அசுரகுலம் - பிணங்களைப் பார்த்து சுய இன்பம் செய்த ஜெஃப்ரி!
அசுரகுலம்
ஜெஃப்ரி டாமர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி செய்த கொலைகள் 17 அனைத்தும் இளைஞர்கள். அதுவும் பல்வேறு ஓரினச்சேர்க்கை பார்களில் பார்த்த இளைஞர்களுக்கு செக்ஸ் ஆசை, பணம் காட்டி வீட்டுக்கு கூட்டி வந்து கொன்றவர். இதற்காக 16 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். ஆனால் முதல் கொலைமுயற்சியில் கழுத்தறுபட்டு தப்பித்தவர், இரண்டாவது முயற்சியில் கொல்லப்பட்டார். கொன்றவர் சக கைதியான ஸ்கார்வர். இவர் மரணித்த ஆண்டு 1994.
பதிமூன்று ஆண்டுகளில் 17 இளைஞர்களை கொன்றவர் ஜெஃப்ரி. எப்படி தெரியுமா? ஓரினச்சேர்க்கை, பூங்கா, பேருந்து நிறுத்தம் என்று செல்வார்.அங்குள்ளவர்களில் செக்ஸ் விற்பனைக்கு என தில்லாக நிற்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தேர்வு செய்து பேரம் பேசி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு சென்றதும் முதலில் மது பிறகு சமாச்சாரம் என்று சொல்லிவிட்டு, ஆல்கஹாலில் மயக்க மாத்திரைகளை கலந்துகொடுப்பார். அவர் குடித்துவிட்டு மயங்கியவதும் அவரின் உடல் பாகங்களை அக்கு அக்காக பிரிப்பார். ஜெஃப்ரி ஜோம்பி என்ற உணர்விழந்த மனிதர்களை நம்பினார். அதற்காக கூட்டி வந்த ஆட்களின் மண்டையில் துளையிட்டு அமிலங்களை ஊற்றி சோதனைகளை செய்தார். சோதனையும் தோற்றுப்போனது. ஆட்களின் உயிரும் பரலோகம் சேர்ந்தது. அதற்கான நினைவாக அவர்களின் மண்டையோட்டையும், ஆணுறுப்பையும் வெட்டி பதப்படுத்தி வைத்து பிரார்த்தனை செய்வது ஜெஃப்ரிக்கு பிடித்தமானது.
இன்றைய செல்ஃபி விஷயங்களை ஜெஃப்ரி 1978 முதலாக முயற்சி செய்தார். தான் செய்யும் முக்கியமான கொலை காரிய டாஸ்குகளை அனைத்தையும் புகைப்படமாக பதிவு செய்வார். அது அவருக்கு இறந்த உடலுடன் வைத்துக்கொள்ளும் செக்ஸை விட சந்தோஷம் தந்தது.
இளம் வயது
விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்த ஜெஃப்ரி நன்றாகத்தான் இருந்தார். எல்லாம் அவருக்கு குடலிறக்கம் சார்ந்த பிரச்னை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும்வரைதான். பின்னர், அவரது குடும்பத்தினர் வேலை மாற்றம் காரணமாக நிறைய இடங்களுக்கு அவரை மாற்றி மாற்றி கூட்டிச்சென்று கொண்டிருந்த தில் அவருக்கு எந்த உறவுகளும் ஏற்படவில்லை. நண்பர்களின்றி தனியாக திரிந்த தில் நெக்ரோபிலியா எனும் பாதிப்பு ஏற்பட்டது. பிணங்களை பார்த்து பாலுணர்வு கொள்ளும் மனநிலை இது.
பாலியல் பரவசத்தில் கல்லறைகளை சுற்றிவந்தவர், மதுபானங்களுக்கு அடிமையானார். இதன் விளைவாக, கல்லூரியிலும் பாதியில் விலகினார். இந்த நேரத்தில் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர். இதன் விளைவாக, இருவரின் பாசமும் கவனிப்பும் கண்காணிப்பும் ஜெஃப்ரிக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ராணுவத்தில் ஜெஃப்ரி தேர்வாகி, ஜெர்மனிக்கு அனுப்ப ப்பட பயிற்சிகள் செய்து வந்தார். ஆனாலும் குடிநோய்க்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் தவித்தார். இதனால் 1981ஆம் ஆண்டு ராணுவத்தினர் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர்.
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தந்தை, இவரை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவரது தாயிடம் பார்த்துக்கொள்ள அனுப்பினார். அப்போதே பெண்களிடமும், சிறுவர்களிடமும் தன் சில்மிஷத்தை தொடங்கியிருந்தார். சிறுவர்களின் முன்னிலையில் சுய இன்பம் செய்து அந்த குற்றச்சாட்டிற்காக சிறை வாசம் அனுபவித்த வரலாறு அவருக்கு உண்டு.
