சுகானுபவமான கொலைகள்! - எட்மண்ட் கெம்பரின் கதை!



Image result for edmund kemper




எட்மண்ட் கெம்பர் 3

1970களில் பிரபலமாக இருந்த கெம்பருக்கு இன்னொரு பெயர் கோ -எட் கில்லர். கலிஃபோர்னியாவின் பண்ணை வீட்டில் இருந்த தாத்தா பாட்டியை போட்டுத்தள்ளி தன் கொலைவரிசையை தொடங்கினார். ஒன்பது பெண்களை சிறப்பான முறையில் தீர்த்துக்கட்டினார். பின் அவரது பார்வை அவரது அம்மா, நண்பர்கள் பக்கம் திரும்பியது. வாஸ்தவம்தானே தேடிப்போய் கொல்வதை விட அருகிலேயே இருப்பவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் என்று நினைத்து அவர்களின் மூச்சை நிறுத்தினார்.


1948ஆம்ஆண்டு டிச. 18 அன்று, கலிஃபோர்னியாவில் பர்பேங்க் நகரில் பிறந்தார் கெம்பர்.  பிற சீரியல் கொலைகார ர்களை விட புத்திசாலி. ஐக்யூ டெஸ்டில் 136 புள்ளிகள் பெற்றவர். புத்தி கூர்மையாக இருந்தால் துடிப்பும் வேகமும் அதிகமாக இருக்குமே? ஆம் அப்படித்தான் இருந்தார். அறிவுக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பாலியல் உணர்வும் திறனும் சூட்டிப்பாக இருக்கும். கெம்பர் தன் சகோதரிகளின் பொம்மைகளை எடுத்து பாலியல் திருவிழாக்களையே கொண்டாடி வந்தார். கைக்கு சிக்கிய விலங்குகளை அடித்து துவைத்து இடியாப்பமாக்கினார். மேலும் பள்ளி ஆசிரியை மீது காதல் பொங்கியது. அதிரடியாக ஒரே வார்த்தைதான் சொன்னார் பள்ளியே மிரண்டுவிட்டது. நீ எனக்கு முத்தம் தராவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்றார். அப்புறம் என்ன கெம்பர் செய்த செயலுக்கு ஆஸ்கரா கொடுப்பார்கள்? செவுளில் ரெண்டு போட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள்.

வீட்டில் மற்றொரு பஞ்சாயத்து. அம்மா ஆளுமைப் பிறழ்வு பிரச்னையில் ஏற்கனவே தவித்துக்கொண்டிருந்தார். மகன் வேறு இப்படிக் கிளம்பினால்.... அவர் என்ன ஆல்ரவுண்டரா அனைத்து திசைகளிலும் வரும் பிரச்னைகளை சமாளிக்க. .. தடுமாறியவர் மனதை இரும்பாக்கிக்கொண்டு மகனை வீட்டின் கீழ்தளத்தில் அடைத்து வைத்தார். சொந்த சகோதரிகளை சம்ஜா செய்துவிடுவோரோ என்ற திகிலும் அம்மாவுக்கு இருந்தது. அந்தளவுக்கும் தன் செயலில் மைலேஜ் காட்டியவர் கெம்பர். பெற்றோரின் விவாகரத்து அவரை பாதித்தது. தனியாகவே சுற்றிக்கொண்டிருந்தார். பள்ளி முடிந்ததும் தன் செல்ல நாயுடன் .22 காலிபர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு செல்வார். முயல், பறவைகள் என எதை வேண்டுமானாலும் சுடுவார். சுட்ட விலங்குகளை பாட்டியிடம் காட்டுவார். அவர் கெம்பரை நினைத்து சற்று பயந்தது அப்போதுதான். அதற்கான காரணமும் பிறகு நடந்தது.

1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று வீட்டில் சிறிய சோதனையை செய்தார். குழந்தைகள் நாவலை பாட்டி எழுதி, வேகமாக ரிவிஷன் பார்த்துக்கொண்டிருந்தார். சிம்பிளாக துப்பாக்கியை எடுத்து அவரை குறிபார்த்து சுட்டார் கெம்பர். பின் தாத்தாவின் வருகைக்காக காத்திருந்தார். காய்கறிகள் வாங்கி வந்தவரின் பின்புறம் இருந்து  சுட்டார்.  அவருக்கும் ஒரு தோட்டாவைக் கொடுத்து சமாதானப்படுத்தினார். எதற்கு அப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது, துப்பாக்கியால் அவரை சுட்டால் என்னாகும் என்று தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று கூறினார். தாத்தாவை ஏன் சுட்டீர்கள் என்றபோது, அவருக்கு என்மீது கோபம் இருந்தது. பின்னே அவரது மனைவியை நான் கொன்றுவிட்டேன் அல்லவா? அதனால்தான். மேலும் அவர் தனிமையில் கஷ்டப்படுவார் என்றார்.

