மகாராஷ்டிர அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்! - தினு ரணதிவ்






Freedom fighter & veteran journalist Dinu Randive passes away
அட்டா247.காம்





தினு ரணதிவ் 1925-2020

மும்பையைச்சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தினு. இவர் ரூலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக, சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

1956-60 காலகட்டத்தில் ரூ.50 முதலீட்டில் சம்யுக்தா மகாராஷ்டிரா என்ற பத்திரிக்கையை சொந்தமாக தொடங்கினார்.

1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிகையில் இணைந்தார்.

1971ஆம் ஆண்டு நடந்த வங்கப்பிரிவினை பற்றிய செய்தியை அந்நாட்டிற்கு சென்று தகவல்களைச் சேகரித்து அனுப்பி வைத்தார். சிட்டகாங் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பத்திரிகையில் செய்தியாக தொகுத்து எழுதினார்.

1982ஆம் ஆண்டு மும்பை மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றிய பல்வேறு செய்திகளை சிறப்பாக எழுதி அரசு அதன் மீது கவனம் குவிக்கச்செய்தார்.

அதே ஆண்டில் மகாராஷ்டிர அரசில் நடந்த சிமெண்ட் ஊழலைப் பற்றி எழுதி முதல்வர் அந்துலேவை ராஜினாமா செய்ய வைத்த பெருமை இவரையே சேரும்.

மும்பை கார்ப்பரேஷனில் முதலில் சாதி சார்ந்துதான் பிணங்களை புதைக்க, எரிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தனது மகனை புதைக்க அனுமதி அளிக்காத தந்தையின் சோக கதையை நாளிதழில் எழுதி, கார்ப்பரேஷனின் பாகுபாட்டு மனோபாவத்தை மாற்றி அனைத்து மக்களுக்குமாக இடுகாட்டை மாற்ற வைத்தார்.

2019ஆம் ஆண்டு மும்பை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்