கருணையற்ற கொலைகாரன் - பிடிகே
பள்ளியில் படித்தபோது மிகச்சிறப்பான மாணவர் அல்ல. சுமாராக திரியும் கூட்டத்தில் ஓர் மாணவர் மட்டுமே. பின் கல்லூரியிலும் பெரியளவு பெயர் பெறவில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான் கடந்து வந்திருப்போம். டென்னிஸ் ரேடாரும் அப்படித்தான் வளர்ந்தார். படித்தார்.
அவர் 30 ஆண்டுகளாக மறைத்து வந்த ரகசியம் ஒன்று உண்டு. அதுதான் அவர் சீரியல் கொலைகாரன் என்பது. அதனை அவர் தன் மனைவியிடம் கூட வெளிப்படித்தியிருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. மதிப்பான மனிதர்கள், குடும்பம் இருந்தது. பள்ளி ஸ்கவுட் குழுவில் இடம்பெற்றவர், பின்னர், தேவாலய பிரார்த்தனை குழுவின் தலைவராக இருந்தார். விபத்து, கொலை பற்றிய செய்திகளை கேட்டாலே பதறி வேறுபுறம் செல்பவர் பத்து பேர்களுக்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்தார் என்றால் நம்புவீர்களா?
டென்னிஸ் ரேடார் பிடிபட்டபோது, அவரது குடும்பம் பதறியது. அவரது மகள் எனக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தவர் இப்படி செய்திருப்பாரா என்று கேட்டார். பின்னர் போலீஸ் எடுத்துச் சொல்லியதும், எனது தந்தை தவறான விஷயங்களிலிருந்து சரியான விஷயங்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்று கூறி பேசாமல் ஒதுங்கி விட்டார்.
1945ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று கான்சாஸின் விச்சிட்டா நகரில் பிறந்த டென்னிஸ், குடும்பம் ஆரவாரமில்லாத குடும்பம். நான்கு பிள்ளைகளில் மூத்தவர் சார்தான். சிறுவயதில் வரும் பாலியல் கனவுகள் விஷயங்கள் சகஜமானது. ஆனால் அதிலும் டென்னிசுக்கு ஸ்பெஷல்தான். விலங்குகளை சித்திரவதைப் படுத்துவது அவருக்கு சுய இன்பம் அனுபவிக்கும் சுகத்தை தந்தது. தனது ஆடியோ நேர்காணலில், எனக்கு அதுதான் சரியாக இருந்தது. மற்றவர்களைவிட செக்ஸ் எனக்கு கொஞ்சம் கூடுதலாக தேவைப்பட்டது என்றார். சார் சொல்வதும் சரிதான். கொஞ்சம் கூடுதலாக சுகத்திற்காகத்தான் அணில், காக்கா, குருவி என சித்திரவதை செய்து கொன்றார்.
இவற்றை எப்படி கட்டி வைத்து கொல்வது என்பதற்கான தேடுதலில் இருக்கும்போது ஸ்கவுட்டில் பயிற்சி கிடைத்த து. அங்கு முக்கியமான பயிற்சியே கயிற்றில் எப்படி முடிச்சு போடுவது என்பதுதானே? அதில் டென்னிஸ் பிறருக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு திறமைசாலி, பிறருக்கு தெரியாமல் தனது அறையில் தன் கைகால்களை கட்டி தலையை பையில் புதைத்து ஃபேன்டசி கனவில் மிதப்பார். பின்னாளில் இப்பயிற்சி பத்து பேர்களை கொல்ல உதவியது. மற்றநேரங்களில் மீசை வைத்தால் இந்திரன், இல்லையென்றால் சந்திரன் மாதிரி உலாவி நல்லபெயரை ஊரில் சம்பாதித்தார்.
அப்போது கல்லூரி படிப்பை கைவிட்டு ஏர் போர்ஸ் பணியில் சேர்ந்திருந்தார். தேவாலயம் செல்லும் பழக்கம் அவருக்கு பாரியாளைப் பெற்றுத்தந்தது. ஆ...வ்..வ் மென் என்று சொல்லும்போது பக்கத்து இருக்கையிலிருந்த பாலா டையட்ஸைப் பார்த்தார். கண்கள் இணைய கர்த்தரின் பாவ புண்ணியப் பாடங்களை யாராவது ஓதிக்கொண்டிருப்பார்களா? ஆம். காதல் அவர்களது மனதில் சத்திய சாட்சியாக ஜீவ ஆன்மாவாக, இறங்கியது. காதல் மனதில் நிறைந்தாலும் பெண்கள் சொல்லுவார்களா என்ன? சிறுக்கி மவளே என மனதில் செல்லமாக திட்டிய டென்னிஸ், மனதில் காதல்வேலியை உடைத்து ஐ லவ் யூ என்றார். 1971ஆம்ஆண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணமானது.