இக்கொலைகளை செய்தபோது அவருக்கு வயது 15 தான். தாய்க்கு விஷயம் தெரிந்தாலும் அனைத்தும் கையை மீறி போய்விட்டது. போலீஸ் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மனநல மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கு சென்ற கெம்பர் தன் புத்திசாலித்தனத்தால் மருத்துவர்களை வியக்க வைத்தார். குறிப்பாக தலைமை மருத்துவரை நண்பராக்கி, அவரின் உதவியாளர் போலவே மாறினார். இதன்காரணமாகவே, அங்கிருந்து எளிதாக விடுதலையானார். இவரின் விடுதலையை அங்கிருந்த அனைத்து மருத்துவர்களும் எதிர்த்தனர். ஆனாலும் என்ன செய்ய? நடப்பதை யார் தடுக்க முடியும்?

பின் தன் அம்மாவுடன் சான்டா குரூசில் இருந்தார். சிறிய கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். அரசின் நெடுஞ்சாலைத்துறையில் கிடைத்த வேலையை அப்போது செய்துகொண்டிருந்தார். அங்கு வந்த கல்லூரி பெண்கள் குழுவை அப்படியே வளைத்தார். பொய்க்காரணங்களைச் சொல்லி அவர்கள் ஆளரவற்ற இடத்திற்கு கொண்டு சென்று கத்தியால் குத்தி நினைவிழக்கச்செய்தார். பின்னர் அவர்களை தன் வீட்டிற்கு எடுத்து சென்று வல்லுறவு செய்தார். உடல்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்தார். அதில் சிலரின் உடல் பாகங்களை அம்மாவின் தோட்டத்தில் புதைத்தார்.எதற்கு?  அவளைப் பார்த்துகொள்ள மனிதர்கள் வேண்டுமே? என குரூரமாக பேசினார்.


1973ஆம்ஆண்டு தூங்கிக்கொண்டிருந்த தன் அம்மாவைப் பார்த்தார். அவர் அவனுக்குச்செய்த அநீதிகள் மனதில் முந்திக்கொண்டு வந்தன. காலில் விழுந்து மன்னிப்பு  கேட்க, போர்வையை இழுத்துவிட்டு பாசம் காட்ட, கண்ணீரால் கால்களைக் கழுவும் காட்சிகள் கெம்பருக்கு செட் ஆகாதே. அருகிலிருந்து ஸ்டோர் ரூமுக்குச்சென்று சுத்தியல் ஒன்றை எடுத்து வந்தார். அம்மாவை பாசத்தோடு பார்த்தார். ஒரே போடு. தலை, அண்ணாச்சி கடை தேங்காய் போல பிளந்தது. தலையை தனியே வெட்டி எடுத்துவிட்டு, முண்டமான உடலைப் பார்த்தார். ரத்தம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்த உடல் அவருக்கு கவர்ச்சியாக தோன்றியது. ஜிப்பைத் திறந்து ஆணுறுப்பை வெளியே எடுத்தார். அம்மாவை அப்படியே வல்லுறவு செய்தார். பின்னர் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி குப்பைத்தொட்டியில் எறிந்தார்.


பின் அம்மாவின் சிறந்த தோழியை போனில் பொய் சொல்லி அழைத்தார். அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவரின் பின்தலையில் ஓரே போடு. சோலி முடிந்தது. பின் காரை வெளியே எடுத்துச் சென்றவர், ஓரிடத்தில் அதனை நிறுத்தினார். தன் தவறுகளை தானே ஏற்றுக்கொண்டு போலீசை கைது செய்ய அழைத்தார். மரண தண்டனையை எதிர்பார்ப்பதாக நீதிபதியிடம் கூறினார். அம்மாகாணத்தில் ஏது மரணதண்டனை? ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் எட்டு கொலைகளை செய்த தாக அவரே ஏற்றுக்கொண்டார். இப்போதும் சிறைவாசம்தான் அனுபவித்து வருகிறார்.


வின்சென்ட் காபோ

மர்டர் பீடியா வலைத்தளம்

கில்லர்ஸ் ஆப் புக்