பருவச்சூழல் மாறுபாடும், வெப்பமயமாதலும் ஒன்றுதானா?
pixabay |
பருவச்சூழல் மாறுபாடும் வெப்பமயமாதலும் ஒன்றுதானா?
மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகள்
மூலமாக பசுமை இல்ல வாயு அதிகரிக்கிறது. இதனால் பருவச்சூழல்களில் வெப்பமும், குளிரும்,
மழையும், வெயிலும் மாறி மாறி வருகிறது. வெப்பமயமாதல் என்பதை வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு
சீசனுக்கு சீசன் உயர்வதை சுட்டிக்காட்டலாம். ஆனால் பருவச்சூழல் மாறுபாட்டையும் வெப்பமயமாதலையும்
அப்படியே பலரும் கலந்துசொல்ல தொடங்கிவிட்டார்கள். பருவச்சூழல் சிதைவு என்ற இன்னொரு
வார்த்தையையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
பருவச்சூழல் மாறுவதற்கான ஆதாரங்கள் என்ன?
1850 வரை உலகில் வெப்பநிலை
பெரிதாக எகிறவில்லை. ஒரு சதவீதம்தான் வெப்பநிலை உயர்ந்திருந்தது. 2015ஆம் ஆண்டு வரை
நாம் ஐந்து வெப்பமான ஆண்டுகளைக் கண்டிருக்கிறோம். 2018ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி,
கடல்நீர் மட்டம் கடந்த 25 ஆண்டுகளில் 7 செ.மீ உயரம் அளவுக்கு அதிகரித்துள்ளது நிச்சயம்
நமக்கு மகிழ்ச்சியான செய்தி அல்ல. அதேநேரத்தில் 2002 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில்
க்ரீன்லாந்து, அன்டார்டிகா பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன.
இதன் அளவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 280 பில்லியன் டன்கள் அளவுக்கு உருகியுள்ளது. மனிதர்களின் செயல்பாடு ஆகியவற்றோடு இயற்கை பேரிடர்களான
புயல், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவையும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மனிதர்கள்தான் இதற்கு காரணமா?
இயற்கையில் ஏற்படும் பசுமை
இல்ல பாதிப்புகள் பல்லாண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். வணிக வளர்ச்சி காரணமாக ஏற்படும்
பசுமை இல்ல வாயுக்கள் அளவு இப்போது கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதனால்தான் பல்வேறு
நாடுகளிலும் மின் வாகனங்கள், கார்பன் வெளியீட்டை குறைக்கும் செயல்பாடுகளை பல்வேறு நாடுகள்
செய்ய முயல்கின்றன. கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களே பருவச்சூழல்
பாதிப்பில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக