டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!





Cycling Pedaling GIF
giphy.com





சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்!


1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான்.

கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான்.

”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும் பயணிக்கும் ஸ்கூட்டர் போன்ற முயற்சிகளை சிலர் செய்கின்றனர். சைக்கிள் ஷேரிங் திட்டத்தை எந்த அரசியல்வாதிகளும் கிண்டல் செய்வதில்லை. காரணம், வெப்பமயமாதல் பிரச்னைகளை அனைவரும் உணர்ந்துள்ளனர் என்பதுதான்.” என்கிறார் சைக்கிள் பிரசாரகரான இசபெல்லா லெசன்ஸ்.

பாரிஸ் மேயர் அன்னா ஹிடால்கோ, சைக்கிள்கார ர்களுக்கான பாதையை  அதிகப்படுத்த வாக்குறுதி தந்திருந்தார். ஆனால் அதை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் சைக்கிள் பரவலில் பத்தொன்பதாவது இடத்திலிருந்த நகரை எட்டாவது இடத்திற்கு கொண்டு வந்திருப்பதை அவர் தன் சாதனையாக சொல்லிக்கொள்ளலாம்.

-எரிக் நெல்சன்