிடவில்லை. பின்னர், நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளிடம் நோயாளிகளின் இறப்பு பற்றிய எண்ணிக்கை கேட்டுள்ளோம்.  நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.  ரெம்டெசிவிர் மருந்தை எப்படி பெறப்போகிறீர்கள்? நாங்கள் இம்மருந்தைப்

பதற்றமாக இருக்கும்போது சிரிப்பு வருவது ஏன்? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
cc மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் வைத்தால் சூப் ஏன் வெடித்து சிதறுகிறது? மைக்ரோ ஓவனில் சமச்சீரற்ற முறையில் வெப்பம் பரவுவதால் சூப்பில் குமிழ்கள் தோன்றி, உள்ளே வெடிக்கிறது. இதற்கு காரணம், சூப் நீர் தன்மையைக் கொண்டுள்ளதுதான். எனவே சூப்பை உள்ளே வைத்துவிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்க அமர்ந்துவிடாமல் ஐந்து நிமிடத்தில் டக்கென எடுத்துவிட்டால் மைக்ரோ ஓவனை வாஷிங்மெஷினுக்கு உள்ளே போட்டு கழுவும் அவசியம் நேராது. கடலில் தோன்றும் அலைகள் குமிழ்களோடும் பாறைகளில் மோதி சிதறும்போதும் வெள்ளையாக தெரிவது ஏன்? கடல் பரப்பில் உள்ள காற்று அழுத்தமே இதற்கு காரணம். மேலும் இதில் புவியின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, அலைகள் உருவாகி குமிழ்கள் உருவாகிறது. வெள்ளையாக தெரிவதற்கு காரணம், வெளிச்சம் அதன் மீது செயல்படும் முறைதான். உடற்பயிற்சி செய்து முடிந்ததும் உடலில் வெங்காயத்தின் வாசனை வருகிறதே ஏன்? அபோகிரைன், எக்கிரைன் என்ற இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் உடலில் உள்ளன. அபோகிரைன் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடை இடுக்கு ஆகியவற்றில் உள்ளன. இவை மனதில் பதற்றம், வலி ஆகியவை ஏற்படும் அபரிமிதமாக சுரக்கின்றன. எக

குறட்டையொலி கேட்டு நாம் ஏன் எழுவதில்லை? - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி விலங்குகளுக்கு மதம் உண்டா? மனிதர்கள் தவிர்த்த விலங்குகளுக்கு மதம் கிடையாது. ஆனால் அவை தம் இனம் சார்ந்த விலங்குகளுக்கு ஆபத்து நேரும் போது குறிப்பிட்ட முறையில் அதனை எதிர்கொள்கின்றன. இதில் முக்கியமானது, யானை. தன் இனத்தைச் சேர்ந்த யானை விபத்தில் பலியானால் தம் கூட்டத்தை கூட்டி அஞ்சலி செலுத்தும். ஆர்கா திமிங்கலம் தனது குட்டி ஒன்றை பறிகொடுத்துவிட்டது. இறந்துபோன அதன் உடல் அருகே இரு வாரங்கள் சுற்றி வந்துவிட்டு பின்னரே சென்றது. விலங்குகள் தங்களுடைய மகிழ்ச்சியை, வேதனையை பல்வேறுவிதமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றின் மூளையை நெருக்கமாக ஆராய்ந்தால்தான் இதற்கு என்ன பதில் என்று கண்டறிய முடியும். நாம் குறட்டை விடும்   ஒலி நமக்கே கேட்பதில்லையே ஏன்? காரணம், நாம் விடும் குறட்டை ஒலி நம் காதுகளுக்கு கேட்டாலும் அதனை தீவிரமாக உணராதபடி மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கும். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது பெயரைக் கேட்டால் நீங்கள் உறக்கம் கலைந்து எழுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஒலி கூட மூளைக்கு குறைவாக கேட்கும். இதனால் வேறுபுறம் திரும்பி படுப்பது நடக்கும். க

பருவச்சூழல் மாறுபாடும், வெப்பமயமாதலும் ஒன்றுதானா?

