சாவுக்கு ஆகும் செலவு! - புதைக்கவா, எரிக்கவா?
giphy.com |
தெரிஞ்சுக்கோ
ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறப்பு ஊருக்குச் செல்லும். அதில்தான் சில அசிங்கங்களும் நடக்கும். பொதுவாக துறவிகளை புதைத்து சமாதி எழுப்புவார்கள். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களை எரித்து சாம்பலை ஆற்றில் கரைப்பது இந்து மரபு. பற்றுகளிலிருந்து விடுதலை பெறுகிறார் என்று பொருள்.
மனித உடல் முற்றாக மண்ணோடு மண்ணாக 12- 20 ஆண்டுகள் வரை ஆகும்.
பிணங்களை எத்தனை அடி கீழே வைக்க வேண்டும் தெரியுமா? நான்கு அடி போதும் என்கிறார்கள். ஆனால் நாய், நரி என இழுத்து போட்டு அவமானம் செய்யாமல் இருக்க, 61 செ.மீ நீளத்திற்கு ஏதாவது சிறிய தடைகள் வைப்பது சிறப்பு. முள் அல்லது பலகை வடிவிலான கற்கள்.
54 சதவீத அமெரிக்கர்கள் இறந்தவுடன் உடலை புதைப்பதையே விரும்புகின்றனர்.
72 சதவீத கல்லறைகளில் புதைப்பதற்கான தேவை அதிகரித்து வருவதை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கான சடங்கு சேவைகளுக்கான துறை மதிப்பு 20 பில்லியனாக உள்ளது.
தோராயமான இறப்புச் சேவை கட்டணம் - அமெரிக்காவில் எவ்வளவு தெரியுமா - 8500 டாலர்கள்.
செல்லப்பிராணிகளை புதைத்து மரியாதை செய்ய வேண்டாமா? அதற்கு ஆகும் செலவு நாயோ பூனையோ தலா ஒன்றுக்கு 200 டாலர்கள்.
உடலிலுள்ள தசை முழுக்க நீராக மண்ணில் இறங்க ஆகும் காலம் - நான்கு மாதங்கள். பசுமை இறப்புச்சடங்குக்கு ஆகும் நீரின் அளவு 300 காலன்.
அமெரிக்காவில் உடலை கடல் பரப்பிலிருந்து 4.8 கி.மீ தள்ளித்தான் புதைக்க வேண்டும் என்ற விதி உண்டு.
நன்றி - க்வார்ட்ஸ்