ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?




medicine is not a science doctor GIF
giphy.com








மிஸ்டர் ரோனி


ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்?



ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும்.

கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும்

பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1

உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது.

எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன்.


பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2

இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல் 1 மருந்துகளை விட குறைவாக தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு கொண்டவை.

எ.கா - கோகைன், மெத்தடோன், ஃபானடைல், ரிடாலின்


பட்டியலிடப்பட்ட மருந்துகள் 3

இவை பெரியளவு உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை கொண்டவை.

எ.கா. - டெஸ்டோஸ்டிரோன், கீட்டமைன், அனபோலிக் ஸ்டீராய்டு

அடுத்து பட்டியலிடப்பட்ட மருந்துகள் 4, 5 என்பவை மேற்சொன்னவற்றைக் காட்டிலும் குறைவான பாதிப்பை உடலுக்கு மனதிற்கும் ஏற்படுத்துபவை.

நன்றி - ஹெல்த்தி சில்ரன் வலைத்தளம்.




பிரபலமான இடுகைகள்