படம்
pixabay பருவச்சூழல் மாறுபாடும் வெப்பமயமாதலும் ஒன்றுதானா? மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகள் மூலமாக பசுமை இல்ல வாயு அதிகரிக்கிறது. இதனால் பருவச்சூழல்களில் வெப்பமும், குளிரும், மழையும், வெயிலும் மாறி மாறி வருகிறது. வெப்பமயமாதல் என்பதை வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு சீசனுக்கு சீசன் உயர்வதை சுட்டிக்காட்டலாம். ஆனால் பருவச்சூழல் மாறுபாட்டையும் வெப்பமயமாதலையும் அப்படியே பலரும் கலந்துசொல்ல தொடங்கிவிட்டார்கள். பருவச்சூழல் சிதைவு என்ற இன்னொரு வார்த்தையையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம். பருவச்சூழல் மாறுவதற்கான ஆதாரங்கள் என்ன? 1850 வரை உலகில் வெப்பநிலை பெரிதாக எகிறவில்லை. ஒரு சதவீதம்தான் வெப்பநிலை உயர்ந்திருந்தது. 2015ஆம் ஆண்டு வரை நாம் ஐந்து வெப்பமான ஆண்டுகளைக் கண்டிருக்கிறோம். 2018ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, கடல்நீர் மட்டம் கடந்த 25 ஆண்டுகளில் 7 செ.மீ உயரம் அளவுக்கு அதிகரித்துள்ளது நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியான செய்தி அல்ல. அதேநேரத்தில் 2002 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் க்ரீன்லாந்து, அன்டார்டிகா பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இதன் அளவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 28

சிறுகுறு தொழிலகங்களை வலுவாக்கினால்தான் தற்சார்பு இந்தியா நிஜமாகும்! - ரவி வெங்கடேசன்

படம்
ஜிபி ரவி வெங்கடேசன் தொழில்துறை வல்லுநர் சிறுகுறு தொழில்கள் பற்றிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து உள்ளீர்கள். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? இந்தியாவில் 60 மில்லியன் (1 மில்லியன் – 10 லட்சம்) தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 110 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் உழைப்பில்தான் நாட்டின் உற்பத்தி 25 சதவீதம் உருவாகிறது. பெரும் தொழில்நிறுவனங்கள் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்றி இயங்க முடியாது. தொழில்துறையின் முதுகெலும்பாக சிறு குறு தொழிலகங்கள் விளங்குகின்றன. பெருந்தொற்று காரணமாக இத்துறையில் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. நம்மிடமுள்ள 20 ஆயிரம் நிறுவனங்கள் பத்துகோடி முதலீடு கொண்டவையே. மேலும் இவற்றில் பத்துபேர்களுக்கும் குறைவான பணியாட்களைக் கொண்ட நிறுவனங்கள் 98 சதவீதமாக உள்ளன. இதனால் நாம் இந்த நிறுவனங்களை முறைப்படுத்தி மேம்படுத்தாமல் தற்சார்பு இந்தியா என்று பேசுவது தவறானது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதும் கடினமானது. சீனாவை எதிர்கொள்ள முடியாது என்று எப்படி கூறுகிறீர்கள். விளக்கமாக கூறுங்களேன். இந்தியாவில் நடைபெறும் விழாக்களுக்கான விநாயகர் சிலைகள், குழந்தைகள

நியூஸ் ரூம்: மாணவர்களை கற்க ஊக்கப்படுத்தும் ஜானகி டீச்சர்!

படம்
ஆஹா வெளிப்படைத் தன்மை! கேரள அரசு ஆட்டிசக்குறைபாட்டிற்கு தெரபி சிகிச்சை அளிக்கும் மையங்களுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 பிரிவு 51இன்படி விதிமுறைகள் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல் படி நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் ஆட்டிசக் குறைபாட்டு சிகிச்சை மையங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெரபி மையங்களை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் 3 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. நியூஸ்மினிட் அட புது வாத்தியார்! சென்னையைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் அபிஷேக், திருமதி ஜானகி என்ற கற்பனை பாத்திரத்தை உருவாக்கி பிரபலமாகி உள்ளார். இப்பாத்திரம் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளித்தேர்வுகள் ரத்தான அறிவிப்பையொட்டி ஜூன் 9 அன்று உருவாக்கப்பட்ட திருமதி ஜானகி பேசும் வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்று வலம்வருகின்றன. இதனை உருவாக்கிய அபிஷேக், பொறியியல் பட்டதாரி ஆவார். அப்படியா? சீனாவின் நடவடிக்கை! ஹாங்காங்கில் சீன அரசு, தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இங்கு தேசிய பாதுகாப்

சினிமாவில் ஜெயிக்க முயலும் உதவி இயக்குநரின் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் ரவுடி! - நேனின்தே 2008