டென்னிஸ் பயன்படுத்திய முகமூடி |
பின்னர், 1973இல் அவரது பணி முடிவுக்கு வந்தது, முன்னரே எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்ததால் டென்னிஸ் பெரிதாக கலங்கவில்லை. 1974ஆம் ஆண்டிலிருந்து டென்னிஸின் அசுர ஆட்டம் தொடங்கியது. ஜனவரி 15, மனைவி பாலா, தூங்கிக்கொண்டிருக்க ஒட்டேரோ குடும்பத்தினரை அடித்து கொன்று கொண்டிருந்தார் டென்னிஸ். ஜோசி, ஜோசப் ஆகிய சிறுவன், சிறுமியும் கொல்லப்படும் வரையில் தங்களது பெற்றோர் டென்னிசால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதை அழுகையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அச்சிறுவர்களை கொல்லும்போது, கவலைப்படாதே ஹனி, நல்லபடியாக உன் பெற்றோர்களுடன் சென்று சேர் என்று ஆசிர்வாதம் செய்து கழிவுநீர் குழாயுக்குள் இருவரையும் தள்ளினார் டென்னிஸ். சிறுவர்கள் மூச்சுக்கு போராடி நீரில் மூழ்கி இறக்கும்போது, அவர்களைப் பார்த்தபடி மகிழ்ச்சியாக சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தார் டென்னிஸ்.
அவர்களை குழாயில் தள்ளும்முன்பே அவர்களின் உள்ளாடைகளை கைப்பற்றியிருந்தார் டென்னிஸ். முதல் கொலையின் நினைவுக்காக அதனை வீட்டுக்கு எடுத்துச்சென்றார். சிறிது நேரம் தூங்கியபின், தேவாலயத்திற்கு கிளம்பினார்.
பின் இருமாதங்கள் கழித்து கேத்தரின் பிரைட் என்ற பெண்ணை கத்தியால் குத்தி கயிற்றால் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். இதில் தடுக்க வந்த அப்பெண்ணின் தம்பி கெவின் குண்டு பட்டும் தப்பித்துக்கொண்டது டென்னிசுக்கு மனவருத்தமாக இருந்தது.
அப்போது நகர நூலகத்திலிருந்த நூலில் பிடிகே என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, டிவி பத்திரிகைகளுக்கு தகவல் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் அவரது மனைவி டயட்சுக்கு இதுபற்றி சந்தேகமே வரவில்லை. நாளிதழில் டென்னிஸ் குறித்துவைத்து வாசித்த சீரியல் கொலைகார ர்களை பற்றிய செய்தி என எதைப்பற்றியும் அவர் யோசிக்கவில்லை.
டென்னிஸ் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்திருந்தாலே உண்மை வெளியாகி இருக்கும். அப்பெட்டியில் தான் கொன்றவர்களின் நினைவாக சேகரித்த உள்ளாடைகள், புகைப்படங்கள் ஆகியவை இருந்தன. இதுபற்றி டென்னிஸ், எனக்கு ஒரே ஃபேன்டஸி கடுமையாக அலுப்பூட்டும். அதனால், வேறுமாதிரியான புதுமையான விஷயங்களை முயற்சிப்பேன் என்றார்.
பத்தாவது கொலையான 62 வயதான பாட்டியைக் கொன்றார். பின் கொலை பற்றிய ஏராளமான கடிதங்களை போலீசுக்கு அனுப்பி கண்டுபிடிக்க தூண்டுதல் செய்தார். அதில் அவர் செய்த தவறு, பிளாப்பி டிஸ்கில் அவர் அழித்த வேர்டு டாகுமெண்ட். அது அவர் தலைவராக இருந்த தேவாலயத்தின் அடையாளத்துடன் இருந்தது. கொலையானவர்களின் உடைகளை அணிந்து செக்ஸ் ஃபேன்டசி அனுபவிப்பது டென்னிசுக்கு பிடிக்கும். இதன் மூலம், நகம் முடி ஆகியவை போலீசுக்கு கிடைத்துவிட்டது. பாரத் மேட்ரிமோனியை விட மிகச்சிறப்பாக மேட்ச் செய்த அமெரிக்கர்கள், சீக்கிரமே டென்னிசை நெருங்கிவிட்டார்கள். குற்றங்களை அவர் எளிதாக ஒத்துக்கொண்டார். 175 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தார்கள் என்ன காரணம் தெரியுமா? கான்சாஸ் மாகாணத்தில் மரண தண்டனை கிடையாது. தற்போது எல் டோரடோ சிறையில் காலம் கழித்து வருகிறார்.
இவரது வாழ்க்கையை கன்ஃபெஷன் ஆப் தி சீரியல் கில்லர் - தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் டென்னிஸ் ரேடார் என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் கேத்தரின் ராம்ஸ்லேண்ட்.
2017இல் வெளியான மைண்ட்ஹன்டர் என்ற நெட்பிளிக்ஸ் படத்திலும் டென்னிசுக்கு பாத்திரம் உண்டு.
வின்சென்ட் காபோ
நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்
தி கில்லர் புக் ஆப் சீரியல் கில்லர்ஸ் -