இடுகைகள்

சைக்கிள் பாதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!

படம்
giphy.com சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்! 1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான். கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான். ”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும்

சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா

படம்
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா? செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை  அமைக்கவிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம்  250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது. சைக்கிள் நேச நாடுகள் உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு. திட்டம் வெல்லுமா? தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கா