படம்
நேனின்தே இயக்கம்: பூரி ஜெகன்நாத் இசை: சக்ரி ஒளிப்பதிவு: ஷியாம் கே நாயுடு சினிமா துறையில் உதவி இயக்குநர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வருகிறார்கள் என்பதை முடிந்தவரை இயல்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆஹா ரவிதேஜாவின் இயல்பான நடிப்பும், கூர்மையான வசன உச்சரிப்பும் பிரமாதமாக இருக்கின்றன. தன் மீது வில்லன் எச்சிலை துப்பினால் கூட அதை துடைத்துவிட்டு அமைதியாக செல்லும் காட்சி போதும் அவரின் நடிப்பை பற்றி சிலாகிக்க.... படத்தின் வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. காதலியிடம் ரவிதேஜா ஏன் திருமணம் செய்யமுடியாது என்று கூறும் காட்சி, தெருவில் வில்லன்களிடம் பேசுவது, முத்தாய்ப்பாக அமைந்த இறுதிக்காட்சி வசனம் என பிரமாதப்படுத்தியிருக்கிறார். ரவிதேஜாவின் அம்மாவாக வரும் ரமா பிரபா, இட்லி விஸ்வநாத் பிரமானந்தம் என நிறைய கதாபாத்திரங்கள் இயல்பாக உருவாக்கப்பட்டுள்ளன.   சியா, ஆழமான தொப்புளைக் காட்டி கவர்ச்சி காட்டுகிறார். அவரிடம் அதைத்தாண்டி எதிர்பார்க்க ஒன்றுமில்லை. உண்மையில் ரவிதேஜா போன்ற ஒரு மாஸ் நடிகரை வைத்து இயல்பான எதார்த்தமான படம் எடுக்க செம தில் வேண்டும். இயக்குநர் அதை சாதித்திருக்கிறார். அதனாலோ

இஸ்ரோவால் இத்துறையில் பெருகும் தேவையை தீர்க்க முடியாது! - கே.சிவன்

படம்
பிக்ஸாபே இஸ்ரோ மட்டும் ஆதிக்கம் செலுத்திவந்த விண்வெளித்துறையில் இனி தனியார் நிறுவனங்களும் பீடு நடை போடப்போகின்றன. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தங்களை இன்ஸ்பேஸ் என்ற நிறுவனம் கவனிக்கவிருக்கிறது. விண்வெளித்துறையின் செயலரும், இஸ்ரோ அமைப்பின் தலைவருமான கே.சிவனிடம் பேசினோம். இன் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினால் இஸ்ரோ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாதா? அந்த அமைப்பு தனியார் அமைப்புகள் இஸ்ரோவுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை கவனிக்கும். இதற்கென தனி இயக்குநர், குழு உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பை தன்னிச்சையாக இயங்கும் அதிகாரத்தைக்கொண்டது. சந்திராயன் 3 திட்டம் என்னவானது? இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். நாங்கள்முன்னர் அனுப்பிய ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளதால், அடுத்து அனுப்பவிருக்கும் விண்கலனில் ஆர்பிட்டர் இருக்காது. லேண்டர், ரோவர் மட்டுமே இடம்பெற்றிருக்கும். 2022இல் விண்வெளி வீரர்களை விண்கலனில் அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? பெருந்தொற்று காரணமாக ரஷ்யாவில் வீரர்களுக்கு கிடைத்த பயிற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது? பிரதமர் 75 ஆவது க

இசெக்ஸ் முறைக்கும் மாறும் பாலியல் தொழிலாளர்கள்! - நோ டச் செக்ஸ்- டிஜிட்டலாகும் செக்ஸ் தொழில்

படம்
பிக்ஸாபே இ- செக்ஸ்: செக்ஸ் துறையில் உருவாகும் புதிய ஐடியாக்கள் இந்தியாவில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள் பெருந்தொற்று சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியால் தங்களை புதுப்பித்து தொழிலுக்கு திரும்பியுள்ளனர். கோவிட் -19 தொற்று காரணமாக, செக்ஸ் சாட், வீடியோ செக்ஸ் என புதிய கலைவடிவத்திற்கு பழகிவருகின்றனர். சிவப்பு விளக்கு பகுதிகள் மட்டுமல்ல பெங்களூரு போன்ற நகரங்களிலுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாலியல் தொழிலை நடத்துவதற்கான வழிமுறைகளை சமூக அமைப்புகள் கற்றுத்தந்து வருகின்றன. இதில் பணத்தை இவாலட் மூலம் பெறமுடியும். தமிழகத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் அமைப்புரீதியாக இல்லை. பெருந்தொற்று காலத்தில் அவர்கள் குழந்தை, குடும்பங்கள் என வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வருமான வாய்ப்பாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழியாக வாடிக்கையாளர்களை அணுகுவதுதான் புதிய முறையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு செய்து பெண்களை பார்த்துவிட்டு, தங்களுக்கு பிடித்திருந்தால் அதில் அவர்களுடன் தொடர்புகொள்கின்றனர் 30 நிமிடங்களுக்கு 500 ரூபாய் என கட்டணம் விதித்த

