தெரிஞ்சுக்கோ - சீசனே இல்லாத சூப்பர் வாழைப்பழம் !
giphy.com |
தெரிஞ்சுக்கோ!
வாழைப்பழம் சாப்பிடாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேலான வெரைட்டிகளில் வாழைப்பழம் பஜார்களை நிரப்பி வருகிறது. எல்லா சீசன்களில் நம் வாயை நிரப்பி பசியை ஆற்றுவது வாழைப்பழம்தான். அதற்காக அதனை ஏழைகளின்...... என்று எந்த பெயர் சூட்டவும் எனக்கு ஆர்வமில்லை. எப்போதும் கிடைக்கும் எளிய பழம் அது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம். எப்போதும் விளையும் பழம் என்பதால், பூஞ்சைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாழைப்பழத்தின் சதவீதம் அதிகம்.
ஒரு வாழைத்தாரில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? விடுங்கள். விற்கும் செட்டியார் எண்ணுவார். உலகளவில் 473 பழங்கள் இருந்ததே சாதனையாக கூறுகிறார்கள்.
மனிதர்களுக்கும் வாழைப்பழத்திற்குமான மரபணுப் பொருத்தம் 60 சதவீதமாக உள்ளது.
உலகளவில் 5.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
உலக சந்தையில் 99 சதவீத வாழைப்பழங்கள் கேவண்டிஷ் ரக வாழைதான்.
அமெரிக்கா கடந்தாண்டில் மட்டும் 2.8 பில்லியன் மதிப்பிலான வாழைப்பழங்களை இறக்குமதி செய்துள்ளது.
உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் வாழைப்பழத்தின் சதவீதம் மட்டும் 15 சதவீதமாக உள்ளது.
வாழைப்பழத்திலும் கதிர்வீச்சு தன்மை உண்டு. அப்படி வாழைப்பழங்கள் நம் உடலை பாதிக்கவேண்டுமெனில் நீங்கள் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிடவேண்டும். அப்போதுதான் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு நீங்கள் இறக்க வாய்ப்புள்ளது.
சாதாரண வாழைப்பழத்தில் 425 மி.கி பொட்டாசியம் உள்ளது.
ஜப்பானில் உள்ள பிரீமியம் வாழைப்பழமான கோகுசென்னின் ஒரு பழத்தின் விலை 5.40 டாலர்கள்.
நன்றி - க்வார்ட்ஸ்