தெரிஞ்சுக்கோ - பாத்டப் குளியல்!


Conan Bruce GIF
giphy.com






தெரிஞ்சுக்கோ!

ஆங்கிலப்படங்களில் குளியலறைத் தொட்டியில் நாயகி படுத்து குளிப்பதை தரிசித்திருப்பீர்கள். படம் பார்ப்பதே அதற்குத்தானே? பாத்லப்பில் லக்ஸ் சோப்பு போட்டு நுரைக்க நுரைக்க குளித்து எழுவது, அசப்பில் எருமை குளத்தில், வாய்க்காலில் சுகமாக குளித்து பின் மேய்ச்சலுக்கு செல்லுவது போலவே இருக்கும். பாத்டப் குளியல் என்பது நிதானமாக குளிப்பது. குளித்த பிறகு அத்தண்ணீரை கொட்டிவிட்டு புது தண்ணீரை பிடித்து வைத்தால் அடுத்த வேளை குளியல் ரெடி. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம்.


குளியலறை கலை என்ற பெயரில் மட்டும் 4,54,000 இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாத் பாம் நிறுவனம் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் தொகை 20 மில்லியன் டாலர்கள்.

கிளாசியர் அழகு கம்பெனி நிறுவனர் எமிலி வெய்ஸ், தினசரி 45 நிமிடம் வெந்நீர் குளியல் போட்டால்தான் சுகம் கிடைக்கிறது என்கிறார். அதுவும் இரவில் இப்படி குளியல் போடுகிறாராம்.


பாத்டப்பில் 8.4 அவுன்ஸ் அளவு கொண்ட 55 டாலர் விலைகொண்ட சோப்புக்குமிழ்களை உருவாக்கும் திரவத்தை வெய்ஸ் பயன்படுத்துகிறார்.

குளியல் பொருட்களுக்கான சந்தை 2023 இல் எப்படி இருக்கும் தெரியுமா?  36 பில்லியன் டாலர்கள். இதில் ப்ளூடூத் வசதி கொண்ட பாத்டப்பின் விலை எவ்வளவு தெரியுமா? 1950 டாலர்கள்.

குளியல் தொடர்பான திட்டத்திற்காக பதினைந்து ஆண்கள் நேர்காணல் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெண்கள் பற்றி அறிய பாத்டப்பில் குளியல் போட்டனர்.

நன்றி - க்வார்ட்ஸ் 

பிரபலமான இடுகைகள்