சீனத்துக்கு கடத்தப்படும் அத்திமலைத்தேவன்! - பல்லவர்களின் வீழ்ச்சி

படம்
அமேஸான் அத்திமலைத்தேவன் -2 காலச்சக்கரம் நரசிம்மா வானதி ப.496 இந்த பாகத்தில் முழுக்க சமுத்திர குப்தனின் எழுச்சி, பல்லவர்களின் படிப்படியான வீழ்ச்சி பௌத்த துறவிகள் மூலமாக எப்படி நடைபெறுகிறது என காட்டியுள்ளார்.  நாவலில் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் நடக்குமோ என நினைக்கும் இடத்தில் எல்லாம் நோக்குவர்மம், வர்மக்கலை ஆகியவைதான் இடம்பெறுவதால்,சற்று விரக்தி தோன்றுகிறது.  இந்த நாவலும் முழுக்க அரசு குடும்பம், அங்கு நடைபெறும் சூழ்ச்சி, அதை எப்படி முறியடிக்கின்றனர் என்பதை மட்டுமே பேசுகிறது. வேறு விஷயங்கள் இதில் பேசப்படவில்லை.  பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும் அருள் பாலித்த காஞ்சி வரதர் இம்முறை பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு சீனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதுதான் கதை  குப்த வம்சத்தில் பிறக்கும் ஆர்யன், விவேகன், சுவேதன் ஆகியோரில் யார் சமுத்திர குப்தன் என்பதை அறியும் சோதனை, அறிந்தபிறகு அவனுக்கு மகுடம் சூட்டும் விழா, சமுத்திர குப்தனை கொல்ல  நினைக்கும் சகோதரர்கள், அவர்களுக்கு உதவம் துரோகிகள் என வாசிக்க நிறைய திருப்பங்கள் உள்ளன. பரபரப்பான பல்வேறு சம்பவங்களை நிறைத்துள்ளத

நியூஸ் ரூம்- ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து !

படம்
ஓஹோ ஸ்மார்ட் லாக்டௌன்! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் ஜூன் 30 வரை உள்ளது. இதற்குப்பிறகு நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் ஸ்மார்ட் லாக்டௌன் அமலாக வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று உள்ள தெருக்களில் தீவிரமாக கண்காணித்து புதிய நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ஸ்மார்ட் லாக்டௌன். இம்முறையில் திரு.வி.க நகர், கே.கே. நகரில் எம்.ஜிஆர் நகர் ஆகிய பகுதிகள் பாதிப்பிலிருந்து நீங்கியுள்ளன. அடச்சே! ஆப்கனில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். சர்க்கி எனும் பகுதியின் அருகே பயணி ஒருவரின் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு செயல்பாட்டாளர்களின் இறப்பிற்கு, ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. ஆஹா கொரோனா குழந்தைகள்! கோவிட் -19க்கு எதிராக உலக நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸில் இதனால் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என

அரிய வகை ரத்தவகையை சேர்ந்த இளைஞனை வேட்டையாடத்துடிக்கும் மாஃபியா கும்பல் - ஒக்கடுன்னாடு

