ராமர் கோவிலை கட்டுவதே எங்கள் லட்சியம்!





Image result for raghubar das


நேர்காணல்

ரகுபர் தாஸ், ஜார்க்கண்ட் முதல்வர்


ராமர் கோவில் கட்டுவதைப் பற்றிய அறிவிப்பை தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசுவாரா?

ஏன் கூடாது? ராமர் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கிறார். அயோத்யாவில் வந்த தீர்ப்பை இரு மத த்தினருமே ஏற்றுக்கொண்டனர். பின் ராமர் கோவில் கட்டுவதில் என்ன பிரச்னை இருக்கமுடியும்? தேர்தல் பிரசாரத்திலும் அதைப்பற்றி பேசுவதில் பெரிய மாற்றம் இல்லை. இனி நடக்கும் சம்பவங்களில் ராமர் கோவிலின் தாக்கம் நிறையவே இருக்கும்.

மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிப்பதாக கூறினீர்கள். ஆனால் கடந்த வாரம் கூட அவர்கள் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்களே?

எங்களுடைய அரசு மட்டுமே இங்கு அமைந்த வலுவான முதல் அரசு, மாவோயிச தீவிரவாதிகளை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தி வருகிறோம். அதில் முற்றிலும் வெற்றி பெறவில்லை. இதற்கு முன்பு இருந்த அரசில், தினசரி நாளிதழ்களில் ஊழல், தீவிரவாதம் பற்றி மட்டுமே செய்தி வந்துகொண்டிருந்தது. இன்று அந்த நிலைமை மாறியுள்ளது.

எதிர்கட்சிகள் உங்கள் அரசு மீது காடுகள் பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே?

ஜேஎம்எம் கட்சி, இதுபோன்ற முக்கியமான பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. சட்டசபையில் இதுபற்றிய விவாதங்களில் அக்கட்சி கலந்துகொள்வதே இல்லை. இப்போது இப்படி குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். எங்களை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் குடும்ப அரசியலை பின்பற்றுபவர்கள். எங்கள் கட்சியில் மட்டுமே சாதாரண தொண்டர்களுக்கும் கட்சிப்பணி, அதிகாரம் ஆகியவற்றை தருகிறோம்.

மகாராஷ்டிரத்தில் பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபட்டும் ஜெயிக்க முடியவில்லையே?

அந்த மாநிலத்திற்கும் ஜார்க்கண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்கள் குடும்ப பாரம்பரியமாகவே பதவிகளை வகித்து வருகிறார்கள். எங்கள் மாநில மக்கள் பழங்குடிகள். இங்கு காங்கிரஸ் மிக சில இடங்களையே பிடித்துள்ளனர்.

நன்றி - அவுட்லுக்