சூரியன் உதயமாகும் நாட்டின் கதை! - ஜப்பான்!


Image result for ஜப்பான்




ஜப்பான்

எல்எல்வி மூர்த்தி

கிழக்கு


ஜப்பான் இன்று எலக்ட்ரானிக் சந்தையில் காணாமல் போய்விட்ட நிறுவனம். காரணம், தொலைநோக்கான தலைவர்கள், சிந்தனைகள் எல்லாம் குறைந்துவிட்டதுதான். ஆனால் எரிமலைகள் வெடிப்பு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, அணுகுண்டு வெடிப்பு, புகுஷிமா அணுஉலை கசிவு என அத்தனையும் தாங்கி வளரும் வல்லரசு நாடு.

சிறிய தீவு நாடு எப்படி, தொழில், கல்வி, இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் முன்னேறியது என்று அறிபவர்களுக்கான நூல் இது. மூர்த்தி பிரமாதமாக ஏராளமான நூல்களைப் படித்து ஜப்பான் என்ற சிறிய நூலை எழுதியுள்ளார். 139 பக்கங்கள்தான்.

ஜப்பான் எப்படி போர்களால் சிரமப்பட்டு முன்னேறியது, மெய்ஜி மன்னரின் காலத்தில் பல்வேறு கொள்கைகளைத் தீட்டி முன்னேறியது. வர்ணாசிரம முறைகளால் சமூக முன்னேற்றம் எப்படி தடைபட்டது என்பதை ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார்.

ஜப்பான் இன்று சந்திக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை, முதியோர்கள் சதவீதம் அதிகமாவது, கண்டுபிடிப்புகளில் தேக்கம் ஆகியவற்றை விளக்கமாக ஆசிரியர் எழுதியுள்ளார். அதேசமயம் மோசமான ஆட்சியாளர் அரசு சேவைகளைப் பெற லஞ்சத்தை ஆயுதமாக்கும்போது ஏற்படும சீரழிவுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஜப்பானியர்கள் தேசப்பற்றுதான் அனைத்தையும் விட முக்கியமானது. தொழில்நுட்பம் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கி, கற்று, அதனைக் கற்றுக்கொடுத்த நாட்டையே வணிகத்தில் போட்டியாளராக கொண்டிருப்பது எல்லோராலும் முடியாத ஒன்று. ஜப்பான் எப்படி முன்னேறியது என்று அறிய நினைப்பவர்களுக்கு இந்த நூல் தன்னால் முடிந்தளவு நேர்மையான பதில்களைச் சொல்லியிருக்கிறது.


கோமாளிமேடை டீம்