படம்
ஒக்கடுன்னாடு -2007 இயக்கம் சந்திரசேகர் யெலட்டி ஒளிப்பதிவு ஜெயகிருஷ்ண கும்மாடி இசை எம்.எம்.கீரவாணி ஹைதராபாத்திலுள்ள வங்கி ஒன்று வாராக்கடன்களால் திவாலாகும் நிலைமை. வங்கியின் சொத்து ஒன்றை தனியார் ரியல்எஸ்டேட் நிறுவனம் விற்றுக்கொடுத்தால்தான் அதன் இயக்குநர் காவல்துறையில் கைதாகாமல் தப்பிக்க முடியும். அதன் உரிமையாளர் இந்த பணிக்காக அவரது மகனை மும்பைக்கு அனுப்புகிறார். அங்கு வங்கிக்கு சொந்தமாக விருந்தினர் இல்லத்தை விற்க முயலும்போது நிறைய சிக்கல்கள் தோன்றுகின்றன. உரிமையாளரின் மகன் தர்ம காரியமாக ஒருவருக்கு ரத்த தானம் செய்கிறான். அவனின் ரத்தவகை பாம்பே பிரிவைச் சேர்ந்த அரிய ரகம். இதைத் தெரிந்துகொண்டு அவனைக் கொன்று அவன் இதயத்தை சோனா பாய் என்ற மாஃபியா தலைவனுக்கு பொருத்த ஒரு கூட்டமே அலைகிறது. எப்படி இவர்களிடமிருந்து இளைஞன் தப்பினான், சொத்துகளை விற்று தன் அப்பாவைக் காப்பாற்றினானா, சொத்தை விற்பதில் உள்ள தடைகள் என்ன என்பதை சொல்லும் படம்தான் ஒக்கடுன்னாடு.   ஆஹா படத்தின் கான்செப்டே பாம்பே பிளட் குரூப் பற்றியது. டைட்டில் கார்டு ஓடும்போது ராவ் ரமேஷ் குரலில் அரிய ரத்தத்திற்காக என்னென்ன பாடுபடுகி

கல்லூரி இளைஞனுக்கும், தாதாவுக்குமான ஈகோ மோதலும், போரும்! - ரணம் -

படம்
ரணம் 2 006 இயக்கம் அம்மா ராஜசேகர் வசனம்: மருதூரி ராஜா ஒளிப்பதிவு சி.ஹெச். ரமணா ராஜூ இசை மணிசர்மா   கிராமத்தில் அடிதடி என பட்டையைக் கிளப்புகிறான் சின்னா. குடும்பத்தின் கடைக்குட்டி என்பதால் அவனை அப்பாவும் இரண்டு அண்ணன்களும் நல்ல புத்திமதி சொல்லி நகருக்கு படிக்க அனுப்புகிறார்கள். வந்த இடத்தில் சின்னா சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சும்மா இல்லை. அவர் நகருக்குள் வரும்போது முஸ்லீம் ஒருவரை வெட்டிக்கொள்கின்றனர். அதைப் பார்த்தும் கூட அப்பா சொன்ன புத்திமதியை மனதில் வைத்துக்கொண்டு என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு நழுவுகிறான் சின்னா. ஆனாலும் அக்கொலை பற்றி போலீசில் புகார் செய்கிறார்கள். அது சின்னாதான் என்று அவனது கல்லூரிக்கு வரும் ரவுடிகள் அவனை அடித்து துவைக்கின்றனர். டென்ஷன் ஆகும் சின்னா, அவர்களது தலைவன் பகவதிக்கு டார்ச்சர் தர ரெடியாகிறான். அதேசமயம் பகவதியின் தங்கை மகேஷ்வரி சின்னாவை மெல்ல நோட்டம் விடத் தொடங்குகிறாள். இவர்களின் காதல் தெரிந்தவுடன் பகவதி கொந்தளிக்கிறான். எல்லோரும் என்னைப் பார்த்து பயப்பட இந்த காலேஜ் படிக்கிற பையன் என்னை அவமானப்படுத்துகிறான் என பிபி எக

பீகாரைச் சேர்ந்த காதலியை கரம்பிடிக்கும் ஆந்திர போலீஸ்காரனின் அவதாரம்! - ஆந்த்ருடு 2005

படம்
ஆந்த்ருடு 2005 இயக்கம்: பருச்சாரி முரளி வசனம்: விஜய் ஒளிப்பதிவு விஜய் சி குமார் இசை கல்யாணி மாலிக்   சப் இன்ஸ்பெக்ட்ரான நாயகன் சுரேந்திரன், தனது காதலியை பீகாருக்கு சென்று விலங்குகளை உடைத்து அவளை மீட்டு வரும் கதைதான் ஆந்தருடு. ஆஹா தமிழில் இவன்தான்டா போலீஸ் என்ற பெயரில் ரிலீசான படமாம். தெலுங்கில் பார்ப்பது நல்லது. கோபிசந்த் முன்கோபம் கொண்ட போலீசாக மிரட்டியிருக்கிறார். படத்தின் கிளைமேக்ஸ் வரை இயல்பாக நன்றாகவே நடித்திருக்கிறார். கௌரி பண்டிட், நடிப்பில் மோசமில்லை. ஐயையோ கோபிசந்த், கௌரி பண்டிட், கே.விஸ்வநாத் தவிர வேறு யாரையும் கவனத்தில் கொள்ளமுடியவில்லை. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி சிஜி போல தெரிகிறது. இயல்பு கெடாமல் அதனை இயக்குநரால் எடுக்க முடியவில்லை என்பது பரிதாபமான விஷயம். ஆந்திரா, பீகார் இரண்டு நிலப்பரப்புக்குமான தடுமாற்றம் படத்தில் தெரிகிறது. ஆக்சன் வடகறி! கோமாளிமேடை டீம்

