இடுகைகள்

மம்மி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு 

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும் உள்ளன . எனவே இந்த மம்மி மனிதர்களுடன்

மம்மியின் வகைகள்

படம்
    மம்மியின் வகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ம ம்மிகள் இவை. இவற்றை ஐஸ் ம ம்மிகள் என்று அழைக்கலாம். ஐஸ்பெட்டியில் வைத்து புதைக்கப்ட்ட ம ம்மிகள் இவை. மறு உலகில் பசிக்கும் என்பதால், ஆறு குதிரைகளையும் கூடவே புதைத்த கருணை உலகம் எதிர்பார்க்காத ஒன்று. புதைத்த உடல் பெண்மணியினுடையது. அதில் ஏராளமான டாட்டூக்கள் புராண கால விலங்குகளில் உருவத்தில் இருந்தன. கானரி தீவு மம்மிகள் இ்வை ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள். இவற்றின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த ம ம்மிகளின் உடல் விலங்கு தோலினால் போர்த்தப்பட்டு மணலைப் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தனர். இன்கா மம்மிகள் பெரு மற்றும் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள் இவை. கடவுளுக்காக தங்களை தியாகம் செ்யத குழந்தைகளின் உடல்கள்தான் ம ம்மிகள். 500 ஆண்டுகள் பழமையானவை. சாசபோயா என்று அழைக்கப்பட்ட மம்மிகள், வடக்கு பெருநாட்டின் பகுதியில் கிடைத்தன. இவை காட்டின் வறண்ட பகுதியில் இருந்தன. காபுசின் காடகாம்ப்ஸ் 16ஆம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மம்மிகள் இவை. உடலை எப்படி பதப்படுத்தவேண்டும் என்பதற்கு இவை சிறந்த உதாரணம். உடலிலுள்ள கெட்டுப்