1978 ஆம் ஆண்டு ஜெஃப்ரி தன் முதல் கொலையைச் செய்தார். ஸ்டீவன் ஹிக்ஸ் என்ற நண்பரை தன் பெற்றோரின் வீட்டுக்கு கூட்டிவந்தார். ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஸ்டீபன் நேரமாகிறது நான் கிளம்புகிறேன் என்று சொன்னது ஜெஃப்ரியை கோப ப்படுத்திவிட்டது. டம்பெல்லை எடுத்து ஸ்டீவனின் மண்டை மீது இறக்கினார். அவ்வளவுதான். வலியில் கத்தக்கூட முடியாமல் மடங்கி விழுந்தார். இறந்த நண்பரின் உடலைப் பார்த்து சுய இன்பம் அனுபவித்தார் ஜெஃப்ரி. பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரின் வீட்டுப் பின்புறம் கொண்டு சென்று புதைத்தார்.
அடுத்த கொலையை ஹோட்டலில் செய்தார். ஸ்டீவன் டுவோமி என்பவரோடு சென்று அறை எடுத்து தங்கினார். போதையில் பொல்லாத ஆள்தான் ஜெஃப்ரி. அந்த நினைவிழந்த நிலையிலும் நண்பரை போட்டுத்தள்ளிவிட்டு தூங்கியவர், விழித்தெழுந்த பிறகு உடலை என்னசெய்வது என யோசித்தார். உடனே பெரிய சூட்கேஸை வாங்கி அதில் ஸ்டீபனின் உடலைப் போட்டு செட்டில் செய்தார். அதை எடுத்துக்கொண்டு பாட்டியின் வீட்டுக்கு வந்தார். அங்கு இறந்த உடலை வெளியே எடுத்து போட்டு சுய இன்பம் அனுபவித்தார். இதனை யாருமே கவனிக்கவில்லை என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை.
அவரது பாட்டிக்கு கீழே தரைத்தளத்தில் உடல் அழுகும் வாசனை வித்தியாசமாக தெரிந்தது. பேட் மேன் போல இரவில் மட்டுமே வரும் பேரன், அவரின் மதுபான சகவாசத்தை கண்டித்தார். அவர் கேட்கவில்லை என்பதால் வீட்டை விட்டு விலகு என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போய்விட்டார்.
பாட்டியின் வீட்டிலேயே இன்னும் இரண்டு கொலைகளை செய்து விட்டார். அது பின்னர்தான் தெரிய வந்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, ஜெஃப்ரி என்ன சொன்னார் தெரியுமா?
” நான் வழக்கிலிருந்து விடுதலை பெற நினைக்கவில்லை. மரணத்தை தண்டனையாக பெறுவதையே விரும்புகிறேன்.” என்றார்.
1989 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார் ஜெஃப்ரி. வழக்கில் தெரபி கொடுக்க முடிவானது. இந்த காலகட்டத்தில் அவரின் மனமாற்றம் முக்கியமானது. ஆனால், அதிலும் ஜெஃப்ரி தப்பிவிட்டார். பின்னர். 1991ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ஆப்பிரிக்க அமெரிக்கர் கையில் விலங்குடன் தப்பித்து தெருவில் ஓடியபோதுதான், உண்மை உலகிற்கு தெரிந்தது.
1996 ஆம் ஆண்டு ஜெஃப்ரி இறந்தபோது அவர் பயன்படுத்தி கத்தி, கடப்பாரை, கோடரி அனைத்தையும் மில்வாகியா நகரைச்சேர்ந்த பணக்காரர் ஏலத்தில் எடுத்தார். அதனை ஊரை விட்டு தள்ளியிருந்த இடத்திற்கு கொண்டு சென்று எரித்தார். இதெல்லாம் ஜெஃப்ரியின் விசாரணை காலத்தில் நடைபெற்ற விஷயம். பின்னர் ஜெஃப்ரி சிறை சென்றார். அங்கு மதம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார். அங்கு உடற்பயிற்சி மையத்தில் சக கைதியால் அடித்தே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டது, முதலில் தன் நண்பரை டம்பலால் அடித்துக்கொன்றாரே அதே முறையில் இருந்தது.
இவர் பற்றிய சில நூல்கள், படங்கள் வெளிவந்துள்ளன.
The Jeffrey Dahmer Story: An American Nightmare, by Donald A. Davis.
The Shrine of Jeffrey Dahmer, by Brian Masters,
படங்கள்
Dahmer 2002
My Friend Dahmer, 2017
தொகுப்பு - வின்சென்ட் காபோ
நன்றி - பயோகிராபி வலைத்தளம்.
கில்லர்ஸ் ஃபைல்ஸ் நூல்
\