இடுகைகள்

முதியோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநலன் குறைபாடுகளை எதிர்கொள்வது எப்படி? - முதியோர் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

படம்
  பெருகும் மனநலன் பாதிப்பு   1.இந்திய மக்கள் தொகையில் உளவியல் சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு 150 மில்லியன் 2.30 மில்லியன் அளவு மக்கள் மட்டுமே உளவியல் குறைபாடு சார்ந்த சிகிச்சைகளை நாடி அதைப் பெறுகின்றனர். 3.15-29 வயது கொண்ட பிரிவினர் இறப்பில் தற்கொலை முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர்களின் இறப்பில் நான்காவது முக்கியமான காரணமாக உளவியல் பிரச்னைகள் உள்ளன. 4.2022ஆம் ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,526 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவண அமைப்பு கூறியுள்ளது. 5.மனம், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் முதியோர்களின் அளவு 6.6 சதவீதமாக உள்ளது. 6.அறுபது வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் உளவியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 7.மனச்சோர்வு, பதற்றம் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு 1 ட்ரில்லியனாக உள்ளது என உலகம் முழுமைக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். மனிதர்கள் உடலைப் பெற்று வந்ததே அவதிப்படத்தான் என்ற

அசாதாரண இந்தியர்கள்! - முதியோர்களைக் காப்பாற்ற முன்வந்த முன்னாள் குற்றவாளி ஆட்டோ ராஜா

படம்
  தாமஸ் ராஜா - நியூ ஆர்க் மிஷன் இந்தியா தாமஸ் எனும் ஆட்டோ ராஜாவுக்கு இப்போது வயது 54 ஆகிறது. அவருக்கு வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி எதையும் நினைவுகூர நேரம் இல்லை. தெருவில் ஆதரவில்லாமல் கிடப்பவர்கள் தூக்கிக்கொண்டு போய் தனது ஆர்க் மிஷன் இல்லத்தில் சேர்த்து பாதுகாப்பதைத்தான் செய்து வருகிறார்.  பள்ளியில் படிக்கும்போது பிற மாணவர்களை கடுமையாக கேலி, கிண்டல் செய்து வந்தார். மாணவர்களின் பணத்தைக் கூட அடித்துப் பிடிங்கிக்கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் என்ன செய்தார்கள் என்று இங்கு கேள்வி வருகிறதல்லவா? அவர்களிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை என்பதுதான் தாமஸை இப்படி செயல்பட வைத்திருக்கிறது. இதன் போக்கிலேயே தான் ஒருநாள் பெங்களூருவில் பெரிய டான் ஆகவேண்டும் என லட்சியத்தை வளர்த்துக்கொண்டார்.  இந்த லட்சியத்தை நோக்கி கர்ம சிரத்தையாக தினந்தோறும் முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது, பீதியானவர்கள் பள்ளி நிர்வாகம்தான். உடனே தாமஸை பள்ளியிலிருந்து நீக்கினர். பிறகு பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். தாமஸின் வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் பலரையும் அடித்து வெளுத்திருந்ததால் அவர் மீது சொன்ன குற்

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ

முதியோர்களுக்காக பெரும் வீடுகள், இல்லங்கள், சேவைகள்!

படம்
            முதியவர்களுக்கான புதிய அடையாளம் ! இப்படி தலைப்பு வைத்ததும் காசா கிராண்டே ஏதாவது விளம்பரம் கொடுத்துவிட்டார்களா என அச்சப்படாதீர்கள் . விஷயம் அப்படிப்பபட்டதுதான் என்றாலும் , இது முதியவர்களை வைத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவது தொடர்பானது . இன்று அரசு வேலை , தனியார் வேலை என கடுமையாக உழைப்பவர்கள் வாழ்வதைப் பற்றி ஐம்பதுக்கு பிறகுதான் யோசிக்கிறார்கள் . ஆனால் அதற்குள் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுவதோடு , பலருக்கும் முடி கூட கொட்டி விடுகிறது . அதற்குப்பிறகு மாமனார் வீட்டில் செய்துபோட்ட மோதிரம்தான் மிச்சமா என வாழவேண்டியதுதான் என நினைக்கிறார்கள் . ஆனால் பெருநகரங்களில் வயதானவர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த காலத்தை விட இப்போது இன்னும் பெரியதாக வாழ்கிறார்கள் . வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பிள்ளைகளைப் பற்றி இப்போது பெற்றோர் பெரிதாக கவலைப்படுவதில்லை . தங்களைக் கவனித்துக்கொள்ள அதற்கெனவே இருக்கும் சீனியர் சிட்டிசன் வில்லாக்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . அங்கு சென்று வாழ்கிறார்கள் . தனியாக அல்ல . அங்கும் இவர்களைப் போல வசதியான பல நூறு முதியவர்கள் வாழ்கிறா

நவீன தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டான முதியோர்!

படம்
தாயம்மாள், திருப்பூர் சமூகத்திற்கு சேதி சொல்லும் முதியோர்! சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன் – ஜலஜா ஆகியோருக்கு எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை. இருவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். காலையில் சூரிய உதயம், அஸ்தமனத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். ஜனார்த்தனன் பென்சன் பணத்தோடு சேமிப்பும் அவர்களை காப்பாற்றி வந்தது. ஆனால் வயதுக்கான தள்ளாமை யாரை விட்டுவைக்கும்? தங்களின் மனதிருப்திக்காக வைபவ் சேவா ஜேஜே பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையைத் தொடங்கி முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தனர். இதனை இருவரும் தங்களது பணி மூப்புக்கு முன்பே தொடங்கி, நடத்தி வந்தனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஜனார்த்தனன் வலது கண் லுக்கோமாவால் பாதிக்கப்பட்டது. ஜலஜா, தவறி விழுந்து முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களால் முதியோர் இல்லத்தைப் பராமரிக்க முடியாமல் போனது. இதனால், முதியோர்களை திரும்ப அவர்களின் பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டு நொறுங்கிய இதயத்தோடு நின்றனர். இன்றும் தங்களது அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்க்கு பண உதவிகள் ச