மக்களைக் காக்க, தீயவர்களைக் கொல்ல லஷ்மி நரசிம்மராக உருவெடுக்கும் மருத்துவர்! - சிம்ஹா 2010

படம்
சிம்ஹா 2010 இயக்கம்: போயபட்டி ஸ்ரீனு இசை: சக்ரி, சின்னா ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்   அநியாயம் என்றால் ஆன் தி ஸ்பாட் எரிமலையாக பொங்கி, அநீதி செய்பவர்களை புத்தூர் கட்டுப்போட அனுப்பும் ஆள் ஸ்ரீமன்நாராயணா. வசதியான ஆள். கல்லூரி பேராசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார். அவரது கல்லூரியே அவரை காவல்தெய்வமாக பார்க்கிறது. இந்த நேரத்தில் அங்கு புதிதாக படிக்க வரும் மாணவி ஜானகிக்கு, போதைப்பொருட்களை விற்கும் மாணவர்களால் பிரச்னை ஏற்படுகிறது. அதை தீர்த்து வைக்கிறார் நாராயணா. ஆனால் அதற்கடுத்த பிரச்னையின்போது, ஜானகி எங்கள் அண்ணனின் மனைவி என ஒருவன் வந்து நிற்க, ஜானகி யார் என கதை செல்கிறது. இதில் முக்கியமானது, பாட்டியால் வளர்க்கப்படும் ஸ்ரீமன் நாராயணா யார் என்பதுதான். ஆஹா பாலய்யா இந்த படத்தில் அடிக்கிற அடி எப்படிப்பட்டது என்றால், கோமாவில் 28 ஆண்டுகள் கிடந்தவர் சடக்கென எழுந்தே விடுகிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? படம் முழுக்க பாலய்யாவின் ஆக்சன் சரவெடிதான். சீரியசான கருத்துகளை சொல்லியபடி அடுத்தவர்களுக்கு உயிரைக்கொடுத்தாவது உதவ வேண்டும், மாணவர்களை எப்படி வளர்ப்பது என இடையில் நிறைய பாசிட்டிவ்வான செ

நியூஸ் ஜங்க்ஷன் - ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து

படம்
பத்திரிக்கை  அடப்பாவமே கடன் கடன்தான்! கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி, அமடே லஷ்மிநாராயணா. இவர் தனது கிராமத்திலிருந்து வங்கிக்கு 15கி.மீ. நடந்து சென்று வங்கிக்கடன் கட்டியிருக்கிறார். தொகை 3 ரூபாய் 45 பைசாக்கள். வங்கியில் கணக்குத் தணிக்கை நடப்பதால், இத்தொகையை அவர் கட்டியே ஆகவேண்டும் என வங்கி மேலாளர் கறார் காட்டியிருக்கிறார். இந்த சிறு தொகைக்காக இப்படி அலைய வைத்தார்கள் என நொந்துபோயுள்ளார் நாராயணா. இந்தியா டைம்ஸ் ஆஹா தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ பரிசீலித்து வருகிறது. வானியல் ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களும் இனி அனுமதிக்கப்பட உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2, 300 ஏக்கர் நிலப்பரப்பை தேடிவருவதாக இஸ்ரோ தலைவரும், விண்வெளித்துறை செயலருமான கே.சிவன் தெரிவித்துள்ளார். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு மூன்று சதவீதம் ஆகும்.     ஐயையோ உணவில் ஒட்டுண்ணி! அமெரிக்காவில் உள்ள வால்மார்ட், ஆல்டி ஆகிய சிறப்பங்காடிகளில் விற்ற சாலட் பாக்கெட்டுகளை வாங்கிய 200 பேர் உடல்நலம் குன்றியுள்ளனர். இந்த சாலட்டில் சைக